News
இலங்கையின் கடல் வலயம் 2020 அதிகரிக்கும்!
இலங்கைக்கு சொந்தமான கடல் வலயம் 2020ம் ஆண்டளவில் மேலும் அதிகரிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சர்வதேச கடற்பரப்பிற்கு சொந்தமான கடல் பகுதி இலங்கைக்கு சொந்தமாகவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையை போன்று 60 மடங்கு வரையான கடற்பரப்பு தற்போது இலங்கைக்குச் சொந்தமாக உள்ளது எனவும், எதிர்காலத்தில் மேலும் இலங்கையைப் போன்று 23 மடங்கு கடற்பரப்பு சொந்தமாகும் எனவும் அமைச்சு கூறியுள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாகவும்,…
கடற் பிரதேசங்களில் பலத்த காற்று வீசும் சாத்தியம்!
புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையுள்ள கடற் பிரதேசங்களில் இன்று பலத்த காற்று வீசும் சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் போது சில பகுதிகளில் 60 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைமை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் சற்று அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.
80 களில் ஒரு சஹர் (Poem)
-நிஷவ்ஸ் – பைவ் ட்ரம்ஸ் அலாம் பதற்றமாய் அடிக்கும். உம்மாதான் எழும்பனும் உள்ளுக்குள் ஆறுதல். படுத்த பாய் எடுத்து பக்குவமாய்ச் சுற்றி விட்டு வெளியே தொங்கும் வெள்ளை டியூப் லைட்டை மெல்லப் போட்டு விட்டு மெதுவாகக் கிணற்றில் அள்ளும் நீர் சத்தம் அடுத்துக் கேட்கும். திலாந்தின் ஓசைகள் திரும்பத் திரும்ப கலந்து காற்றில் காதுகளில் விழும். ராத்தா அடுத்தெழுந்து ராவு ஆக்கிய கறி எடுத்து அடுப்பில் வைத்து அடியில் கொள்ளி போட்டு கொளுத்தும் ஓசை கூதலில் கலந்து…
பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது – ஃபிரான்ஸ் வங்கி ஆளுநர்
பிரிட்டன் வெளியேற்றத்திற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது என பேங்க ஆஃப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் ஃபிரான்சிஸ் வில்லேராய் டி கல்ஓ தெரிவித்துள்ளார். எல்லை கடந்த சேவைகளில் வங்கி பாஸ்போர்ட் அமைப்புகளை அணுக, ஒருங்கிணைந்த சந்தையில் அனைத்து விதிகளையும் பின்பற்றி பிரிட்டன் உறுப்பினராக இருப்பதை சார்ந்தே இருக்கும் என வில்லேராய் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் இந்த வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும், ஆனால், அந்தத் தாக்கங்கள் பிரிட்டனுக்கு…
‘மக்களது கருத்துக்களைக் கொண்டே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்’
பெறப்பட்டுள்ள மக்களது கருத்துக்களைக் கவனத்திற் கொண்டு எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி வித்தியாலோக மகா பிரிவெனாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “பொதுமக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே அன்றி அதற்குப் புறம்பான எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாரில்லை. புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதன் மூலம் இந்நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம்…
ரஷ்ய ரோபோ இரு தடவைகள் தப்பிச் சென்றதால் செயலிழக்கச் செய்வதற்குத் திட்டம்
நினைவாற்றலும் கற்றுக்கொள்ளும் திறமையும் கொண்ட ரோபோவொன்றை செயலிழக்கச் செய்வது குறித்து ரஷ்ய விஞ்ஞானிகள் சிந்திக்கின்றனராம். இந்த ரோபோ ஆய்வு கூடத்திலிருந்து இரு தடவைகள் தப்பிச் சென்றமையே இதற்கான காரணம். த புரோமோபோட் ஐ.ஆர்.77 (The Promobot IR77) என பெயரிடப்பட்ட இந்த ரோபோ அதிக செயற்கை மதிநுட்பம் (ஆர்ட்டிபிஷல் இன்டலிஜென்ட்) கொண்டது. தனது அனுபவம் மற்றும் சுற்றாடல் நிலைமைகளிலிருந்து கற்றுக்கொள்ளும் திறமையையும் அதிக நினைவாற்றலையும் கொண்ட ரோபோ இது. இந்த ரோபோ விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட அதிக புத்திசாலித்தனமாக…
“இஸ்லாத்தை அறிவோம்”
-பாத்திமா மைந்தன்- எல்லாப் புகழும் இறைவனுக்கே ‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்ற சொல்லைப் போல அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பொருள் செறிவுள்ள வார்த்தைகள் பல உள்ளன. எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதைத் தொடங்குவதற்கு முன்பு, முஸ்லிம்கள் சொல்லும் வார்த்தை, ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.’ இதற்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன் என்று பொருள். ஆச்சரியத்தைத் தரக்கூடிய பொருளைப் பார்க்கும்போது சொல்ல வேண்டிய சொல், ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் மிகவும்…
மன்னார் பெரியகடையில் அமைச்சர் றிஷாத்
யுத்தத்தினால் வீடுகளை இழந்து, இருப்பிடமின்றி வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே அரசு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பெரியகடையில், மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இன்று (25/06/2016) பிரதம அதிதியாகப் பங்கேற்று அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்…
திருமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு!
திருகோணமலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யுவுள்ள இப்தார் நிகழ்வுகள் எதிர்வரும் 29 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியாதிருந்த ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் கடப்பாட்டுடன் அரசாங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக ஆதரவளித்த சட்டத்தரணிகளுடன் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை…
சலாவ பிரதேச கழிவுகளை அகற்ற 22 இலட்சம் ரூபா
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் பிரதேசத்தில் ஏற்பட்ட கழிவுகளை அகற்றும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் வேண்டுகோளுக்கிணங்க மேல் மாகாண நிர்வாக திணைக்களத்தினால் குறித்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு கூறியுள்ளது. அதன்படி இத்திட்டத்திற்காக 22 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக பெகோ மற்றும் டிப்பர் வாகனங்களை பயன்படுத்தி நாளொன்றுக்கு 50 டொன் கழிவுகள் அகற்றப்பட உள்ளதாக மாகாண மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு கூறியுள்ளது.
அரநாயக்கவில் மீட்கப்பட்ட உடற்பாகங்களால் சிக்கல்
அரநாயக்கவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இன்னும் கேகாலை பெரிய வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த உடற்பாகங்கள் வைத்தியசாலையில் பிரதே அறையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த உடற்பாகங்கள் பிரேத அறையில் குளிரூட்டப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி டொக்டர் ரமேஷ் அழகியவன்ன கூறுகின்றார். இதன்காரணமாக வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
