Headlines

தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பில் இரு பெரும்பான்மை கட்சிகளும் பொறுப்பற்று செயல்படுகின்றன: மனோ கணேசன்

(பழுலுல்லாஹ் பர்ஹான்) இந்த அரசு இன்று வாக்குறுதிகளை மீறுவதில் உலக சாதனை செய்துள்ளது. உள்நாட்டில் நமது மக்களை மட்டுமல்ல, வெளிநாட்டிலும் அது உலக அரசுகளை ஏமாற்றுகிறது. இந்த கொடுங்கோல் அரசை தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் வேறு எவரையும் விட தமிழ், முஸ்லிம் மக்களுக்கே அதிக தேவை உள்ளது. -மனோ கணேசன்

Read More

“குரங்குகளைக் கொல்வது தீர்வாகாது”

காத்தான்குடியில் மக்களுக்கு தொல்லை கொடுத்துவரும் குரங்குகளை சுட்டுக் கொல்வது இந்தப் பிரச்சனைக்கு நீண்டகாலத் தீர்வாகாது என்கிறார் இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக குரங்கினங்களை ஆராயும் நிபுணர் சுனில் ஜெயதிலக. வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை. இப்பிரதேசத்தில், இந்த ஆண்டு மட்டும் 45 சிறுவர்கள் உட்பட சுமார் 75 பேர் குரங்குளின் கடிக்குள்ளாகி காயமடைந்துள்ளார்கள். ஆண்டு முழுவதும் உணவும் நீரும் கிடைப்பதால்தான் குரங்குகள் நகர்பகுதிக்கு…

Read More

70 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானில் டெங்கு காய்ச்சல்: 3 பேருக்கு நோய்த்தாக்கம்

ஒருவகைக் கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சல் ஜப்பானில் கடைசியாக 1945ல்தான் கண்டறியப்பட்டுள்ளது. அதற்குப்பிறகு தெற்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்பவர்களில் ஆண்டுதோறும் 200 பேர் இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்படும்போதும் உள்நாட்டில் கடந்த 70 வருடங்களுக்குப்பிறகு மூன்று பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை ஜப்பான் சமீபத்தில் உறுதி செய்துள்ளது. 20 வயதுடைய டோக்கியோ இளைஞன் ஒருவனும், இதன் வடக்கே உள்ள சைடமா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் இளைஞன் ஆகியோரும் இந்த நோய்த்தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் இவர்கள் மூவரும் டோக்கியோவில்…

Read More

கச்சதீவை இந்தியா மீள பெறமுடியாது!

கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடம் இருந்து மீள பெறமுடியாது என இந்திய சட்டமா அதிபர் முகுல் ரோஹாட்டிஹி இந்திய உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார். கச்சதீவை மீள பெறுவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமும், முன்னாள் முதல்வர் முத்துவோல் கருணாநிதியும் தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1974ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இருதரப்பு இணக்காப்பாட்டின் அடிப்படையில் இந்த தீவின் அதிகாரம் இல்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை….

Read More

பொதுபல சேனாவின் புதிய கதை (கட்டுரை)

(கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)  முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான கருத்துக்களை பகிரங்கமாக கூறிவரும் பொதுபலசேனா இன்னும் அதனது பாதையில் இருந்து விலகியதாக தெரியவில்லை.காலத்திற்கு ஏற்ற விடயங்களை இனம் கண்டு அதனை வைத்து இலங்கையில் வாழும் பௌத்த மக்களையும் ,ஏனையச சமூகத்தினரையும் முஸ்லிம்களுக்கு எதிராக துாண்டி அதன் மூலம் வெளிநாட்டு நிதியினை பெற்றுகொள்ளும் இந்த அமைப்பு மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏற ஆரம்பித்திருக்கின்ற கதையாக மாறிவருகின்றது. இலங்கையில் உள்ள சில முஸ்லிம் ஹஜ் முகவர்கள் பொதுபலசேனா அமைப்பிடம் உதவி…

Read More

காஸாவின் வெற்றி ஊர்வலத்தின் போது, சிறுமியின் வீர வசனங்கள்..!

“இன்று நாங்கள் மொழியும் ஒரே வார்த்தை! காஸா வெற்றி பெற்றது! நாளை பைத்துல் முகத்ஸ் வெற்றி பெறுவோம்! பின்பு பலஸ்தீனம் முழுவதும் நம்முடையதாகும்! சியோனிசவாதிகள் நீங்கள்தான் அகதிகள்! நாங்கள் பலசாலிகள்! நீங்கள் எங்கள் பெண்களை விதவை ஆக்குநீர்கள்! குழந்தைகளை அநாதை ஆக்குநீர்கள்! உங்களை விழ்த்துவோம் என்ற சிங்க நாதம் குறையாது! நீங்கள் எங்களுக்கு முன்னால் சுண்டெலிகள்! நாங்கள் வீர சிங்கங்கள்! நீங்கள் காலனித்துவவாதிகள்! உங்கள் உள்ளத்தில் ஈவு இறக்கம் என்பதே கிடையாது! நாங்கள் பலஸ்தீனை மீட்டெடுத்து மஸ்ஜித்…

Read More

இஸ்லாமிய தேச போராளிகளை எதிர்ப்பதற்காக, அஸாதுடன் கைகோக்க பிரான்ஸ் மறுப்பு

இஸ்லாமிய தேச வாதிகளுக்கு எதிரான போரில் சிரியா அதிபர் அல்-அஸாதுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என பிரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரான்சுவா ஹொலாந்த் வியாழக்கிழமை கூறுகையில், “”சிரியா அதிபர் அல் அஸாத், மத அடிப்படைவாதிகளின் கூட்டாளி. சிரியாவிலும், இராக்கிலும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை, மனிதநேயத்துடன் கூடிய ராணுவ பலத்துடன் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், அஸாத் ஒருபோதும் கூட்டாளியாக முடியாது” என்றார்.

Read More

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக 5 மாதங்களில், 80 வெறுக்கத்தக்க சம்பவங்கள்

2014ம் ஆண்டின் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 80 வெறுக்கத்தக்க சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் செயலகம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்கள்,  தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகள் என்ற அடிப்படையில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக முஸ்லிம் செயலகம் தெரிவித்துள்ளது. இதில் அளுத்கம சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாக முஸ்லிம் செயலகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை…

Read More

மனிதர்களை புனிதர்களாக வாழ்விப்பதற்கே மதம் தேவை, கொன்று குவிப்பதற்கல்ல..!!

(கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்) தனிமனிதாக,குடும்பமாக,சமூகமாக,தேசமாக,உம்மத்தாக,சர்வதேசமாக மனிதன் வாழ்வதற்கே காலத்திற்குக் காலம் நபிமார்களும், தூதுவர்களும், இறை தூதுகளுடன் அருளப்பட்டனர். ஆன்மீக பயிற்சிகள் ஆயினும்,அகீதத் ஆயினும் ஷரீஅத் ஆயினும் கிலாபாத் ஆயினும் அவை குறித்த பிக்ஹு அல்லது இஜ்திஹாது எல்லாமே மறுமைக்கான விளைநிலமான இன்மை வாழ்வில் மனிதனின் உயிரிலும் மேலான தீன்,உயிர்,அறிவு,உடைமைகள்,பரம்பரை என்ற அடிப்படை அம்சங்களை மையப் படுத்தியதாகவே அமைந்திருக்கின்றன. காலத்திற்குக் காலம் நபிமார்கள்,தூதுவர்கள், இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்)அவர்கள் சஹாபாக்கள், தாபிஈன்கள் அவர்கள் பின் வந்த நல்லடியார்கள் மனித…

Read More

சிரியாவின், இஸ்ரேல் எல்லையை கைப்பற்றியுள்ள ISIS –

அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா முன்னணி உட்பட சிரிய கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து சிரியாவின் இஸ்ரேல் எல்லையை கைப்பற்றியுள்ளனர். இதன்போது கிளர்ச்சியாளர்களின் தவறுதலான தாக்குதலில் ஆக்கிரமிப்பு கோலன் ஹைட்ஸ் பகுதியில் அதிகாரி ஒருவர் காயமடைந்ததை அடுத்து இஸ்ரேல் தனது சிரிய எல்லைப்பகுதியை மூடியுள்ளது. சிரிய அரச படையுடனான கடுமையான மோதலுக்கு பின்னர் சிரிய-இஸ்ரேலுக்கு இடையிலான குனைத்ரா எல்லைக் கடவையை அல் நுஸ்ரா மற்றும் ஏனைய கிளர்ச்சிக் குழுக்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும்…

Read More

சவுதி அரேபிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான விஷேட செயற்திட்டம்

இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு சவுதியின் பிரதி இளவரசர் முக்ரின் பின் அப்துல் ஹசீசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் விடுத்துள்ளார். சவுதி அரேபிய ஜெடா நகரில் இடம் பெற்ற சந்திப்பொன்றில் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தாhக அராப் நிவ்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர், சமாதானம் எவ்வாறு பேணப்படுகின்றது என்பது தொடர்பாக இந்த விஜயத்தின் போது பிரதி இளவரசர நேரடியாக அவதானிக்கலாம் என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்….

Read More

ராஜபக்ஷவினர் வன்முறைகளுக்கு தயார் என்றால், நாமும் தயார் – அனுரகுமார திஸாநாயக்க

ராஜபக்ஷவினர் தேர்தலுக்கு தயாராகவில்லை எனவும் வன்முறைக்கே தயாராகி வருவதாகவும் ஜே.வி.பியும் அதற்கு தயார் எனவும் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். படால்கும்புர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, பிரசார மேடைகளை உடைத்து, அலுவலகங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து, அச்சுறுத்தல் விடுத்து, ராஜபக்ஷவினர் தேர்தலுக்கு தயாராகவில்லை. அவர்கள் வன்முறைக்கு தயாராகி வருகின்றனர். அப்படியான வன்முறைகளுக்கு அவர்கள்…

Read More