News
ஈரானிடமிருந்து மீண்டும் மசகு எண்ணை
ஈரானிடமிருந்து மீண்டும் மசகு எண்ணையை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஈரானிய அமைச்சர் மற்றும் இலங்கை பெற்றோலியம் மற்றும் பெற்றொலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஈாரானுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடை நீக்கப்பட்டதனால் ஈரானில் இருந்து மசகு எண்ணை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கு தமிழர் மாநாட்டில்: மலேசிய பிரதமர்
கோலாலம்பூரில் நடந்த கொங்கு தமிழர் மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கலந்து கொண்டு பேசினார். கோலாலம்பூரில் நடந்த கொங்கு தமிழர் மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கலந்து கொண்டு பேசினார். சுமார் 3 கோடி மக்கள் தொகையை கொண்ட மலேசியாவில் 8 சதவீதம் பேர் இந்தியர்கள் (தமிழர்கள்) ஆவர். இதில் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 2 லட்சம் தமிழர்களும் அடங்குவர். இந்த பிரிவினர் சார்பில் மலேசிய கொங்கு தமிழர் அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது….
ஏழை விவசாயிகளின் புன்சிரிப்பு நல்லாட்சிக்கான சமிக்ஞையாகும் – அமீர் அலி
-நாச்சியாதீவு பர்வீன் – ஏழை விவசாயிகளின் புன்சிரிப்பே நல்லாட்சிக்கான சமிக்ஞையாகும். இந்த நல்லாட்சி அரசாங்கம் விவசாயிகளின் நலன்கருதி செயற்படுகின்றது என்பதனை நீர்ப்பாசன இணைப்புத்திட்டம் நிறுவி நிற்கிறது. என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கூறினார். 24/07/2016 ஞாயிற்றுக்கிழமை சித்தான்டி,சின்னவெளி, சின்னாளன்வெளி கண்டத்தினால் ஏற்பாடு செய்த மாபெரும் அறுவடை நிகழ்வில் கெளரவ அதிதியா கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் இந்த நல்லாட்சியை…
ஜம்இய்யத்துல் உலமா தலைவராக மீண்டும் ரிஸ்வி முப்தி!
மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகத் தெரிவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (24.07.2016) பி.ப. கண்டி லைன் பள்ளிவாசல் மேல் மாடியில் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்திலேயே இத்தெரிவு இடம்பெற்றது. சுமார் 25 மாவட்டங்களிலுள்ள மாவட்டக் கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள் ஆகியோரே மத்திய சபையின் அங்கத்தவர்கள் ஆவர். சுமார் 75 பேர்கள் கொண்ட இச்சபையிலிருந்து இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 25 பேர்கள் நிறைவேற்றுக்…
මෙවර A/L විභාගයේදී ජංගම දුරකථන, ‘ස්මාර්ට් වොච්’ ළඟ තබා ගැනීමෙන් 5 වසරක විභාග තහනමක්
– නිලුපුලී – මෙවර අධ්යයන පොදු සහතික පත්ර උසස් පෙළ විභාගයේදී ජංගම දුරකථන, ‘ස්මාර්ට් වොච්’ ඇතුළු විද්යුත් උපකරණ භාවිත කරමින් හෝ ළඟ තබාගනිමින් විභාගවලට පෙනී සිටින අයදුම්කරුවන්ට පස් වසරක විභාග තහනමක් පැනවීමට විභාග දෙපාර්තමේන්තුව තීරණය කර ඇති බව විභාග කොමසාරිස් ජනරාල් ඩබ්ලිව්. එම්. එන්. ඡේ. පුෂ්පකුමාර මහතා පැවසීය. එවැනි අයදුම්කරුවන් විභාග දෙපාර්තමේන්තුවේ අසාදු ලේඛනගත කරන බව…
රැකියා විරහිත ආයුර්වේද උපාධිධාරී වෛද්යවරුන් පාගමනින් මුදල් අමාත්යාංශයට
– නිලුපුලී – රැකියා විරහිත ආයුර්වේද උපාධිධාරී වෛද්යවරුන්ට රැකියා ලබාදෙන ලෙස ඉල්ලා සිදුකරන සත්යග්රහ ක්රියාමාර්ගයට නිසි ප්රතිචාර නොමැති නිසා මුදල් අමාත්යාංශයට ගොස් ගැටලුවට විසඳුම් සොයා ගැනීමට කටයුතු කරන බව රැකියා විරහිත උපාධිධාරී ආයුර්වේද වෛද්යවරුන්ගේ සංගමය හා 24 වන දින පැවැති මාධ්ය සාකච්ඡාවකදී එම සංගමයේ උපලේකම් මලිත් රත්නවීර මහතා පවසා සිටියේය. රැකියා ලබාදෙන ලෙස ඉල්ලා බොරැල්ල…
2017 අයවැය සඳහා අමාත්ය මණ්ඩල අනුමැතිය
– නිලිපුලී – 2017 අයවැය පිළියෙල කිරීම සඳහා මුදල් අමාත්ය රවි කරුණානායක මහතා විසින් ඉදිරිපත් කළ යෝජනාවට අමාත්ය මණ්ඩල අනුමැතිය හිමිව තිබේ. වසර 2030 වන විට ළඟා කරගත යුතු තිරසර සංවර්ධන ඉලක්ක 17 සපුරා ගැනීමට අවධානය යොමු කරමින්, රාජ්ය වියදම්වල කාර්යසාධනය පදනම් කරගත්‘කාර්යසාධන සංස්කෘතියක්’ ඇති කරමින් ශුන්ය පාදක අයවැය ක්රමවේදයක් යටතේ, 2017 වර්ෂය සඳහා වන…
உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம்
உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் மலேரியா நோய் தொடர்பான நிலைமை குறித்து ஆராய்ந்து இலங்கை மலேரியா நோயை ஒழித்த நாடு என்பதை உறுதிப்படுவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்க இந்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை வரும்…
இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை
இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை செய்யும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சில நிறுவனங்களினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் சுகீஸ்வர குணரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டனின் முக்கிய கடைத் தொகுதி ஒன்றில் இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இளநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு சில தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு…
ஐ.தே.க.வுடன் இணைய திகாம்பரம் இணக்கம்
-ஆர்.ரமேஸ் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம், ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்துக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குடும்பமே படுகொலை: குடும்ப தலைவன் கைது
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக்கதின் பேரின் அக்குடும்பத்தின் தலைவனை கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே…
காற்று மாசு சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு!
நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதை தடுக்க காற்றில் ஏற்படும் மாசுககளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார். இக்கருவி 23 அடி உயரம் கொண்டது. மிக சிறிய…
