Headlines

மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!




அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம், வரிப்பத்தான்சேனை, ஒலுவில், மற்றும் அட்டாளைச்சேனை போன்ற பிரதேச ஆதரவாளர்கள், பிரதேச உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தேர்தல்களில் களமிறங்கிய வேட்பாளர்கள் போன்றோர்களை சந்திக்கும் நிகழ்வு நேற்று (27.06.2018) சம்மாந்துறை மக்கள் பணிமனையில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இஸ்மாயிலின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,  கடற்தொழில் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பில், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் அன்சில், முன்னாள் நீதிபதி கபூர் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

(ன)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *