News
பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நால்வரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி எம்.கணேசராஜா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
-ஊடகப் பிரிவு தவ்ஹீத் ஜமாத் (SLTJ) – தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பல சேனா தாக்கல் செய்துள்ள மத நிந்தனை வழக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு (SLTJ) எதிராக பொது பல சேனா தாக்கல் செய்த மத நிந்தனை குற்றச்சாட்டு வழக்கு எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பொது பல சேனா சார்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை…
இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் இடைக்கால கூட்டத்தொடரை நாட்டில் நடத்த எதிர்பார்ப்பு
தெற்காசிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் இடைக்கால கூட்டத்தொடர் ஒன்றை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மாநாட்டு அமைப்பின் தலைவர் துன் முசா ஹிடம் (Tun Musa Hitam) தெரிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கையில் முதலீட்டுக்கான சந்தர்ப்பம் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மாநாட்டு அமைப்பின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை சந்தித்த போதே இவ்விடயத்தினை தெரிவித்தார். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் நடைபெறும் 12 ஆவது…
நபி ஸல் அவர்கள் மதினாவிற்கு வந்தவுடன் இஸ்லாத்தை ஏற்க வந்த முதல் யூதத் தலைவர் கேட்ட கேள்விகள்
நபி ஸல் அவர்கள் மதினாவிற்கு வந்தவுடன் இஸ்லாத்தை ஏற்க வந்த முதல் யூதத் தலைவர் கேட்ட கேள்விகள் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு அனஸ்(லரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். ”தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே…
அ.இ.ம.கா. வுக்கு எதிராக வை.எல்.எஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு
-சுஐப் எம் காசிம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைர்தீன், கட்சியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டமையை ஆட்சேபித்து அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீத், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று (4) எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்திருந்தார். கட்சியின் செயலாளராக சுபைர்தீன் நியமிக்கப்பட்டமையை ஆட்சேபித்து மனுதாரரான வை எல் எஸ் ஹமீத் கட்டாணை (ENJOINING) பிறப்பிக்குமாறு மாவட்ட…
பிரதமர்நா ட்டை வந்தடைந்தார்!
இந்தோனேஷியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று (3) இரவு நாடு திரும்பியுள்ளார். 12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தோனேஷியாவுக்கு பயணமாகியிருந்தார். உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்துக்காக இலங்கை முதல் முறையாக அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையும் சீனாவும் கூட்டுக்குழுவை அமைக்க இணக்கம்
இலங்கை அரசாங்கமும் சீன அரசாங்கமும் கூட்டு குழு ஒன்றை அமைக்க இணங்கியுள்ளன. இந்த கூட்டு குழு தொடர்பான பிரதமரும், சீனத்தூதுவரும் அண்மையில் ஹம்பாந்தோட்டைக்கு சென்று திரும்பிய பின்னர் குறித்த இணக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது சீனத்தூதுவரும் இலங்கையின் பிரதமரும் விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இதில் குறித்த பிரதேசத்தில் கைத்தொழில் துறைக்கான நிலத்தை ஒதுக்குவது தொடர்பான பேச்சுகளும் இடம்பெற்றதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.
ஹிலாரி வெற்றி பெறுவதற்கான சாத்தியம்; கருத்து கணிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கருத்துக் கணிப்பொன்று தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது. இந்தநிலையில் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் சார்பில் ஹிலாரி மற்றும் ட்ரம்ப்பிற்கிடையே கடுமையான போட்டித் தன்மை நிலவி வருகின்றது. தேர்தல் பிரசாரங்கள் அனைத்து மாநிலங்களிலும் இடம்பெற்று வருகின்ற நிலையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள்…
ட்ரம்ப் ஜனாதிபதியாவதற்கு தகுதியற்றவர் – ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு டொனால்ட் ட்ரம்ப் தகுதியற்றவர் அவரை, அனைவரும் நிராகரிக்க வேண்டுமென ஜனாதிபதி ஒபாமா கோரியுள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ஒபாமா, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர். அமெரிக்க ஜனாதிபதியாக யாரையும் ஆதரித்து இந்த கருத்தை நான் கூறவில்லை. ட்ரம்ப் எனது கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நான் இதே கருத்தை தான் கூறியிருப்பேன்….
முஸ்லிம் இன படுகொலை: விசேட நீதிமன்ற விசாரணை தேவை – தேசிய ஷுஹதாக்கள் நிறுவனம் கோரிக்கை
முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இன படுகொலைகளை விசாரிக்க விஷேட நீதிமன்றமொன்றினை அமைக்குமாறு சர்வதேச சமூகத்திடமும் நல்லாட்சி அரசாங்கத்திடமும் தேசிய ஷுஹதாக்கள் நிறுவனம் வேண்டுகோள்விடுத்துள்ளது. 26 ஆவது தேசிய ஷுஹதாக்கள் தினத்தையொட்டி நேற்று புதன்கிழமை தேசிய ஷுஹதாக்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாகும். 1990 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இரத்த வெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கு மாகாணாத்திலுள்ள பள்ளிவாசல்களிலும் முஸ்லிம்…
நோர்வே பிரதமர் நாட்டை வந்தடைந்தார்
நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். நாட்டுக்கு வந்துள்ள நோர்வே பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேசவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திலிருந்து சென்ற அழைப்புகள் குறித்து விசாரணை
றகர் விளையாட்டு வீரர் தாஜூதீன் படுகொலை செய்யப்பட்ட அன்றைய தினம், நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர் மற்றும் இன்னும் சில அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்புகள் சில வந்துள்ளன என்று நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையில், நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே, அரச சிரேஷ்ட சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க மேற்கண்ட விடயத்தை நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்திலிருந்து உள்வந்த தொலைபேசி…
