News
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகவுள்ளார்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பிரதமர் அலுவலகலத்துக்கு வெளியிலிருந்து தனது மேற்படி முடிவை கமெரோன் அறிவித்திருந்தார். தள்ளாடும் கப்பலை, எதிர்வரும் வாரம் மற்றும் மாதங்களில் சீர் செய்ய எத்தனிக்கவுள்ளதாக கமெரோன் தெரிவித்துள்ளார்.(tm)
பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ள நிலையில் பிரிட்டிஷ் பவுண்ட், யூரோ, ஸ்ரேலிங் உள்ளிட்ட நாணயங்களின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக நேற்று அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் விலை சர்வதேச சந்தையில் 1.5 டொலராக உயர்ந்திருந்தது. இன்று முடிவுகள் வெளியாகத் தொடங்கி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும்…
எவன்காட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் கைது
சட்டவிரோத ஆயுத விநியோகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட எவன்காட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் குற்றபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று (23) இரவு காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்,மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாதாக குற்றபுலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. -zn-
வன்முறைக்கு பொதுபல சேனா முயற்சி – முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்
– ஏ.ஆர்.ஏ.பரீல் – மஹியங்கனையில் இடம்பெற்ற பௌத்த கொடி எரிப்பு சம்பவத்தையடுத்து பொதுபலசேனா அமைப்பு அளுத்கமை சம்பவம் போன்ற ஒன்றினை உருவாக்க முயற்சிப்பதாகவும் அப்பகுதி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் மஹியங்கனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஜாதிக பலசேனாவின் செயலாளருமான வட்டரக்க விஜித தேரர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடமும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர்கள் இருவரையும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு மஹியங்கனையில்…
நாட்டில் 50,000 ஹெரொயின் பாவனையாளர்கள்
இலங்கையில் ஹெரொயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 வரை உயர்ந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
வர்த்தக நிலையத்தில் தீ விபத்து : ஒருவர் பலி
மாரவில – முதுகடுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நபர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் குறித்த கட்டிடமும் சேதமடைந்துள்ளது. குறித்த நபர் குளிர்சாதன பெட்டியை பழுது பார்துக்கொண்டிருக்கும் போது, குளிர்சாதன பெட்டியின் காற்று அழுத்தி வெடித்ததன் காரணமாகவே தீ பரவியுள்ளது. இதன்பின்னர், காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கொட மனநல வைத்தியசாலையின் நோயாளியை காணவில்லை
அங்கொட மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் மர்மான முறையில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையின் பணியாளர்களின் துன்புறுத்தல்களை பொறுத்துகொள்ள முடியாமல் தனது மகன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் சந்தேக்கின்றனர். ஹிக்கடுவை – களுபே பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய லக்ஷித பன்துல விக்ரமசிங்க என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்டமையால் கடந்த 13 ஆம் திகதி அங்கொட மனநல வைத்தியசாலையில்…
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும்: வாக்கெடுப்பில் முடிவு
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர்.
வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றைய தினம் காலை இளவாளை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று திருமண செலவுக்காக மானிப்பாயில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர். இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கிகளிடமிருந்து…
ஹெந்தவிதாரண, ரணவீரவின் நடவடிக்கைகளில் சந்தேகம்
முன்னாள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் தற்போதைய அம்பாறை சிரேஷ்ட பொலிஸ்அ த்தியட்சகருமான டி.ஆர்.எல்.ரணவீர, முன்னாள் உளவுத் துறை பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோர் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலையை தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் முன்னெடுத்த சில நடவடிக்கைகள் பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது. இது குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே…
ஹெட்போனால் ஏற்படும் விபத்துகள் அதிகம்
வாகனத்தை செலுத்தும் போது அலைபேசி மற்றும் ஹெட்போன் ஆகியவற்றை பாவிப்பதன் காரணமாக விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் வருடாந்தம் ஏற்படும் திடீர் விபத்துகளின் எண்ணிக்கை 37,000 எனவும் அதில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ‘அவசர விபத்துக்களை தவிர்த்தல்’ எனும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
30 ஆம் திகதிக்கு முன்னர் முடிவு எடுப்போம்
உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியன்று நிறைவடையும். அந்த மன்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவெடுப்பேன் என்று மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி கேட்ட குறுக்கு கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறுக்கு கேள்வியை எழுப்பிய எம்.பி, எதிர்வரும் 30ஆம் திகதியன்று நிறைவடையவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்படுமா? அல்லது…
