Main News
மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட தொடங்கஸ்லந்த கிளை உருவாக்கம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவருமான என்.எம். நஸீர் (MA) தலைமையில், ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் அஸ்ஹர் அவர்களின் ஏற்பாட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தொடங்கஸ்லந்த கிளை இன்று திங்கட்கிழமை (18) உருவாக்கம் பெற்றது. குருநாகல் மாவட்டம் ரிதீகம பிரதேசசபை தொடங்கஸ்லந்த கிராம உத்தியோகத்தர் பிரிவை மையப்படுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச அபிவிருத்தி நலனுக்காக இந்தக் கிளை ஆரம்பிக்கப்பட்டமை…
பிரதி அமைச்சராக புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்!
-ஊடகப்பிரிவு- கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட புத்திக்க பத்திரன, தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இன்று காலை (21) இடம்பெற்ற இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாஸ உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
‘அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட பானகமுவ புதிய மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்தவும்’ என்.எம்.நஸீர்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பானகமுவ மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்த பாடசாலை தக்கியா மக்தப் கட்டிட வேலைகளை மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்தலைவரும் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் நேற்று (20) நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன் போது மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துமாறு ரிதீகம மக்கள் காங்கிரஸ் பிரதேசசபை உறுப்பினர் அஸ்ஹர் அவர்களுக்கு பணிப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியின்…
‘இலங்கையின் சிறப்புத் தர உற்பத்திகளுக்கு பஹ்ரைனில் பெரு வரவேற்பு’ அமைச்சர் ரிஷாத்திடம் பஹ்ரைன் வர்த்தக தூதுக்குழுவினர் தெரிவிப்பு!
இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு தருவிக்கப்படும் பல சிறப்புப் பொருட்களில் பஹ்ரைன் நாட்டவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களுக்கு தமது நாட்டில் மவுசு அதிகமுள்ளதாகவும் பஹ்ரைன் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவினர் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தனர். வளைகுடாவின் இதயம் என வர்ணிக்கப்படும் பஹ்ரைன் இராச்சியம் பலமானதும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான பிராந்திய கேந்திர நாடாகத் திகழ்கின்றது. வளைகுடா சந்தையில்…
மீள்குடியேற்றச் செயலணிக்கு எதிரான எறிகணைகள் சமூக நல்லிணக்கத்துக்கு வேட்டு வைக்குமா?
-சுஐப் எம். காசிம்- நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் சிதைந்து போன சமூக நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதில் இன்று வரைக்கும் மீள்குடியேற்றமே தடையாகவுள்ளது. ஏட்டிக்குப் போட்டியான பல கருத்தியல் தர்க்கங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடமாகாண செயலணியும் இந்தத் தர்க்கக் கணைகளுக்கு இலக்காகத் தவறவில்லை. எனினும் எல்லாத் தர்க்கங்களும் இனவாத நதியிலிருந்து பிரிந்து பாயும் கிளை ஆறுகளாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளன. எந்த நல்லிணக்கத்துக்காக மீள்குடியேற்றம் அவசியப்படுகிறதோ அந்த அவசியத்தின் இருப்பை பலமிழக்கும் வகையிலேயே இந்தத் தர்க்கங்கள் முளைவிட்டுக் கிளை விடுகின்றன….
‘அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடனும் வாழ்வதற்கு நாம் இறைவனை பிராத்திப்போம்’ பிரதியமைச்சர் அமீர் அலி!
நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு அனைவரும் இறைவனை பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இன்று பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒரு மாத காலம் பசித்திருந்து, விழித்திருந்து நற்காரியங்களில் ஈடுபட்டது போல் தொடர்ந்தும் எமது மார்க்கம்…
“பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், இன்றைய நன்னாளில் இலங்கை, பலஸ்தீன், மியன்மார் போன்ற நாடுகளில் வாழும் அகதிகளின் ஈடேற்றத்திற்காக அனைவரும் இறைவனை பிரார்த்திக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார். நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியிருப்பதாவது, “ரமழான் மாதம் முழுவதும் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்து, அதன் முடிவில் வருகின்ற பெருநாள், நோன்பாளிக்கு கிடைக்கும்…
நிந்தவூர் பிரதான பூங்கா புனரமைப்பு!
பொதுமக்கள் தமது ஓய்வு நேரங்களில் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் பூங்காக்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள பூங்காக்கள் புணரமைக்கப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார். புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நிந்தவூரின் பிரதான பூங்காவையும், அதனை சூழவுள்ள இடங்களையும் அழகுபடுத்தும் வேலைத் திட்டம், தவிசாளர் தாஹிரின் தலைமையில் இன்று (14) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிந்தவூரை பசுமை நகராக மாற்றும் திட்டங்களில்…
கிழக்கு மாகாணத்திற்கு இம்மாத இறுதிக்குள் இறால் குஞ்சுகள் வழங்க முடிவு!
கிழக்கு மாகாண இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு ஜூன்மாத இறுதிக்குள் இறால் குஞ்சுகளை வழங்குவதாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணை உரிமையாளர்களுடனான சந்திப்பு நேற்று புதன்கிழமை மாலை (13) கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் நெக்டா அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.தயாபரன், பிரதியமைச்சரின்…
இஸ்மாயில் எம்.பியினால் வறிய குடும்பங்களுக்கான உதவித் தொகை வழங்கி வைப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களினால், புனித நோன்புப் பொருநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு இலவச சேலைகள் மற்றும் உதவித் தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு, சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் இன்று (14) இடம்பெற்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் விதவை தாய்மார்கள், வயோதிபப் பெண்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை இஸ்மாயில் எம்.பியினால் வழங்கி வைக்கப்பட்டது.
கிராமிய அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்!
குளியாப்பிடிய பிரதேசசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கிடையிலான கிராமிய அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல், சதொச நிறுவனத்தின் பிரதித்தலைவரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளருமான என்.எம்.நஸீர் தலைமையில் (10)நடைபெற்றது. இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் பிரதேசசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதித் தவிசாளர் இர்பான், பிரதேச சபை உறுப்பினர் சபீர், குளியாப்பிடிய பிரதேச சபை அமைப்பாளர் ஷேக் சுலைமான்…
பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயிலுக்கு சம்மாந்துறை மக்கள் பெரும் வரவேற்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ். எம். முஹம்மட் இஸ்மாயில் பதவி பிரமாணம் செய்த பிற்பாடு, முதல் தடவையாக சம்மாந்துறை மண்ணுக்கு விஜயம் செய்து, மக்களால் வரவேற்பளிக்கப்பட்ட நிகழ்வு இன்று (13) அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. சம்மாந்துறை ஹிஜ்றா பள்ளிவாசல் முன்றலில் பெருந்திரளாக கலந்து கொண்ட சம்மாந்துறை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் உற்சாக வரவேற்பளித்தனர். துஆ பிரார்த்தனையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபை…
