News
ஒருமித்த இலங்கைக்குள் போதிய அதிகாரங்களுடனான தீர்வே அவசியம்: இரா.சம்பந்தன்
ஒருமித்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தக் கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சென்னையில் நேற்று புதன்கிழமை ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியாவுக்கான விஜயமொன்றை கடந்த 21ஆம் திகதி மேற்கொண்டிருந்த இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை புதுடில்லியில் சந்தித்த பின் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர். தமிழ்நாட்டுக்கான விஜயத்தின் போது, தமிழக பாரதீய…
மோடியின் வேண்டுகோளை ஏற்று த.தே.கூ செயற்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவர்களும் செயற்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார முறைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்!- அமைச்சர் வாசுதேவ
ஊவா தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டுமென கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பில் தேர்தல்களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. தேர்தல் பிரச்சாரங்களின் காரணமாக பேச்சுவார்த்தைக்கு திகதி ஒன்றை ஒதுக்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தல்களின் பின்னர் நிறைவேற்று…
இலங்கைக்கு புதிய பாகிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரி நியமனம்
இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு பாதுகாப்பு அதிகாரியாக புதியவர் ஒருவர் நியமனம் பெற்றுள்ளார். கேர்ணல் மொஹமட் இர்ஷாத் கான் என்பவரே இந்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ளார். இவர் நேற்று முன்தினம் இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இதன்போது இலங்கை இராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இடையில் புதிய முயற்சிகளை முன்கொண்டு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டதாக இலங்கை இராணுவ இணைத்தளம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் புதிய முயற்சிகளை முன்னெடுத்து செல்வதில் பாகிஸ்தானிய அரசாங்கம் ஆவலுடன் இருப்பதாக…
மோடியை சந்திக்க ஒபாமா ஆர்வம்
நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடியை அமெரிக்கா வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். இதை மோடி ஏற்றுக்கொண்டார். வருகிற செப்டம்பர் மாதம் மோடி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் செல்கிறார். ஐ.நா.சபையில் உரையாற்றிய பின்பு வாஷிங்டன் செல்கிறார். அங்கு வெள்ளை மாளிகையில் செப்டம்பர் 30–ந்தேதி அதிபர் ஒபாமாவை மோடி சந்தித்து பேச்சு நடத்துகிறார். மோடி– ஒபாமா சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் தயாராகி வருகிறது….
2000 ஆண்டு பழமையான மட்பாண்ட துண்டுகள் கண்டுபிடிப்பு
இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொட,கிரிமகுல்கொல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராச்சியின் போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன. களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜா சோமதேவ உள்ளிடட குழுவினர் இந்த அகழ்வாராச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று இந்த பண்டைய கால மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன.
காஸாலை மீண்டும் கட்டியெழுப்ப தயாராக இருக்கிறோம் – கட்டார்
இஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் கட்டார் காசா பகுதியை வெகு விரைவில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் துருக்கி அனைத்து எல்லை கட்டுப்பாடுகளையும் இஸ்ரேல் உடன் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஜம்இயத்துல் உலமா, ஷூரா சபை ஆகியவற்றிக்கு பொதுபல சேனா சவால்!
ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் குறித்து தமது நிலைப்பாடுகளை வெளியிடுமாறு பொதுபல சேனா அமைப்பு, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா சபை ஆகியவற்றிக்கு சவால் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே. இந்த அமைப்புகள் ஆபிரிக்காவில் இயங்கி வரும் போக்கோ ஹராம் பயங்கரவாத அமைப்பு பற்றிய தமது நிலைப்பாட்டையும் தெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளார். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டுள்ள கொடிய…
10 வயது சிறுவன் வளர்த்த வாழைமரமொன்றில் அதிசயம்
(TM) இரத்மலானையைச்சேர்ந்த 10 வயதான நவம் அஞ்சன ஜயக்கொடி என்ற மாணவனால் எவ்விதமான பசளைகளும் இடாமல் வெறுமனே தண்ணீர் மட்டுமே ஊற்றி வளர்க்கப்பட்ட புளிவாழைமரமொன்று ஈன்ற குலையில், அதிசயமான வாழைச்சீப்பொன்று இருந்துள்ளது. அச்சீப்பில் 71 காய்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வேலை வாய்ப்புக்களை பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிலவுகின்ற தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் அமல் சேனாதிலங்கார ஆகியோருக்கு இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலா கவர்ச்சிமிக்க மற்றும் தொழில் வாய்ப்புகள் பரவலாக காணப்படுகின்ற நாடு என்ற வகையில் ஐக்கிய அரபு…
” காஸா இஸ்ரேலின் கைகளை முறித்து விட்டது “
இஸ்மாஈல் ஹனிய்யாவின் பேச்சிலிருந்து … ” எமது போராட்டமும், மக்களது உறுதியும் சேர்ந்து தான் காஸாவின் வெற்றியை உருவாக்கியது” ” எட்டு வருட முற்றுகைக்குள் இருந்தாலும் காஸா மக்கள் உண்மையில் வீரர்கள்.” ” காஸா இஸ்ரேலின் கைகளை முறித்து விட்டது “ ” இந்த உறுதிக்கு சுவனமும், உலகில் வெற்றியும் , மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழக் கிடைப்பதும் தான் கூலி” “இந்தப் போராட்டம் எங்களின் விவகாரத்தைப் பற்றி கவனம் செலுத்தும் படியாக முழு உலகையும் மாற்றி இருக்கிறது…
எமக்குத் துரோகம் இழைத்த அரபு நாடுகள் – ஹமாஸ்
Abusheik Muhammed ஹமாஸ் வெளியிட்டுள்ள செய்திகள் : 1.- பலஸ்தீன் முஜாஹித்களுடன் இணைந்து மக்களும் வெளிப்படுத்திய உறுதி எதிரிகளை தோற்கச் செய்துள்ளது. 2- இஸ்ரேல், 51 நாட்களாக சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட ஆயுதங்களை பாலஸ்தீன் மக்களுக்கு எதிராக செயல்படுத்தியது பாடசாலைகள், பள்ளிவாயல்கள், விளைச்சல் நிலங்கள், வீடுகள், குடியிருப்புக் கட்டிடங்கள் … போன்ற அனைத்தின் மீதும் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியது. 2100 பேருக்கும் அதிகமானவர்கள் இறை பாதையில் கொல்லப்பட்டனர். 11000 பேர் வரை காயப்பட்டனர். இவர்களுள்…
