Headlines

19வது திருத்தத்தை எதிர்ப்போர் அரசியலில் இருந்து தூக்கியெறியப்படுவர்: ரணில்

19வது திருத்தத்தை எதிர்ப்போர் அரசியலில் இருந்து தூக்கியெறியப்படுவர் எனவும் பொதுமக்களின் நிதியை வீண்விரயம் செய்தவர்களே இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதாகவும் பிரதமர் ரணில் கூறியுள்ளார். அலரிமாளிகையில் நேற்று மாலை கட்சியின் நடவடிக்கையாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 27ஆம் திகதியன்று 19வது திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும். இந்தநிலையில் புதிய நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்படும் என்றும் ரணில் தெரிவித்தார். இதேவேளை 19வது திருத்தத்தை எதிர்ப்பவர்களை, அதற்கு ஆதரவு வழங்கக்கோரி 27ஆம் திகதியன்று நாடாளுமன்றத்துக்கு அருகில் பாரிய…

Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்டநடவடிக்கை ; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நீதிமன்ற உத்தரவை மதிக்காது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த நபர்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்ட நிலையில், அதனை மீறி பிக்குகள், அரசியல்வாதிகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோத்தாபய ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு…

Read More

பிளவுபட்டிருந்த சர்வதேசத்தை இணைத்து ஆதரவு பெற்றோம் :ஜனாதிபதி பெருமிதம்

இலங்கையால் சர்வதேசமே இரண்டாகப் பிளந்தது.ஆனால் நாம் கடைபிடித்த பிளவுபடாத வெளிநாட்டுக் கொள்கையினூடாக  பிளவுபட்டிருந்த சர்வதேசத்தை  ஒன்றிணைத்து அவற்றின் ஆதரவை பெற்றுக் கொண்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான  அரசின் 100 நாள் திட்டம் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் விசேட உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், நான் ஜனாதிபதியாகப் பதவியேற்று 100…

Read More

19ஐ நிறைவேற்ற வலியுறுத்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள 19ஆவது திருத்தச் சட்­டத்­தினை நிறை­வேற்றக் கோரி அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் இன்று கொழும்பில் ஆர்ப்­பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. ஜனா­தி­பதி, பிர­தமர் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­விடின் அர­சுக்கு எதி­ரா­க போரா­டவும் மக்கள் விடு­தலை முன்­னணி தயா­ராகி வரு­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றது. ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி அதி­கார பர­வ­லாக்கம் 19ஆவது திருத்தச் சட் டம் நிறை­வேற்­று­வதில் இழு­பறி நிலைமை எழுந்­துள்ள நிலையில் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட வேண்டும் எனக்…

Read More

மே 1ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 5000 ரூபா மஹாபொல கொடுப்பனவு

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான அதி­க­ரிக்­கப்­பட்ட ரூபா 5000 மஹா­பொல புல­மைப்­ப­ரிசில் கொடுப்­ப­னவு எதிர்­வரும் மே மாதம் முதலாம் திக­தி­யி­லி­ருந்து வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். நாட்டின் எதிர்­கா­லத்தை கருத்தில் கொண் டே மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலி திட்­டங்­களை முன்­னெ­டுத்­தா­ரென்றும் அமைச்சர் தெரி­வித்தார். மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முத­லியின் 22ஆவது சிரார்த்த தினத்தை முன்­னிட்டு நேற்று கொழும்பு றோயல் கல்­லூ­ரிக்கு முன்­பாகவுள்ள தூபி அருகில் நடைபெற்ற லலித் அத் து­லத்­மு­த­லியின் நினைவு…

Read More

சுவிஸ் வங்கியில் உள்ள 92 இலங்கையர்களின் இரகசியக் கணக்குகள்.. அம்பலப்படுத்த இலங்கை வரும் சுவிஸ் நிபுணர்

இலங்கையர்களால் சுவிஸ் வங்கியில் இரகசியமாகப் பேணப்பட்டுவரும் வங்கிக் கணக்குகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் சுவிஸ் நிபுணர் க்ரெட்டா பெனர் இலங்கை வந்திருப்பதாகத் தெரியவருகிறது. சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் இலங்கை விடுத்த கோண்டுகோளுக்கு இணங்க இவர் இலங்கை வந்துள்ளார். 92 இலங்கையர்கள் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகளைப் பேணி வருவதாக சுவிஸ் வங்கி கோப்புக்களை ஆதாரங்காட்டி புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு கடந்த பெப்ரவரி மாதம் தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விடயம் குறித்து அரசு…

Read More

ACMC யின் முயற்சியில் கல்முனை சாஹிராக் கல்லூரிக்கு நிர்வாகக் கட்டிடமும், சம்சுலுல் வித்தியாலயத்திற்கு கேட்போர் கூடமும்

அஸ்ரப் ஏ சமத் நேற்று முன்தினம் கல்வியைமச்சர் அகிலவிராஜ் காரியவாசம் சந்திப்பின்போது அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் ஆகியோர்களினால் மேற்படி பாடசாலைகளது புதிய கட்டிடங்கள் நிர்மாணிப்பதற்கு கல்வி அமைச்சர் ஏற்றுக் கொண்டார். என வை.எல். எஸ் ஹமீட் தெரிவித்தார். கல்முனை சாஹிராக் கல்லூரி மற்றும் மருதமுனை சம்சுலுல் ஆகிய பாடசாலைகள் சமுகத்திற்கு செய்கின்ற பங்களிப்பு தொடர்பாகவும் அதே நேரம் அப்பாடசாலைகளில் நிலவுகின்ற பௌதீக வளக் குறைபாடுகள்…

Read More

ஜனாதிபதியின் விஷேட உரை

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புதிய அரசாங்கம் சிறப்பு சலுகைகளை வழங்கி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பு கோட்டைப்பகுதியிலும் படையினரின் நடவடிக்கைகளுக்காக காணிகள், கட்டடங்கள் கையடகப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் இன்று அவை திருப்பிக் கொடுக்கப்படுகின்றன. எனவே இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தும் வண்ணம் சில அரசியல்வாதிகள், விடுதலைப்புலிகள் குறித்த கருத்துக்கள் உட்பட்ட பொய்களை ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளும் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். சிங்கள மக்களை…

Read More

இரு நாட்கள் மாவட்டச் செயலாளர்களது மீளாய்வுச் செயலமர்வு

ASHRAFF SAMAD புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இரு நாட்கள் மாவட்டச் செயலாளர்களது மீளாய்வுச் செயலமர்வு ஒன்றை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று கொழும்பில் ஆரம்;பதித்து வைக்கபட்டது. இச் செயலமர்வு நேற்றும் இன்றும் இரு நாட்கள் நாட்டில் உள்ள சகல மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொள்கின்றனர். இன்று இச் செயல்மர்வினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜேசப் மைக்கல் பெரேரா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும்…

Read More

படை பட்டாளங்களுடன் வந்து நான் செயற்பட விரும்பவில்லை -ஜனாதிபதி

ஏ.எஸ்.எம்.ஜாவித் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்கும் முதலாவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் ஏற்பாட்டில் இன்று (23) மாலை கொழும்பு விகாரமகா திறந்த வெளியரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவின் தலைமையில் இடம் பெற்றது. இதன்போது அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்த, நிமால் சிறிபாலடி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, அத்ரலிய ரத்னதேரர், மற்றும் சோபித தேரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்….

Read More

நாடாளுமன்றத்திற்கு செல்ல பசிலுக்கு மன்று அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவை, அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்குமாறு கடுவெல நீதிமன்ற நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் பசில் மற்றும்  மூவர் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் மே மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும் பசிலை நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்குள்ள அனுமதியளிக்குமாறு சிறைச்சாலை வட்டாரங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, பசில் ராஜபக்ச  உள்ளிட்ட மூவரும்…

Read More

வெலிகடை சிறைச்சாலையில் கோட்டா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்கு இன்று சமூகமளித்தார். அங்கு வாக்குமூலமொன்றை அளித்த அவர் பின்னர் அங்கிருந்து வெளியேறி , முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன்  வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஸவை சந்திப்பதற்கு அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்குமுன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட து. இதில் கோத்தபாயவின் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Read More