News
டொனால்ட் டிரம்பிற்கு ஹங்கேரி பிரதமர் ஆதரவு
முதல் ஐரோப்பிய யூனியன் தலைவராக ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக…
கள்வர்களுக்கு இடமளியேன்: பிரதமர்
-மொஹொமட் ஆஸிக் – கடந்த அரசாங்கத்தின் ஊழல் பேர்வழிகளின் கூக்குறலால் நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்திதி திட்டங்களை இடை நிறுத்த முடியாது என்றும், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஐந்துவருடங்களுக்கு பயணிக்கும், அதனை கவிழ்ப்பதற்கு கள்வர்களுக்கு இடமளிக்கமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கண்டி செங்கடகல தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியக்கு புதிய அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு, கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஆட்சியில் எதனை…
அமெரிக்க விசேட கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!
அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பலான யு.எஸ்.எஸ். நியூ ஒர்லியன்ஸ் இன்று இலங்கை வரவுள்ளது. இலங்கைக் கடற்படையுடனான இருதரப்பு உறவுகளை அதிகரிக்கவும், அமெரிக்காவின் ஆதரவு மற்றும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு பயிற்சிகளை அளிப்பதற்காகவுமே அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகம் வரவுள்ளது. இதுதொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “21ஆம் நூற்றாண்டு, பல்வேறு வழிகளிலும் இந்தோ -பசுபிக் நூற்றாண்டாக இருப்பதாக வும், தமது மூலோபாய அமைவிடத்தின் மூலம் இலங்கை நல்ல நிலையில்…
தேவையான நேரத்தில், இந்தியாவுக்கு திரும்புவேன் – ஜாகிர் நாயக் பேட்டி
தேவையான நேரத்தில், இந்தியாவுக்கு திரும்புவேன் -ஜாகிர் நாயக் பேட்டி..! `Modi only Indian PM to visit so many Muslim countries in two years … I am for him if he works for Hindu-Muslim unity’ Mumbai-based Islamic tele-evangelist Zakir Naik is in the eye of a storm, after being named as the inspiration behind terrorists who attacked the Holey…
தொலைபேசி + ஸ்மார்ட் கைக்கடிகாரத்துடன் வந்தால் A/L பெறுபேறு ரத்து
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனினும், பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் வைத்திருந்தால் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரீடசாத்திகளிடம் இருந்து கண்டு பிடிக்கப்படும் கையடக்கத்…
சர்வதேசத்திடம் மண்டியிடோம்!
உள்ளகப்பொறிமுறை ஊடாகவே பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும், சர்வதேசத்திடம் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் மறைமுக அடக்குமுறை தொடர்பில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கொண்டு வந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மின்சாரக் கதிரையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை காப்பாற்றி விட்டோம். சர்வதேசத்திடம் நாம் மண்டியிட மாட்டோம் என…
இணைய பாவனையில் தகாத வார்த்தைப் பிரயோகமா.. இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்
இணையத்தளம் மற்றும் கைத்தொலைபேசிகளின் ஊடாக தவறான பயன்பாடு மூலமோ அல்லது பாலியல் தொல்லைகளோ வேறு முறையில் பாலியல் சேட்டைகளோ மேற்கொள்ளப்படின் தகுந்த நடவடிக்கை எடுக்கும் முகமாக முறைப்பாடினை பதிவு செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 0773220032 எனும் கைத்தொலைபேசி இலக்கத்தினூடாக குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். இன்னும் குறித்த சேவையானது 24 மணித்தியாலங்களும் இயங்கிக் கொண்டிருக்கும் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. மேலும், தமக்கு கிடைக்கப்பெறும் அசௌகரிய…
பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது
புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் போது பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காராம விகாரையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இன, ஜாதி,மத பேதங்களை புறந்தள்ளி விட்டு ஒத்துழைப்புடன் நல்லிணக்கமாக செயற்படும் காலம் வந்துள்ளது. இலங்கை தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாக மாறியுள்ளது. நான் பாடசாலை செல்லும் போது நான் விளையாடிய அணியில் உப தலைவர் ஒருவர் இருந்தார். அவர்…
கை, கால்கள் இல்லாமல் வாழும் ரஹ்மா!
நைஜீரியா நாட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை ரஹ்மா அருமா, பிறந்து ஆறு மாதத்தில் மர்மமான நோய் அறிகுறியுடன் அவதிப்படுவதை கவனித்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மர்மநோய் அவரது உடல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதித்தது. தற்போது சுமார் 20 வயதை அடைந்தாலும் ரஹ்மா கை, கால்கள் இல்லாமல் அவரது உடல் அமைப்பு மிகச் சிறியதாக ‘மரப்பாச்சி’ பொம்மை போல் இருக்கிறது. தனது எல்லா தேவைகளுக்கும் பெற்றோரின் உதவியை நாடும் நிலையில் அவர்…
பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷியாவுக்கு தடைவிதிக்க வேண்டும்: இங்கிலாந்து
ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷியா சிக்கியதையடுத்து, பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க அந்நாட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது. ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்தில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்நாட்டு அரசே இதற்கு அனுமதி அளித்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் 68 பேர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்த அப்பீலையும் சர்வதேச…
யாழ் பல்கலையில் இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25ம் திகதி ஆரம்பம்!
யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப் பீட பரீட்சைகள் 25ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் கல்விச் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் விரைவாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். வரும் திங்கட்கிழமை கலைப்பீடம், முகாமைத்துவ வணிக பீடம் உள்ளிட்ட சில பீடங்களில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியுமா என நேற்று பீடாதிபதிகளுடன் ஆராயப்பட்டதாகவும் இதற்கு மேலும் சில நாட்கள் பொறுத்திருந்து சுமூக நிலையொன்று ஏற்படுத்தப்பட்ட பின்னர் இப் பீடங்களின்…
ஏறாவூரில் கஞ்சாவுடன் நடமாடிய ஒருவர் கைது
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய ஒருவரை நேற்று (22) வெள்ளிக்கிழமை இரவு தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த 21 வயதுடைய நபர் ஏறாவூர் பழைய சந்தை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5000mg (மில்லிகிராம்) கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை…
