News
இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன..? ஹெல உறுமய கேட்கிறது
இந்தோனேசியாவின் புதூர் விகாரைக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பௌத்தர்கள் என்ற வகையில் மிகவும் அக்கறையுடனும் உன்னிப்பாகவும் அவதானித்து கொண்டிருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். ஈராக்கின் மொசூல் நகரில் இடம்பெறும் கொடூர மிலேச்சத்தனமான செயல்கள் பற்றி மாத்திரமல்லாது இந்தோனேசியாவின் போரோ புதூர் பௌத்த விகாரைக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பிலும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை பரீட்சிக்கும் சந்தர்ப்பம் என்பதால், அவர்களின் நிலைப்பாடு என்ன…
இலக்கிய எழுத்தினூடாக ஒரு கின்னஸ் சாதனை: 12 மணித்தியாலங்கள் தொடர்ந்து எழுதுதல்
(அஸ்ரப் ஏ. சமத்) உலக வரலாற்றில் முதல் தடவையாக, குறிப்பிட்ட ஒரு தலைப்பில் 12 மணித்தியாலங்கள் தொடர்ந்து எழுதும் கின்னஸ் உலக சாதனை ஒன்று இடம் பெறவிருக்கிறது. எதிர்வரும் 2014 ஆகஸ்ட் 30 ஆம் திகதி கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் 1978களில் இருந்து எழுதிவருபவரும், சுதந்திர ஊடகவியலாளரும் வானொலி ஊடகவியலாளருமான அனிஸ்டஸ் ஜெயராஜா ‘கரன்சி (பணநோட்டு) இல்லாத உலகம்’ எனும் தலைப்பில் எழுதி இக்கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளார். உலக வரலாற்றில் இதுவரை கின்னஸ் சாதனை…
பாரம்பரியத் தொண்டுப் பணியை ஊக்குவிக்கும் வகையில் பொது இடங்களில் மக்கள் சிரமதானம்!
(அப்துல்லாஹ்) தமது கிராமத்தின் பல்வேறு பொது அலுவலங்களை மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் செய்து வருவதாக திருகோணமலை அலஸ் தோட்டம் மாதர் சங்கத் தலைவி எஸ். சாந்தா தெரிவித்தார். இன்று (28) வியாழக்கிழமை உப்புவெளி கிராம சேவையாளர் அலுவலகமும் அதன் சுற்றாடலும் கிராம மாதர் சங்க உறுப்பினர்களால் சிரமதானம் துப்புரவு செய்யப்பட்டது. உப்புவெளி கிராம சேவகர் பிரிவிலடங்கும் செம்பியன் தோட்டம், சோலையடி மற்றும் அலஸ் தோட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாதர் சங்க உறுப்பினர்கள் இன்றைய சிரமதானத்தில் பங்கேற்றனர்….
வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் 98 வீதம் பூர்த்தி: 80 சதுர கி.மீ பிரதேசமே மிச்சம்
வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் 98 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். கண்ணிடி வெடிகளை அகற்றுவதற்காக சுமார் 80 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் மாத்திரமே எஞ்சியுள்ளது என்று தெரிவித்த அவர், இவற்றை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்க மளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு…
தகவல்களை வழங்கிவைக்குமாறு யாழ் முஸ்லிம்களிடம் வேண்டுகோள்
(கொழும்பு செய்தியாளர்) யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பினால் (JMRO) வெளியிடப்படவுள்ள யாழ் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான நூலில் யாழ் மாவட்ட முஸ்லிம் அரச ஊழியர்கள், தனியார் துறையில் சேவை புரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள்,க.பொ.த (சா/த) (உ/த) பட்டப்படிப்பு ,வெளிநாட்டுப் பட்டப்படிப்பில் அதிகூடிய பரீட்சைப்பெறுபேறுகளைப் பெற்றோர், போன்ற இன்னோரன்ன கல்வித்தகமை உள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படவுள்ளன. இதற்கான தகவல்கள் யாழ் மாவட்ட முஸ்லிம்களிடமிருந்து பெறப்பட்டு வருகின்றன. இதுவரை தகவல்களை வழங்காதோர். பெயர்- விலாசம்- கற்றபாடசாலை- கல்வித்தகமை- தொலைபேசி இல-…
ஐ.நா. விஞ்ஞானிக்கு எபோலா நோய்!
ஜேர்மனியில் ஐ.நா. விஞ்ஞானிக்கு ‘எபோலா’ நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ எனும் கொடிய வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. லைபீரியா, சியாரா லியோன், கினியா ஆகிய நாடுகளில் ஏராளமானோர் இந்த நோய்க்கு பலியானார்கள். உயிர்க்கொல்லி நோயான ‘எபோலா’ வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் மருந்து கண்டுபிடித்து விடுவோம் என்று அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன் லைபீரியாவில் ‘எபோலா’…
வாக்குச் சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை நாளை முதல்
ஊவா மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் ஒவ்வொரு கட்சிகளுடனும் தனித்தனியாக கலந்துரையாடலில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு அமைய இந்த கலந்துரையாடல் நடைபெறுகின்றது….
இந்திய – இலங்கை கூட்டுக்குழு கூட்டம் நாளை
இந்திய – இலங்கை கூட்டுக்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில், தமிழக அரசு சார்பில் விவாதிக்கப்பட வேண்டியவைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த திங்கட்கிழமை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதன்படி, நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார், ஆணையர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள் என தமிழக ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கை…
ஊவா தேர்தல் ; பொலிசுக்கு மேலும் 4 கோடி ரூபா
ஊவா மாகாண சபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பொலிஸ் திணைக்களத்துக்கு தேர்தல்கள் திணைக்களம் மேலும் 40 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,வழங்கப்பட்ட 05 மில்லியன் ரூபாவுக்குப் புறம்பாகவே இந்த 40 மில்லியன் ரூபா வழங்கப்படுவதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.மொஹம்மட் தெரிவித்துள்ளார்.(DC)
காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேலில் எதிர்ப்பு
காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையின் பாதியளவான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதில் அமைச்சரவையின் நான்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக இஸ்ரேல் தேசிய வானொலி குறிப்பிட்டுள்ளது. இதன்படி வெளியுறவு அமைச்சர் அவிக்டர் லிபர்மன், வர்த்தக அமைச்சர் நப்தாலி பென்னட், உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிளாட் எர்டன் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைச்சர் யிட்சக் அஹ்ரோனோவிக் ஆகியோரே எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யுத்த நிறுத்தம் குறித்து ஆரம்பத்தில் அமைச்சரவையைக் கூட்டி ஆலோசிக்கும்படி நப்தாலி பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை கோரியுள்ளார்….
போதைப் பொருள் கடத்தலை தடுக்க பாகிஸ்தானின் உதவியை நாடிய இலங்கை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கடத்தப்படுவதற்காக கொழும்பு துறைமுகத்துக்கு ஹெரோயின் மறைத்து கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் புதுடில்லியிலும் கடந்த வாரம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து இலங்கை, இந்திய அதிகாரிகளுக்கு இடையில் போதைவஸ்தை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதன்போது போதைவஸ்து கடத்தலை தடுக்க பாகிஸ்தானிடமும் உதவி கோரப்பட்டுள்ளதாக அஜித ரோஹன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சீதுவையிலும் கண்டி கட்டுகஸ்தோட்டையிலும் அண்மையில் கைப்பற்றப்பட்ட போதைவஸ்துக்கள் தொடர்பில் பாகிஸ்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக கைதான யுவதி சரீர பிணையில் விடுதலை!
21வயதான இந்த யுவதி, அண்மையில் வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தம்மை இழிவாக பேசியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தாக்கினார். இது சமூக இணையத்தளங்களில் காணொளி காட்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக தம்மால் பொதுமக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி குறித்த இளைஞர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்தே யுவதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் வழக்கு விசாரணை செப்டம்பர் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
