News
கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்
(அகமட் எஸ். முகைடீன்) கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் மெற்றொபொலிடென் கல்லூரியுடன் ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டது. கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெற்றொபொலிடென் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஒரு வார கால துருக்கி நாட்டிற்கான விஜயத்தின்போது மேற்படி ஒப்பந்தம் கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சேர்ஹாட் அக்பினர் மற்றும் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்…
காத்தான்குடியில் குரங்குகளை சுட்டுக் கொல்லத் திட்டம்
(BBC) வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் நாளாந்தம் அதிகரித்து வரும் இத்தொல்லையை கட்டுப்படுத்த குரங்குகளை சுடுவதற்கு காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதி நகர சபை நிர்வாகத்தினால், பாதுகாப்பு அமைச்சிடம் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நெரிசல் மிகுந்த காத்தான்குடி பிரதேசத்திற்குள் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகளை கலைப்பதற்கு வனவிலங்குத்துறை அதிகாரிகளின் உதவி கோரப்பட்டபோது, அவர்கள் ஆட்கள் பற்றக்குறை…
ஹமாசுடன் நீண்ட கால போர் நிறுத்த ஒப்பந்தம்: எல்லையில் உள்ள இஸ்ரேல் படைகள் வாபஸ்
இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற தொடர் சண்டையால் காசா அமைதியிழந்து காணப்பட்டது. இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எகிப்து அரசு கேட்டுக்கொண்டது. அந்நாட்டு அரசின் தீவிர முயற்சியால் முதலில் சில மணி நேரங்களும், அதன்பின்னர் சில நாட்களுக்கும் போர் நிறுத்தம் அமுலில் இருந்தது. இதனால், எந்த நேரத்திலும் தாக்குதல் தொடங்கும் என்ற அச்ச உணர்வு மக்களிடையே இருந்தது….
வாகனேரி கட்டாக்காட்டுப் பகுதியில் திருடப்பட்ட எருமை மாடுகள் கைப்பற்றப்பட்டன
(வாழைச்சேனை நிருபர்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் எருமை மாடுகள் திருடப்பட்ட நிலையில் பொதுமக்களின் முயற்சியால் தடுக்கப்பட்ட சம்பவம் நேற்று (26) இரவு இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாகனேரி கட்டாக்காட்டுப் பிரதேசத்தில் மாடுகளை வளர்க்கும் மாட்டுப்பட்டியில் இருந்து 102 எருமை மாடுகளை திருடர்கள் திருடி நேற்று இரவு 12.00 மணியளவில் கொண்டு வரும் வழியில் ஆளம்குளம் பிரதேசத்தை அன்மித்த போது இரவில் மாடுகளை சாய்த்து வருவதால் இது திருடப்பட்ட மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில்…
யாழ். துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் புனரமைப்பு பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (27) இடம்பெற்றது. முன்பதாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா ஆகியோரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றதைத் தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கின் பிரதான வாயிலில் அதிதிகள் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து நினைவுக்கல்லினை இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா திரைநீக்கம் செய்து வைத்தார். 145 மில்லியன் ரூபா செலவில்…
(Video) ஏறாவூர் விபத்து: நேரடிக் காட்சி!
ஏறாவூர் பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு முன் நேற்று இரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற விபத்துக் காட்சி பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது. இதோ அந்த காணொளி: (Video: Mohamed Mihlar)
இளைஞரை தாக்கிய வாரியபொல யுவதி கைது!
குருநாகல் வாரியபொலவில் யுவதி ஒருவரால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த திலினி அமல்கா என்ற யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். வாரியாபொல பொலிஸ் நிலையத்திற்கு வாய்மொழி வழங்குவதற்காக வந்திருந்த சந்தர்ப்பத்தில் குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை வருகிறார்
பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சிப் மார்ஷல் தாஹிர் ஹபீக் பட் இலங்கைக்கு இன்று வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (OU)
இலங்கையில் தொழில்நுட்ப அறிவு 50 வீதமாக உயர்வு
இலங்கை மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு 50 வீதமாக உயர்வடைந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பல பிட்டிய தெரிவித்துள்ளார்.2005 இல் இலங்கை மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு 4 வீதமாக காணப்பட்டதாகவும் அது தற்போது 46 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (OU)
பொதுபலசேனாவின் அடுத்த நகர்வு – பெளத்த, இந்து தர்ம பாதுகாப்புசபை உதயம்
இந்து ,பெளத்த மதங்களை பாதுகாப்பதற்கான பெளத்த, இந்து தர்ம பாதுகாப்பு சபை நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உதயமானது. பொதுபலசேனாவும் அகில இலங்கை இந்து சம்மேளனமும் இணைந்து இவ்வமைப்பை உருவாக்கியுள்ளன. இதற்கான உடன்பாடு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண் காந்துக்குமிடையே பௌத்த,இந்து ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே…
கதையாக்கச் செயற்றிட்டம் காலத்தின் தேவையாகும் – மேல்மாகாண கல்விப் பணிப்பளார், விமல் குணரத்ன
(எம்.ரீ.எம்.பாரிஸ்) ‘மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையை வெளிப்படுத்தி, அவர்களை சமூக மாற்றத்தின் முக்கிய பங்காளிகளாக மாற்றும் அரிய கலையே கதையாக்க வெளிப்பாடாகும். இளம் தலைமுறையினரிடம் காணப்படும் புரழ்வான நடத்தைக் கோலங்களை மாற்றி, அபிவிருத்திக்கான புத்தாக்கங்களை வெளிப்படுத்தும் இயலுமையை, கதை சொல்தல்கலை வளர்க்கின்றது. கற்றல் கற்பித்தலில் இக்கலை அதிக அவதானத்தைப் பெற்று வருகின்றது’ என மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்ன தெரிவித்தார். களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கபூர்வக் கருத்து வெளிப்பாடு மற்றும் கதைசொல்தல் தொடர்பான…
புல்மோட்டையில் பதற்றம் – அரிசிமலையில் 500 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு
திருகோணமலை, புல்மோட்டை, அரிசிமலைப் பகுதியில் 500 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த நில அளவீடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இதன்போது அபூபக்கர் (வயது 54) என்பவர் காயமடைந்து புல்மோட்டை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நில அளவை திணைக்களத்தால் பூஜாபூமி திட்டத்தின் கீழ் இந்த அளவை செய்யப்படவிருந்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து அரிசிமலைப் பகுதியில் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பொலிஸ் பாதுகாப்புடன் நேற்றுக்காலை 8.30 மணியளவில்…
