News
போகிமான் கோ விளையாடிக் கொண்டு சென்றவர் 3 கோடி பணத்தைக் கண்டெடுத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்
போகிமான் கோ (Pokemon Go)விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டு வீதியில் சென்ற நபர் ஒருவர் 2 இலட்சம் அமெரிக்க டொலர்களை (சுமார் 3 கோடி ரூபா) கண்டெடுத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. நியூ ஜேர்ஸி மாநிலத்திலுள்ள ஹெக்ஸ்டவுன் நகரில் போகிமான்களை பின் தொடர்ந்து சென்ற ஒருவர், வர்த்தக நிலைமொன்றுக்கு அருகிலிருந்து 2000 டொலர்களை கண்டெடுத்தார். அந் நபர் உடனடியாக இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததாக ஹெக்ஸ்டவுன் பொலிஸார் தெரிவித்தனர். அதையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அதிகாரிகள் அங்கு அனுப்பினர்….
தலைக்கவச விவகாரம்: தடை நீடிப்பு
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் அமைந்துள்ள தலைக்கவசத்தை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை மீதான இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் அமைந்துள்ள தலைக்கவசத்தை அணிவதற்கு பொலிஸார் தடை விதித்தனர். பின்னர், இந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து, குறித்த தடையை அமுல்படுத்துவக்கு எதிராக இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பில் தாக்கல்…
19 மீனவர்கள் கைது
கொக்குத்துடுவை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த 19 மீனவர்கள் நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களிடமிருந்து 4 கண்ணாடிநார் படகுகள் மற்றும் 3 தங்கூசி வலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இஸ்லாமிய பொருளாதாரம் குறித்து உலகம் அறிய வேண்டிய பல விடயங்கள் உள்ளன – ரணில்
1970 களில் பொருளாதார விடுதலைக்கான முன்னோடியாக இஸ்லாமிய பொருளாதாரமே இருந்தது. எனவே இன்று இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதார முறைமைகள் தொடர்பில் உலகம் அறிய வேண்டிய பல விடயங்கள் உள்ளன என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்தோனேஷியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இந்தோனேஷியா பல இயற்கை பாதிப்புக்களுக்கும் முகங்கொடுத்துள்ள நிலையில் இன்று நடைபெறும் இந்த மாநாடு உலக அளவில் முக்கியத்துவம்…
குப்பைக் கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது!
களனி கங்கையில் குப்பைக் கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்ணொருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேலியகொட மற்றும் வத்தளை பொலிஸாரும் கடற்படை அதிகாரிகளும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஹேகித்த மற்றும் ஹெமில்டன் பகுதிகளிலும் நீர்நிலைகளில் குப்பை கொட்டிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக குறித்த பிரதேசங்களின் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை…
ஜனாதிபதி தலைமையில் ஐ.தே.கவின் 70ம் ஆண்டு நிறைவு விழா
ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழாவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்க உள்ளார். எதிர்வரும் செப்டம்பர்மாதம் 10ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உறுப்பினர்களினால் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது. பொரளை கெம்பல் மைதானத்தில் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஐக்கியதேசியக் கட்சியின் 69ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தமை…
தாய்ப்பால் ஊட்டுதலில் இலங்கை முதலிடத்தில்
தாய்ப்பால் ஊட்டுதல் தொடர்பில் பன்னாட்டு ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வில் இலங்கை முதலிடம் பெற்றது. 121 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித்த மகிபால தெரிவித்தார். இலங்கையில் பாலுாட்டும் தாய்மார் தற்போது 92 வீதமாகக் காணப்படுகின்றனர். குழந்தைகளுக்கான பால்மா தொடர்பான பல்வேறு விளம்பரங்களால் இந்த வீதம் குறைவடைகின்றது. அனைத்துத் தொழில் நிறுவனங்களும் தமது ஊழியர்களுக்கு பாலுாட்டுவதற்கான நேரத்தை வழங்க வேண்டும் என்று பாலித்த மகிபால குறிப்பிட்டார். இந்த ஆய்வில் கியுபா…
பாடகர் எம்.ஜீ.தனுஷ்கவுக்கு பிடியாணை
பாடகர் எம்.ஜீ.தனுஷ்கவை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று புதன்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் அவரை கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு
வடக்கு ரயில் மார்க்கத்தை இடைமறித்து ரயில் கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர். அநுராதபுரம் – மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயில் பாதையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னாரிலிருந்து கொழும்புக்கு பயணித்த ரயில்கள், மதவாச்சி ரயில் நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுத்து இவர்கள் ரயில் பாதையை மறித்து…
காத்தான்குடி ஷுஹதாக்களின் சுவனவாழ்வுக்காக பிரார்த்திப்போம்
காத்தான்குடி பள்ளிவாசல்களில் மிலேச்சத்தனாமாக படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்களின் சுவனவாழ்வுக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரார்த்திப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 199௦ ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி, தமிழ் பேசும் மக்களின் வரலாற்றில் ஏற்பட்ட இந்தக்கறை அனைவரின் மனங்களிலும் நீங்காதுள்ளது. காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுசைனியா தைக்காவில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது புலிகள் மேற்கொண்ட இக்குரூரக் கொலைகளில் ஷஹீதாக்கப்பட்ட 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும்…
லசந்த வழக்கு ; இராணுவ புலனாய்வு அதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு
லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியை எதிர்வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று (03) கல்கிசை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் ஊடகவியலாளர் பலி
-மயூரன் – யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து யாழ்.கண்டி வீதியில் இருந்து சோமசுந்தரம் வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியதில் அதில் பயணித்த ஊடகவியலாளர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். மாவட்ட செயகத்திற்கு அருகில் கண்டி வீதியில் நேற்று மாலை (02) இடம்பெற்ற வீதி விபத்தில் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் காயமடைந்த…
