News
நிர்க்கதியான இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்
நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து படகில் எற்பட்ட இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான 3 இந்திய மீனவர்களை மீட்டு இந்திய கடலோர காவற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தின் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான குறித்த மீனவர்களை மீட்டதுடன், குறித்த தகவலை இந்திய கடலோர காவற்படையினரிடம் அறிவித்து, குறித்த மீனவர்களையும் அவர்களுடைய படகையும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைத்தள்ளனர்.
ரியோ 2016 ஒலிம்பிக் விழா இன்று ஆரம்பம்
சர்வதேச விளையாட்டு அரங்கில் உயரியதும் உன்னதம் வாய்ந்ததுமான கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 31 ஆவது அத்தியாயம் பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் கோலாகல ஆரம்ப வைபவத்துடன் இன்று தொடங்குகின்றது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடத்தில் நடைபெறும் நவீன கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா, அதன் 120 வருட வரலாற்றில் தென் அமெரிக்க நாடொன்றில் அரங்கேற்றப்படுவது இதுவே முதல் தடவையாகும். ஒற்றுமை, நட்புறவு, சகோதரத்துவம், புரிந்துணர்வு ஆகியவற்றின் சின்னமாக ஒலிம்பிக் விளையாட்டு…
தம்புள்ள பள்ளிக்கு காணியை விடுவிப்பதில் நகர அபிவிருத்தி அதிகார சபை தயக்கம்
தம்புள்ள ஜும்மா பள்ளியை நிர்மாணிக்கும் காணியை விடுவிப்பதில் நகர அபிவிருத்தி அதிகார சபை தயக்கம் காட்டிவருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.இப்றாஹிம் சுட்டிக்காட்டியுள்ளார். தம்புள்ள பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தம்புள்ள தொகுதி அமைப்பாளரும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான ப்ரியான் விஜேரத்ன தலைமையில் நடைபெற்ற போது தம்புள்ள நகரில் முஸ்லிம் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்மாணிப்பதற்கென இனங்காணப்பட்டுள்ள காணியை விடுவிப்பதில் நகர அபிவிருத்தி அதிகார சபையினர் தொடர்ந்தும் காலதாமதம் செய்து வருவது தொடர்பில் மத்திய…
காஷ்மீர் உயர்நீதிமன்றம் ராணுவத்திற்கு எச்சரிக்கை !
– அபூஷேக் முஹம்மத்- காஷ்மீர் உயர் நீதிமன்றம் CRPF மற்றும் ராணுவத்திடம் சரமாரியான கேள்விகளை எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தலைமை நீதிபதி பவுல் வசந்தகுமார் மற்றும் நீதிபதி ஹுசைன் அக்தர் அடங்கிய பென்ச் இந்த வழக்கை விசாரிக்கின்றது . ஏன் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் முட்டிக்கு மேல் மற்றும் கண் பகுதிகள் தாக்கப்பட்டுள்ளது நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர் ? அவர்கள் நமது குடிமக்கள் ஆவர் .பெல்லட்களால் சுடுவதற்கு வானத்தில் இறங்கிய வேற்று கிரகவாசிகள் அல்ல .அவர்களை…
தென்கொரியா சென்றடைந்தார் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தென் கொரியாவிற்கு இன்று (5) அதிகாலை 1.30 மணியளவில் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தென் கொரியாவிற்கு ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவர் தென் கொரியாவில் இடம் பெற உள்ள மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காகவும்அங்கு வாழ்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்காகவும் தென் கொரியாவிற்கு விஜயம்மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஜ.எல்.பீரிஸ்,மகிந்தானந்த அலுத்கமகே,பந்துல்ல குணவர்தன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் மகிந்தவுடன் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
களனி ஆற்றில் குப்பை : 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது!
களனி கங்கையை மாசுபடுத்திய குற்றச்சாட்டில் 7 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் 4 பெண்கள் மற்றும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸ் கடற்படை பிரிவினர், கைது செய்யப்பட்டவர்கள் பேலியகொட மற்றும் வத்தளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒலிம்பிக் கிராமத்தில் கைவரிசை: டென்மார்க் வீரர்களின் பொருட்கள் திருட்டு
ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகி ஒருவரின் லேப்-டாப் மற்றும் வீரர்களின் சீருடைகள் சில தினங்களுக்கு முன்பு மாயமானது. இந்த நிலையில் டென்மார்க் அணியை சேர்ந்த வீரர்களின் செல்போன், ஐபேர்டு மற்றும் துணிகள் திருட்டு போய் இருக்கிறது. இதனை டென்மார்க் அணியின் தலைமை நிர்வாகி மொர்டென் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களின் உடமைக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய – இலங்கை பாலம் அமைக்கப்பட்டால் அதனை தகர்ப்பேன் : கம்மன்பில
இந்தியா – இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால் அது வடக்கு, கிழக்கையும் இந்தியாவையும் இணைப்பதாக அமையும். எனவே இந்தியா- இலங்கைக்கு இடையில் பாலம் ஒன்றை அமைத்தால் அதனை தகர்ப்பேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பு பாகொடையில் அமைந்துள்ள தூய்மையான நாளைக்கான அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஆசிய அபிவிருத்தியின் உதவியில் இலங்கை–இந்தியாவை நிரந்தரமாக இணைக்கும் ஹனுமான்…
பணிக்கு திரும்பாத ஊழியர்கள் பணியில் இருந்து நீங்கியவர்களாக கருதப்படுவார்கள் : மொஹான்
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று (5) முதல் கடமைக்குத் திரும்ப வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இன்று பணிக்கு திரும்பாத ஊழியர்கள் பணியில் இருந்து நீங்கியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்தப் போவதில்லை என, பல்கலைக்கழக தொழிற்சங்க…
எவ்வித அச்சம், சந்தேகமுமின்றி யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கலாம்
யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே எவ்வித அச்சமும் சந்தேகமு மின்றி சுதந்திரமாக கல்வி நடவடிக்கைக ளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத்…
அமைச்சர் றிஷாத் வேண்டுகோளை ஏற்று ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வைப் பெற்றுத்தர துறைமுக அதிகார சபை நடவடிக்கை
-சுஐப் எம் காசிம் – ஒலுவில் கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் பாரிய கடலரிப்பை தடுக்கும் வகையிலான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் கரையோரம் பேணல், கரையோர மூல வள முகாமைத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் பி கே பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரும் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், இலங்கை துறைமுக அதிகார…
மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்: ஜெயலலிதா
தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன். இதற்காக முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கடைகளின் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கை உண்மையாக அமல்படுத்துவதில் அ.தி.மு.க. தான் அதிக அக்கறை கொண்டுள்ளது. 1971-ல் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தினார். 2007-ல் அவர் முதல்வராக இருந்தபோது, கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க முடியாது என்றார். இவ்வாறு அவர் பேசினார். முதல்வரின் பேச்சுக்கு பதில் தர…
