News
ஜெர்மனியிலுள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை
ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை அங்குள்ள தூதரகத்தின் ஊடாக விசாரித்து வருவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
மினுவாங்கொடை நீதவான் பணி நீக்கம்
மினுவாங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.எம்.தம்மிக்கா லங்கசிங்க நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
துருக்கி இராணுவப் புரட்சி! சதிகாரர்கள் யார்?
அரபு வசந்தம் என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் அரசுகள் கவிழ்க்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் பொம்மை அரசுகள் நிறுவப்பட்டிருப்பதை நாம் அறிவோம். துனிசியா ,லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால்,சிரியாவில் அரபு வசந்தம் தொடங்கப்பட்டுள்ளபோதிலும், அது 5 வருடங்களாக முடிவின்றித் தொடர்கின்றது. அந்த வரிசையில் இப்போது துருக்கியும் சிக்கியுள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் துருக்கி இப்போது இராணுவ சதிப் புரட்சி ஒன்றில் சிக்கி உடனே மீண்டுள்ளது.இராணுவப் புரட்சி ஒன்றும்…
4 வியாபாரிகள் கைது
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 4 வியாபாரிகள் பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய முயன்ற குற்றத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!
மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் கல்லூரியாக நடத்திச் செல்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 7 அரச பல்கலைக்கழக வைத்திய பீடங்களின் பீடாதிபதிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல போன்றவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் கல்லூரியாக மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இது…
டீசல் பௌசர் விபத்து : ஒருவர் காயம்
கொழும்பு – பதுளை பிரதான வீதியின், ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் டீசல் பௌசர் ஒன்று இன்று முற்பகல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காயமடைந்த பௌசர் வண்டியின் சாரதி தியத்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த டீசல் பௌசர் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டீசலை அகற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் விமானப்படையினர் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தெற்கு அதி வேக நெடுஞ்சாலையின் புதிய பஸ் கட்டண விபரம் அறிவிப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் புதிய பஸ் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இக்கட்டணங்கள் அமுலுக்கு வரவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கட்டண விபரம்: மஹரகம – காலி: ரூபா 390 மஹரகம – மாத்தறை: ரூபா 470 கடுவெல – மாத்தறை : ரூபா 490 கடவத்தை – மாத்தறை : ரூபா 510
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை
– சுஐப் எம்.காசிம் – சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனின் தலைமையில் இன்று காலை (22/07/2016) மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருதுக் கிளை முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் உட்பட அக்கிராமத்தின் சமூகநல இயக்கங்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் விசேட அழைப்பை ஏற்று அங்கு பிரசன்னமாகிய அமைச்சர் பைசர் முஸ்தபா…
ஷாக்கீர் நாயக்கின் உதவியாளர் மும்பையில் கைது
-மும்பை – ஷாக்கீர் நாயக்கின் உதவியாளர் அர்ஷித் குரேஷியை மும்பையில் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் உள்ள இளைஞர்களை மூளைச்சலைவை செய்து அவர்களை ஐ.எஸ் அமைப்பில் சேர ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டதாக ஆர்ஷித் குரேஷி மீது சந்தேகம் தெரிவித்து பயங்கரவாத தடுப்பு படை மற்றும் கேரள போலீசார் இணைந்து இரவு மும்பையில் சோதனை நடத்தி ஆர்ஷித் குரோஷி கைது செய்யப்பட்டார். சதித்திட்டம் தீட்டுதல், இரு குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல் ஆகிய பிரிவின் போலிசார் ஆர்ஷித் குரோஷி…
மட்டக்களப்பில் 18,000 குடும்பங்கள் போசனை மட்டத்தினை எட்டவில்லை
மட்டக்களப்பு மாவட்டத்தில் 18,000 குடும்பங்கள் ஏறக்குறைய 10 வீதமான குடும்பங்கள் போசனை மட்டத்தினை அடையாதவர்களாகக் காணப்படுகிறார்கள் அவர்களை அந்த நிலையிலிருந்து உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வியாழக்கிழமை (21) தெரிவித்தார். இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கான பாடசாலை மாணவர்களின் போசாக்குத் தரத்தினை உயர்த்துவது தொடர்பான கருத்தரங்கில் தலைமையேற்று உரையாற்றும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கருத்தரங்கில்…
கொழும்பில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு
கொழும்பு அண்மித்த சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய பொரலஸ்கமுவ நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், கோட்டை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், மஹரகம, கோட்டை கொஸ்வத்த, பத்தரமுல்லை, மாலபே, ஜயவடனகம, தலவத்துகொட, ஹோகந்தர, கலபலுவாவ ஆகிய பகுதிகளிலேயே நாளை நண்பகல் 12 மணியிலிருந்து தொடர்ந்து 12 மணித்தியால குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தியவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதால் குறித்த…
29 பேருடன் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் மாயமானது
சென்னையில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஏஎன்-32, இன்று காலை சென்னை தாம்பரத்திலிருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது. போர்ட்பிளேயருக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தின் தகவல் தொடர்பு காலை 8.40 – 9 மணிக்கு துண்டிக்கப்பட்டு விமானம் மாயமாகி உள்ளதாக அறிவிக்கபடுகிறது. நடுவானில் சென்றுகொண்டிருந்த விமானத்தில் 29 விமானப்படை வீரர்கள் பயணித்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக 8.12 மணிக்கு ராடர் கருவியில் தெரிந்தது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வங்ககடலுக்கு மேலே சென்ற போது…
