News
உதயகம்மன்பிலவால் வெட்கப்படும் ஜாதிக ஹெல உறுமய
பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதயகம்மன்பில போன்ற திருடர்கள் ஜாதிக ஹெல உறுமயவில் கட்சி உறுப்பினர்களாக இருந்தமைக்கு வெட்கப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் உதயகம்மன்பில இதற்கு முதலிலும் சிறைத்தண்டனை அனுபவித்த நபர் எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 2000ஆம் ஆண்டுக்கு முன் உதயகம்மன்பில என்ற ஒரு அரியல்வாதி இருப்பதே இலங்கை மக்களுக்கு தெரியவில்லை என்றும் ஜாதிக, ஹெல உறுமயவே அவரை இலங்கையின் அரசியல்வாதியாக அறிமுகப்படுத்தியது என்றும் ஹெல…
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வைத்திய பரிசோதனை
நாடு முழுவதும் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிர்காலத்தில் முதலுதவிப் பயிற்சி வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். வீதி விபத்துகளால் தினமும் 8 பேர் பலியாவதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரில் அதிகளவானோர் முச்சக்கர வண்டிகளில் கொண்டுவரப்படுவதால் முதலுதவி பயிற்சிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுங்க சட்டத் தயாரிப்பு: பொது மக்களும் யோசனைகளை முன்வைக்கலாம்
150 வருடங்கள் பழமையான சுங்க கட்டளைச் சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவது தொடர்பிலான யோசனைகளை முன்வைக்க பொது மக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத் தயாரிப்புக்காக செயற்குழு, தொழிநுட்பக் குழு மற்றும் சட்டமூலக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் தங்களின் யோசனை முன்வைக்க ஜூலை மாதம் 11ஆம் திகதி வரை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலத்திற்கு முன்னர் தங்களின் யோசனையை நிதி அமைச்சிடம் எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் என, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இது…
அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கரிப்பு?
அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுவதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி அரசியல் கட்சியின் பிரதான உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் மேலதிக செயலாளர், ஐடிஎன் தலைவராக நியமனம்
சுயாதீன தொலைக்காட்சி (ஐடிஎன்) வலையமைப்பின் தலைவராக சமன் அதாவுடஹெட்டி இன்று முதல் கடமையாற்றவுள்ளார். இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேலதிக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்
நாடுமுழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தென் மாகாணம், மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதி மற்றும் மேற்கு, தெற்கு கடற்பரப்பில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் மத்திய, தெற்கு, சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களில் தொடர் மழைப்பெய்ய வாய்ப்புள்ளதெனவும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
புகைப்படத்தை விட்டுச் சென்ற கொள்ளையன்
கிரிவத்துடுவ கல்கந்தே பிரதேசத்தில் வீட்டில் இருந்த இரண்டு பெண்களின் முகம், கை, கால்களை கட்டிவிட்டு, 5 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன், துணி நெய்யும் இயந்திரத்துக்கு பயன்படுத்தப்படும் பெறுமதியான நூல்களையும் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுள்ளனர். இந்த கொள்ளையில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளது. இதேவேளை, கொள்ளையிட வந்தவர்களில் ஒருவர், தனது புகைப்படத்தை சம்பவ இடத்தில் தவறவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இது புதுசு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடங்களில் இருந்த ஹேண்ட்பவர் ( சுத்தப்படுத்தும் உபகரணம்) அகற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக டொயிலட் டிசு, சகல மலசலகூடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. நீரை பாவிப்பதன் காரணமாக விமான நிலையத்தில் உள்ள மலசலகூடம் எந்தநேரமும் ஈரமான நிலையில் காணப்பட்டது. அதனால், சிங்கபூரில் நடைமுறையில் உள்ளதைபோல டொயிலட் டிசு, சகல மலசலகூடங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, சுத்தப்படுத்தும் முறை தொடர்பில் அதிக அவதானம் செலுத்தும் இலங்கையர்கள், இந்த புதிய நடைமுறை காரணமாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்….
மின்னல் தாக்கங்களினால் 79 பேர் பலி: இந்தியாவில்!
இந்திய மாநிலங்களான பீஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசத்தை தாக்கிய மின்னல்களினால் குறைந்தது 79 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஹாரில் 53 பேர் கொல்லப்பட்டதுடன், கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில் பத்து பேர் கொல்லப்பட்டிருந்ததுடன், மத்திய பிரதேசத்தில், குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (21) பெய்த கடுமையான மழையினுள், தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே பெரும்பாலானவர்கள் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகால மழையின்போது இந்தியாவில் மின்னல் தாக்குதல்கள் வழமை என்றநிலையில், தேசிய குற்றப் பதிவுகள் முகவராண்மையின்படி, 2005ஆம்…
பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பதவியுயர்வு
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிவழங்கப்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையானது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் (23) கூடவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் போது இதற்கான அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். இதன்போது கொழும்பு – வடக்கு பிரதேச பிரதி பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன உள்ளிட்டஅதிகாரிகள் 7 பேரே பிரதி…
அம்பாறையில் அ.இ.ம.கா.வின் இப்தார் நிகழ்வு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள அம்பாறை மாவடடத்திற்கான இப்தார்நா ளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய (பழைய மஹருஸ் சம்ஸ் பாடசாலை) மைதானத்தில் நடைபெறவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. குழுத்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாத்…
