News
மஹிந்தவுக்குச் சங்கடம்
மேனகா மூக்காண்டி காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, அரசாங்கத்தினால் அலுவலகமொன்று திறக்கப்படுவது உறுதி. இவ்வாறு காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதென்பது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கலாம். உண்மைகள் வெளியாகிவிடும் என்ற பயத்தினாலேயே அவர், அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார்’ என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன கூறினார். காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவது கட்டாயத் தேவையாகும். அவர்கள் எவ்வாறு காணாமற்போனார்கள், அவ்வாறு அவர்கள் காணாமற்போனமைக்கு காரணம் என்ன, அவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை…
தெஹிவளை பள்ளிவாசலின், அனுமதி ரத்து
தெஹிவளை பாத்யா மாவத்தையில் அமைந்துள்ள பெளசுல் அக்பர் பள்ளிவாசலின் கட்டிட நிர்மாணத்திற்காக தெஹிவளை கல்கிசை மாநகர சபையினால் வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை இரத்துச் செய்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினால் இதனை இரத்துச் செய்துள்ளதாக தெஹிவளை கல்கிசை மாநகர சபை ஆணையாளருக்கு அறிவித்துள்ளது. தெஹிவளை பாத்யா மாவத்தையில் வீடொன்றினுள் முஸ்லிம் பள்ளிவாசல் இயங்கி வருவதாக அப்பிரதேச மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை…
லக் சதொச நிறுவனத்தின் முகாமையாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்
கொழும்பு தெற்கு பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரேமலால் ரணகல லக் சதொச நிறுவனத்தின் அபிவிருத்தி முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பிரதி பொலிஸ்மா அதிபருக்கு மாதாந்தம் 60,000 சம்பளம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மஹிந்தவின் ஆட்சியின் போது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு, பிரேமலால் ரணகல மிகவும் பங்குவகித்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டவராகும். மேலும் ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கிலும் இவரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், ரோசி சேனாநாயக்கவின் கூட்டத்தை குழப்புவதற்கும் இவர் துணை…
ஜப்பானில் இலங்கையின் வர்த்தக கண்காட்சி
ஜப்பானில் இலங்கையின் வர்த்தக கண்காட்சியானது 12ஆவது தடவையாகவும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோ நகரில் இந்த கண்காட்சியானது செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக ஜப்பானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இரண்டு நாடுளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே இதன்நோக்கம் என இலங்கை வர்த்தக சங்கம் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியன இணைந்து தெரிவித்துள்ளன. மேலும், இந்த கண்காட்சி தொடர்பான மேலதிக தகவல்களை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தொலைபேசி…
கைப்பற்றப்பட்ட கொக்கேய்னின் மொத்த, பெறுமதி 4500 மில்லியன் ரூபா (படங்கள்)
பேலியகொடை, கொள்கலன் களஞ்சிய தொகுதியில் மொத்தம் 300 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. கொள்கலன் களஞ்சிய தொகுதியிலுள்ள சந்தேகத்திற்குரிய இரண்டு கொள்கலன்களில் இருந்து கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரேஸிலில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் இருந்தே கொக்கேய்ன் கைற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருளின் பெறுமதி 4,500 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல்…
பொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்புமே நல்லிணக்கத்திற்கான வழி!
நாட்டிலிருந்து வறுமையை ஒழிப்பதும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதுமே இலங்கையின் கொள்கை எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அதுவே நாட்டில் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கான வழி என்றும் தெரிவித்துள்ளார். போர்த்துக்கல், அயர்லாந்து, மெக்சிக்கோ மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வு நேற்று (21) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கை தேயிலை உலகெங்கிலும் பிரசித்திபெற்றுத் திகழ்வதாகத் தெரிவித்த மெக்சிக்கோ…
வாட்ஸ் ஆப் க்கு விதிக்கப்பட்ட திடீர் தடை
பிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலிக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் 10 கோடிக்கும் அதிகமானோர் தகவல் பரிமாற முடியாமல் அவதிக்குள்ளாகினர். வாட்ஸ் ஆப் பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலியை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் பிரேசில் நாட்டில் நடந்த ஒரு…
ஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணையவசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்
முழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் மூலம், வானிலிருந்து இணையதள வசதிகளை ஒளிக்கீற்று மூலம் அனுப்ப முடியும் என நம்பப்படுகின்றது. தற்போது, அந்த ஆளில்லா விமானமானது அமெரிக்காவில் தனது முதல் சோதனைப் பயணத்தை முடித்துள்ளது. பிரித்தானியாவின் கட்டுமானத்தில் உருவாகி வரும் பேஸ்புக்கின் இந்த ஆளில்லா விமானமானது சுமார் 90 மணி நேரம் வானில் பறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், பல பில்லியன் வாடிக்கையாளர்களின் இணைய தேவையினை பூர்த்தி செய்ய, வாரக்கணக்கில் இந்த இணைய விமானத்தை…
இலங்கை தொழின்மையாளர்களுக்கு, மலேசியாவில் பல்வேறு தொழில் வாய்ப்புகள்
இலங்கைத் தொழின்மையாளர்களுக்கும் பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கும் மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை வழங்க மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உடன்படிக்கை இவ்வருட இறுதியில் இருநாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்படவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசிய பிரதிப் பிரதமர் அஹமட் சஹீட் ஹமீட் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மலேசியாவுக்கான ஒரு உத்தியோகபூர்வ…
நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய நிதியமைச்சரினால் உயர்மட்டக் குழு நியமனம்
-சுஐப் எம்.காசிம் – அம்பாறை மாவட்ட நெசவுத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் உயர்மட்டக்குழு ஒன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று மாலை (21) நியமித்தார். அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் அமபாறை நெசவுத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து விளக்கியதன் பிரதிபலனாக நேற்று மாலை நிதியமைச்சர ரவி கருணாநாயக்க தனது அமைச்சுக் கட்டிடத்தொகுதியில் அமைச்சர்கள், அம்பாறை மாவட்ட…
அம்பாறை கரும்பு உற்பத்தியாளர்கள் பிரச்சினைகள் ஆராய்வு!
-சுஐப் எம் காசிம் – அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (28) நிதியமைச்சில் மீண்டும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவின் தலைமையில் இன்று (21) மாலை 9நிதியமைச்சுக்கட்டிடத் தொகுதியில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், தயாகமகே பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் கரும்பு உற்பத்தியாளர்கள் ஹிங்குரான சீனிக்கூட்டுத்தாபனத்தை நிர்வகிக்கும் கல்லோயா பெருந்தோட்டக் கம்பனியினர் தமக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகள் குறித்தும் கரும்புப்பயயிர்செய்கையில் தாங்கள்…
ஐரோப்பிய நாடுகளில் 661 இலங்கையர்கள் உயிரிழப்பு
கடந்த 5 வருட காலப்பகுதியினுள் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு காரணங்களால் 661 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்சத சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வாய்மூல கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்த நிலைமை தொடராதிருப்பதற்காக ராஜதந்திர மட்ட செயற்பாடுகளை சக்திமயப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, இலங்கையில் சில தரப்பினர் இனவாதத்தை தவிர வேறு எதனையும் வைத்து அரசியல் நடத்த முடியாதநிலையில்…
