News
முஸ்லிம்களுக்கு ஹலால், ஹராம் உள்ளன – அமைச்சர் ராஜித
முஸ்லிம்களின் உணவு தொடர்பில் கடந்த காலங்களில் சில தரப்பினர் விமர்சனங்களை ஏற்படுத்தினர். அதனை ஹலால் பிரச்சினையாகக் கொண்டு வந்தனர். எனினும் முஸ்லிம்களுக்கு ஹலால், ஹராம் என்கின்ற இரு விடயங்கள் உள்ளன. ஹலாலானவற்றை உண்பதற்கே அவர்களுக்கு சமயத்தில் அனுமதியுண்டு. இஸ்லாம் சமயத்தின்படி மதுபானம் அருந்துவது ஹராமாக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் மதுபானம் பாவிப்பதில்லை. அது வரவேற்கத்தக்க விடயமாகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ‘மதுசாரமற்ற இலங்கை’ எனும் தொனிப்பொருளிலான தேசிய மாநாடு நேற்று காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு…
பொரளஸ்கமுவ பள்ளிவாசலுக்குள், புகுந்து தாக்குதல்
பொரளஸ்கமுவ நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இன்று சனிக்கிழமை (06) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்குள் புகுந்த இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் பள்ளிவாசலில் பணியாற்றும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இஸ்லாத்துக்கு முரணான IS உடன், இலங்கை முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை
Forum for National Unity என்ற அமைப்பினால் நேற்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை பாராட்டுவதற்காக, வெள்ளவத்தை The Excellency மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் ஜம்மிய்யதுல் உலமா தலைவர் உரையாற்றுகையில், ISIS என்பது இஸ்லாத்துக்கு முரணான அமைப்பு என்றும் அவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஆணித்தரமாக தெரிவித்தார். இதே வைபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஸுஹைர் உரையாற்றுகையில், முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேலியர் செய்துவரும் சூழ்ச்சிபற்றியும் குறிப்பிட்டார். போலி ஈரானிய பாஸ்போட்டில்…
விடைப்பெற்றது பிரபல டொரண்ட்ஸ் தேடல் தளம்
கிக்ஆஸ் டொரண்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரண்ட்ஸ் தேடல் இணையதளமான டொரண்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துவிட்டது. கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட டொரண்ட்ஸ்.இயூ தனது சேவை திடீரென நிறுத்திக்கொண்டதால் அத்தளத்தின் பயனாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். டொரண்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்தார்கள். தற்போது இந்த தளத்தில் லாக் இன் செய்ய முயல்பவர்களுக்கு “டொரண்ட்ஸ் எப்போதும் உங்களை நேசிக்கும்…சென்று வருகிறேன்” என்ற செய்தி மட்டுமே பதிலாக கிடைக்கிறது.
இரு கால்களும் செயலிழந்த நிலையிலும் பல்கலைக்கழக பட்டதாரியான இளைஞர்
இரு கால்களும் செயலிழந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர் ஒருவர் அங்கு தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு முகாமைத்துவ, வர்த்தகத்துறை பட்டதாரியாகியுள்ளார். மாத்தறை தெலிஜ்ஜவில என்ற இடத்தைச் சேர்ந்த கசும் சாமர என்ற இந்த இளைஞர் தனது பட்டப்படிப்பை ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்திலேயே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. கால்கள் செயலிழந்த நிலையில், அவரது தாய் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் அங்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். நேற்று முன்தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில்…
புலமைப் பரிசில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த தடை
தரம் 05இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இம்மாதம் 21ஆம் தகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வரும் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான நாட்களில் அவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல் மாத்திரமின்றி, அதுதொடரபான பதாகைகள், துண்டுப் பிசுரங்களை விநியோகித்தல், ஊடகங்கள் ஊடாக பிரசாரங்கள் மேற்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இஷாக் ரஹ்மான் நிதி ஒதுக்கீடு
-நாச்சியாதீவு பர்வீன் – அநுராதபுரம் மாவட்டத்தின் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளின் பெளதீகவளக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக கெளரவ அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க கெளரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 04 கல்வி வலயங்களில் உள்ள 30 தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மை இன மக்களிற்கு கிடைக்காத பெரும் நன்மையை அநுராதபுர…
பூமியை போன்று புதிய 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் “நாசா” மையம் விண்வெளியில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டறிய ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். அதில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அவை புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அதுபோன்று இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த ஆய்வுகளை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவைகளில் உயிரினங்கள் வாழ தகுதியுள்ளதாக 216 கிரகங்கள் இருப்பது தெரிய…
மியான்மரில் மர்ம நோய்க்கு
மியான்மர் நாட்டில் பரவிவரும் பரவிவரும் மர்ம நோய்க்கு 30 குழந்தைகள் பலியானதாக தெரியவந்துள்ளது. மியான்மர் நாட்டின் வடமேற்கில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஒருவகையான மர்ம நோய் பரவி வருகிறது. குறிப்பாக, நாகா பகுதியில் வேகமாக பரவிவரும் இந்த மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் 30 குழந்தைகள் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் 5 வயதுக்கு குறைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும் இந்த மர்ம நோய்க்கு இந்தியாவின் நாகலாந்தை ஒட்டியுள்ள…
புகையிலைக்கான வரியை 90 வீதமான உயர்த்த முடிவு
புகையிலைக்கான (tobacco) வரியை 90 சதவீதமாக உயர்த்துவது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அவ்வாறே வைத்திருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2016இன் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய கொள்ளை பிரகடனத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் காலத்திலேயே புகையிலைக்கான வரி 90 சதவீதமாக காணப்பட்டதாக, அமைச்சர்…
ஒலுவில் அணைக்கட்டுக்கு துறைமுக அதிகார சபை ஒப்புதல்
-சுஐப் எம்.காசிம் – ஒலுவில் கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு ஏதுவாக, உடனடியாக அந்தக் கிராமத்தைப் பாதுகாக்கும் வகையில் மண் அணைக்கட்டு ஒன்றை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள, முன்கூட்டிய ஒப்புதலை ( Pending Approval) துறைமுக அதிகார பணிப்பாளர் சபை வழங்கியுள்ளதாக, அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு விஜயம் செய்யவுள்ள துறைமுக அதிகார சபையின் நிபுணர்களும், கரையோர முகாமைத்துவ திணைக்களத்தின் உயரதிகாரிகளும் அந்தப்…
மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை திறக்க ஏற்பாடு
கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை அவுஸ்திரேலிய – இலங்கை தொடரின் போது திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த உள்ளக கிரிக்கெட் மையத்தின் கட்டுமான வேலைகளை, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, ஐ.சி.சி.யின் பிரதம நிறைவேற்றதிகாரி டேவிட் ரிச்சட்சன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் விஜயம் செய்து பார்வையிட்டனர். குறித்த உள்ளக கிரிக்கெட்…
