Main News
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்காதவர்கள் மக்களுக்கு துரோகம் இழைத்தவர்கள்
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்காத அரசியல்வாதிகள் மக்களுக்கு துரோகம் இழைத்தவர்களாக வரலாற்றில் இணைந்துவிடுவார்கள் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயர் நீதிமன்றம் வழங்கிய தீரப்பிற்கு அமைவாக முன்வைக்கப்ட்டுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனநாயகமானது. ஜனாதிபதி பதவியை ஜனநாயகமாக்கும் 19 ஆவது அரசியலமைப்பை நிறைவேற்றுவது அனைவரினதும் கடமையாகும். இதற்கு ஜாதிக…
நேபால் மக்களுக்கு அந்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவங்கள் வழங்கிய இலவச சலுகை.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபால் மக்கள் வெளிநாட்டில் இருக்கும் தமது சொந்தங்கள் , உறவுகள், மற்றும் நண்பர்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி துயரினை பகிர்ந்து கொள்வதற்காக அந்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவங்கள் அனைத்து நாடுகளுக்குமான வெளிச்செல்லும் அழைப்புகளை இலவசமாக வழங்கியுள்ளது. இந்த வாய்பினால் நேபாளில் உள்ளவர்கள் உலகெங்கிலும் வாழும் (குறிப்பாக ஐரோப்பிய, ஆசிய, அராபிய நாடுகளில் ) உறவினர்களை மற்றும் நண்பர்களை அழைத்து துயரினை பகிரிந்து கொள்வதினை அவதானிக்க கூடியதாக உள்ளது…
கடந்த ஆட்சியில் நானும் பாதிக்கப்பட்டேன்…சமல் ராஜபக்ஷ
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்க வேண்டுமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பங்களிப்புடன் கட்சியின் செயற்பாடுகளை மேலும் பலம்பொருந்தியதாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். “முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவை இணைந்துக்கொண்டு…
இன்று பெரும் பரபரப்புடன் 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற கூடும் பாராளுமன்றம்.. ஆதரவும், எதிர்ப்பும் இவர்கள் தான்
அரசியமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கென இன்றும் நாளையும் பாராளுமன்றம் கூடுகிறது. காலை 9.30 முதல் மாலை 6.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்திற்கான விவாதத்தை பாராளுமன்றத்தில் எடுக்க இருந்த நிலையில் மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஸ்ரீல. சு. க., ஐ. ம. சு. முவின் எதிர்ப்பே இதற்கு காரணமாக இருந்தது. என்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்…
நான் எப்போதும் மஹிந்த அணியே… ஏ.எச்.எம்.அஸ்வர் ஹாஜி
நாட்டின் சமகால அரசியலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மஹிந்த ராஜபக்ஸ்ஸவின் தலைமையில் ஓர் அணியும் அதே போலவே ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன தலைமையில் வேறொரு அணியுமாக செயற்படுவார்களாயின் நான் ஒரு போதும் நம்பிக்கை துரோகம் இழைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸவை விட்டு வெளியேற மாட்டேன் என்றும். எனது விசுவாசத்தின் அடிப்படையிலும், நன்றிக்கடனுக்காகவும் மஹிந்த அணியிலே இருப்பேன் என தேசியப்பட்டியல் பாராளுமன்ற உருப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நவமணி பத்திரிகைக்காவும், இணைய நாளிதல்களுக்காவும் மேற்கொண்ட நேர்காணலின் போது…
இனவாத சக்திகளுக்கு வன்னி மாவட்ட மக்கள் அடிபணியப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்
இந்த நாட்டில் மீண்டும் இனவாத சிந்தனைகளை விதைத்து அதன் மூலம் மனித அழிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு வன்னி மாவட்ட மக்கள் அடிபணியப் போவதில்லை என்ற செய்தியினை மீண்டும் வெகு விரைவில் கூறுவார்கள் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இனவாதம்,மதவாதம்,பிரதேசவாதங்கள் எமது முன்னேற்றத்தின் தடைக்கற்கல் என்றும் சொன்னார். வவுனியா மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு வவுனியா பட்டானிச்சூர் வெங்கடேஷ்வரா மஹாலில் இன்று இடம் பெற்ற…
25 வருடகாலமாக இயங்காமல் இருந்த ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீண்டும் ஆரம்பிக்க முதற்கட்ட நிதி ஒதுக்கீடாக 20 மில்லியன் ரூபா
இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 25 வருடகாலமாக இயங்காமல் இருந்த ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்ட நிதி ஒதுக்கீடாக 20 மில்லியன் ரூபாய்களை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒதுக்கீடு செய்துள்ளார். தமது அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆராயும் கூட்டம் கொழும்பில் இடம் பெற்ற போது அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இலங்கையின் பழமையான…
நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும், உதவும் நடவடிக்கைகளில் இலங்கை விமானப்படை
நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 875 எட்டியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படையினரும் இணைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. நேபாளத்தில் நிகழந்துள்ள அனர்த்தத்தினைத் தொடர்ந்து, நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவரினால் அவசர அழைப்பு இலக்கமொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 009779851020057 குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதி தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நேபாளத்திலுள்ள இலங்கை மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வினைப் பெறுவதற்கான காலம் மலர்ந்துள்ளது – சந்திரிக்கா
அஸ்ரப் ஏ சமத் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர்;; காலம் சென்ற எஸ்.வி. செல்வநாயகம் நினைவு தினப் பேச்சில் உரையாற்றினார். இந்த நாட்டின் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் ஆட்சியில் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. சரித்திரத்திலேயே என்றும் இல்லாதவாறு ஒரு சர்ந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு காரணம் என்னவென்றால் இரண்டு முக்கியமான தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. அவற்றோடு வேறு பல சிறு கட்சிகளும் அதற்கு ஆதரவாகப் செயல்படுகின்றன. இந்த…
சிங்கப்பூரில் தலை சிக்கிய நிலையில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தமிழர்கள் ! (வீடியோ இணைப்பு)
சிங்கபூரின் ஜோராங் கிழக்கு தெரு கவுசிங் போர்டில் 371 வது வீட்டில் ஒரு பச்சிளங்குழந்தை 2 வது மாடியின் கம்பித் தடுப்பைத் தாண்டி வந்த பச்சிளங்குழந்தையின் முதுகு பின் பகுதி கம்பியில் மாட்டியது. மேலே எழ முடியாமல், கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல் அந்தரத்தில் தவித்த அந்தக் குழந்தை கதறி அழுதது. குழந்தையின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இருவர், இரண்டாம் மாடிக்கு ஏற முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல்…
மாயமான மலேசிய விமானத்தின பாகங்கள் வங்காள விரிகுடாவில் கிடப்பதாக தகவல்
காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கிடப்பதாக விமான போக்குவரத்து துறை வல்லுநர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நகருக்குப் புறப்பட்டுச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்எச்370) திடீரென ரேடார் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பில் இருந்து விடுபட்டு மாயமாக மறைந்தது. புறப்பட்ட சிறிது நேரத்தில் காணாமல் போனதால் அது இந்தியப்…
உதய கம்மன்பில, ஞானசார தேரர் உட்பட சிலருக்கு எதிராக பிரபல சட்டத்தரணி குழு பொலிஸில் முறைப்பாடு
இன்று காலை 11 மணியளவில் பிரபல சட்டத்தரணி குழு ஒன்று, மாற்றியமைக்கப்பட்ட தேசியக்கொடியை ஏந்தி போராட்டம் செய்த உதய கம்மன்பில, ஞானசார தேரர், மதுமாதவ அரவிந்த, மற்றும் சிலருக்கு எதிராக கறுவாத்தோட்ட போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய உள்ளனர். தேசியக்கொடியை மாற்றி அமைப்பது சட்டக் கோர்வை படி தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
