News
மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து உதவுங்கள்!
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலனோம்புகை நடவடிக்கைகள் குறித்தும் கண்டறிவதற்கு வாரத்தில் ஒரு முறையேனும் அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாவட்டங்களிலுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நேற்று (01) முற்பகல் கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்ற கேகாலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் வலியுறுத்தும், பிரதான 3 விடயங்கள்..!
நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்கள் முற்றாக நிராகரித்திருப்பதாகவும் உண்மையான ஜனநாயகம் பிரதிபலிக்கக் கூடியதான அரசியலமைப்பின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தியிருப்பதாகவும் அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க நேற்று புதன்கிழமை விசும்பாயவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். தற்போதுள்ள கட்சித்தாவல் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமெனவும், தேர்தலில் தோல்வி கண்டவர்கள் மாற்று வழிமூலம் பாராளுமன்றம் கொண்டுவரப்படுவது தடுக்கப்பட வேண்டுமெனவும் மக்கள் தெரிவித்திருக்கின்றனர். நாட்டின் சகல மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்தறியும்…
ඡන්දය ජනතා අයිතියක් – මහින්ද දේශප්රිය
– නිලුපුලී – ජුනි මස 01 දිනට යෙදුන ඡන්ද දායකයන්ගේ දිනය නිමිත්තෙන් “ඡන්දය ඔබේ අයිතියයි, කිසිදු ඡන්දහිමියෙකු අත්නොහැරෙන මැතිවරණ ක්රමයක්“ තේමාව යටතේ වයස අවුරුදු 18 සම්පුර්ණ කළ සියළුම දෙනා මැතිවරණ නාම ලේඛනයට තමන්ගේ නම ඇතුළත් කිරීමට කටයුතු කරන ලෙස මැතිවරණ කොමිෂමේ සභාපති මහින්ද දේශප්රිය මහතා මහ ජනතාවගෙන් ඉල්ලීමක් කර ඇත .එසේම සෑම නිවසකටම ඡන්ද හිමියන්…
தனிமனிதரின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: ஹர்ச டி சில்வா
தனியார் பஸ் போக்குவரத்து சபையின் தலைவர் கெமுனு விஜேரத்தின அவருக்கு வேண்டியதைப் போன்று பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை! 30 குடும்பங்களை இடம்பெயருமாறு கோரிக்கை
பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையால் 30 குடும்பங்களை சேர்ந்த 142 பேரை இடம்பெயருமாறு வலியுறுத்தியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இன்று தோட்ட நிர்வாகத்தால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி ஏற்பட்ட மண்சரிவின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் மகளும் பலியானதையடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினர் மேற்கொண்ட பரிசோதனையின் போது குறித்த தோட்ட மக்களை வெளியேறுமாறு முன்கூட்டியே அறிவித்துள்ள…
கண்டி-கொழும்பு அதிவேகப் பாதை திட்டத்தில் மாற்றம்
கண்டி-கொழும்பு அதிவேகப் பாதை திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாதை அமைக்கும் திட்டத்தில் உள்ள பகுதிகள் சிலவற்றில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் டீ.சீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதன் காரணமாக அதிவேகப் பாதை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது அதிகம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த பாதையில் பொத்துஎரயிலிருந்து கலகெதர வரையான பகுதியிலே மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாகவும், இந்தப் பகுதிகளில் உள்ள…
இலங்கை – சிங்கப்பூர் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவெடுக்கப்படும்!
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று சிங்கப்பூரின் வர்த்தக மற்றும்தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கடந்த புதன்கிழமை 1ஆம் திகதி கிங்ஸ்பெறி ஹோட்டலில் வைத்து இலங்கையின் சிரேஷ்ட அமைச்சர்களினை சந்தித்து உரையாற்றுகையிலேயே இதனைதெரிவித்தார். வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் வணிக வாய்ப்புக்களை ஆரம்பிப்பதுதொடர்பிலும் இரு தரப்பு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளைவலுப்படுத்தும் நோக்கிலும் அவரின்…
ඇමති රිෂාඩ්ගෙන් සිංහල ජනතාවට නිවාස
– නිලුපුලී – වවුනියාව ඉරට්ට පෙරියකුලම උතුරු ප්රදේශයේදී අද දින එනම් ( ජුනි 2) අසරණ වූ සිංහල පවුල් 25ක් සඳහා නිවාස ඉදිකිරීමට මුල්ගල තබන ලදී. මෙහිදී එම අවස්ථාවට සහභාගී වූ උතුරු පළාත්සභාවේ ජයතිලක මහතා ප්රකාශයක් කරමින් කියා සිටියේ උතුරේ පැවති යුද්ධයෙන් අවතැන් වී නිවාස විනාශ වීමෙන් සාමාන්ය ජීවිතයක් අහිමිව ගිය මෙම සිංහල ජනතාවට හිසට සෙවනක්…
சீமெந்தின் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு
சீமெந்தின் விலையானது 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று (1) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை நுகர்வோர் சேவைகள் அதிகார சபை வழங்கியுள்ளது. இதற்கமைய 870 ரூபாவாக காணப்பட்ட சீமெந்து ஒரு மூட்டையின் விலை 930 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 வகையான சீமெந்து நிறுவனங்களின் சீமெந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
අපදා ඇතිවූ ප්රදේශ වල තත්වය සොයා බලන ලෙස ඇමතිවරුන්ට ජනපති උපදෙස් දෙයි
– නිලුපුලී – පසුගිය දිනවල ඇදහැළුණු වර්ෂාව හේතුවෙන් විපතට පත් ජනතාවගේ අවශ්යතා මෙන්ම ඔවුන් වෙනුවෙන් සලසා ඇති සුබසාධන කටයුතු පිළිබඳ සොයා බැලීමට සතියකට වරක්වත් එම ප්රදේශවල සංචාරයක නිරතවන ලෙස ජනාධිපති මෛත්රීපාල සිරිසේන මහතා විසින් ඊයේ එනම් (ජුනි 01) පෙරවරුවේ කෑගල්ල නගර ශාලාවේ පැවති කෑගල්ල දිස්ති්රක් විශේෂ සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමට එක්වෙමින් ප්රකාශ කරන ලදි .එසේම නාය…
இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள்
– ஏ.எஸ்.எம்.ஜாவித் – இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள். அனர்த்தங்கள் என்பது யாருக்கும் சொல்லிக் கொண்டு வருவதில்லை இதன் காரணமாகவே மனிதன் உற்பட உயிரினங்கள் அனைத்தும் அதன் அகோரத்தினை அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்படுகின்றன. இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள். அனர்த்தம் என்பது பூகம்பமாகவோ, தீயாகவோ, வெள்ளம் மழை காரணமாகவோ அல்லது கடுங் குளிர் அல்லது பனிமூட்டம் காரணமாகவோ ஏற்படலாம். இவை காரணமாக பூமியில் வாழும் உயிரினங்களின் இயல்பு…
அமச்சருக்கும் சங்கத்திற்கும் அவசர சந்திப்பு
– பா.ருத்ரகுமார் – வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பில் சுமூகமான தீர்வைக் காணும் நோக்கில் சுகாதார அமைச்சர் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடன் இன்று (2) இரவு 9.30 இற்கு அவசர பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இந்த கலந்துரையாடலின் பின்னர் வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வைத்திய சேவை இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை (31) …
