Main News
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியிடத்தில் அமைச்சர் றிஷாத் பகிரங்கவேண்டுகோள்….!
வில்பத்து காட்டுப் பகுதியில் அத்துமீறி முஸ்லிம் குடியேற்றத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்வதாக மேற்கொள்ளப்பட்டுவரும் அபாண்டம் தொடர்பில் நேற்று அமைச்சரவையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடத்தில் அமைச்சரவை உப-குழுவொன்றினை நியமித்து விசாரனையொன்றினை செய்யுமாறு கோறியுள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த வேண்டுகோளை பகிரங்கமாக விடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக சில ஊடகங்களும்,இனவாத அமைப்புக்களும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக வடமாகாணத்துக்கு உட்படாத வடமேல் மாகாணத்திற்குட்பட்ட வில்பத்து காட்டினை அழித்து பிற மாவட்ட…
இன்று வில்பத்தை அண்டிய பகுதிகளில் இனவாத குழுக்கள் விஜயம் செய்த செய்தியின் மேலதிக விபரங்கள்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்) மன்னார் மாவட்டத்தின் வில்பத்து எல்லைக் கிராமமான சிலாவத்துறைப் பகுதியில் உள்ள மரிச்சிக்கட்டி, மேதரகம பகுதியை அண்டிய உப்பாறு உள்ளிட்ட கிராமப் பகுதியில் இன்று (13) இனவாத அமைப்புக்களான ராவணபலய, சிஹல உறுமைய மற்றும் ஜே.வி.பியின் பிக்குமார் உள்ளிட்ட குழுக்கள் சுமார் மூன்று நான்கு பேரூந்துகளில் சென்று அப்பகுதியைப் பார்வையிட்டதாகவும் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் காணப்பட்தாக அங்கிருக்கும் மீள் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு வந்தவர்கள் அப்பகுதி மக்களுடன் எந்தவிதச் சந்திப்புக்களையும் மேற்கொள்ள வில்லை…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு கண்டனம்
அபு அலா இந்நாட்டு முஸ்லீம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது மிக தைரியமாக குரல் கொடுக்கும் துணிச்சல்மிக்க ஒரேயொரு முஸ்லிம் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதினை குற்றம் காண்பதன் மூலம் இந்நாட்டு முஸ்லிம்களின் வாழும் உரிமையினை மறுக்க சிலர் முற்படுகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் எடுக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்.ஏ.சீ.நஜீப் தலைமையில் நேற்று புதன்கிழமை மாலை (13)…
மறிச்சுக்கட்டிக்கு பஸ்களில் சென்ற குழுக்களால் பதட்டம்
சிலாவத்துறை பிரதேசத்தின் மறிச்சிக்கட்டி மற்றும் கரடிக்குளி உள்ளிட்ட கிராமங்களுக்கு ராவணபலய உள்ளிட்ட இனவாத குழுக்கள் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளதால் அங்கு சிறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. முசலி பிரதேச செயலகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட குழுவின் விஜயத்தால் அப்பகுதி மக்கள் பயந்த நிலையில் உள்ளதாகவும், இவர்கள் சுமார் நான்கு பஸ்களில் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.
இலங்கை – கட்டார் உறவை மேம்படுத்த முயற்சி, இருநாட்டு பொருளாதாரப் பரிமாற்றத்தின் அளவு 417.4 மில்லியன்
இலங்கை மற்றும் கட்டாருக்கிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு துறைகளில் காணப்படும் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாஷிம், கட்டாரின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேக் அஹ்மத் பின் ஜாசிம் பின் முஹம்மத் அல் தானி ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பு அம்சங்களை மேம்படுத்தும் வழிகளை பரிசீலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் பொருளாதாரம்…
வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேறவில்லை – பஸில் ராஜபக்ஸ
வில்பத்து மற்றும் அதனையண்டிய பிரதேசத்தில் உரியமுறைகளை பின்பற்றியே வடக்கு முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டதாக பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வடக்கு வசந்தம் திட்டத்திற்கு தான் பொறுப்பாளராக நியமிக்கபட்பட்டிருந்த போது, உரிய சட்டங்களை பின்பற்றி அங்கு மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு, அரசாங்கத்திற்குரிய காணிகளை வழங்கியதாகவும், இவை முழுக்கமுழுக்க சட்டபூர்வமானவை எனவும் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசங்களில் 1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உண்டு. அதன்பின்னர் அவர்கள் புலிகளினால் பலாத்காரமாக விரட்டியடிக்கபட்டனர். பயங்கரவாத பிரச்சினை…
பிளாஸ்டிக் தராசுகளுக்கு தடை
பிளாஸ்டிக் தராசுகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தராசுகளை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தராசுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட தராசுகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இவ்வாறான தராசுகளே பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் கொள்வனவு செய்யும்பொருட்கள் உரிய நிறையில் காணப்படுகின்றதா என்பதனை பரிசோதனை செய்யும் உரிமை நுகர்வோருக்கு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு இருந்தால் 011- 2587199…
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் முன்னெக்கப்படுகின்றது!
முனவ்வர் காதர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தலைமையின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் முன்னெக்கப்படுகின்றது. இது வெளிப்படையான கொள்கைகளினை உறுதிசெய்கின்றது. இந்த சாதகமான மாற்றங்கள் இலங்கையுடனான சுவிட்ஸ்லாந்தின் வணிக தொடர்புகள் எளிதாக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.ஏற்றுமதி,வர்த்தகம் மற்றும் பரஸ்பர வர்த்தக ஊக்குவிப்பானது ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நோக்கமாக உள்ளதால் சுவிட்ஸ்லாந்து – இலங்கை இரு நாடுகளுக்கிடையிலான இணைந்த பொருளாதார சந்திப்புக்கள் வெற்றிகரமான முயற்சியாக அமையும் என்பதிலும் ஐயமில்லை. வெளிநாட்டு முதலீடுகளை விருத்திசெய்து முக்கியமாக…
அமைச்சர் றிஷாத் பதியுதினால் இலங்கை சட்டக் கல்லூரிக்கு நீர் குளிரூட்டும் இயந்திரம் வழங்கிவைப்பு
இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிசின் வேண்டுகோளுக்கினங்க கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவருமாகிய அமைச்சர் றிசாட் பதியுதினால் மாணவர்களின் பயன்பாட்டிற்கென 88,000ரூபா பெறுமதியான நீர் குளிரூட்டும் இயந்திரம் ஒன்றை தனது தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்கிவைத்தார். இந் நிகழ்வின் போது கருத்து தெரிவித்த இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிசின் தலைவர் ‘அமைச்சரிடம் நாங்கள் இவ் வேண்டுகோளை முன்வைத்தவுடன் அதனை ஏற்றுக்கொண்டு அதற்கான காசோலையை எம்மிடம் கையளித்தார். இதன் மூலம்…
ACMC -SLMC யோசனைகள், ஜனாதிபதி செயலகத்தில் இன்று கையளிப்பு
புதிய தேர்தல் முறை உள்ளடங்கிய 20 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று அமைச்சரவையில் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களிடையே பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், தேர்தல் முறை தொடர்பான அரசியல் கட்சிகளின் யோசனைகளை இன்று மதியம் வரை கையளிக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். இதன்படி, தமிழ் கட்சிகளின் தலைவர்கள், மக்களின் அபிலாஷைகள் அடங்கிய யோசனைகளை ஜனாதிபதி செயலயத்தில் கையளித்துள்ளதாக ஜனநாயக…
வடமாகாண மீள்குடியேற்றத்திற்கும் வில்பத்து காணிக்கும் சம்பந்தமே இல்லை – ஜம்இய்யத்துல் உலமா
மன்னார் முசலி – ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் எம்.எம்.தௌபீக் மதனி அவர்கள் வடபுல மீள்குடியேற்றம் தொடர்பாக விடுக்கும் ஊடக அறிக்கை. வடமாகாண மீள்குடியேற்றத்திற்கும் வில்பத்து காணிக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் சில கடும்போக்கு இனவாத அமைப்புக்களும் அதனோடு தொடர்புடைய ஊடகங்களும் அண்மைக்காலமாக போலிப்பிரச்சாரங்களை மெற்கொண்டு வருவதாக மன்னார் முசலி – ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ஏம்.எம்.தௌபீக் மதனி தெரிவித்தார். வில்பத்து மீள்குடியேற்றம் எனும்போர்வையில் அண்மைக்காலமாக ஊடகங்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரச்சாரங்கள் தொடர்பாக விடுத்த ஊடக…
இலங்கைக்கு குதிரைகளை அன்பளிப்பு செய்தது இந்தியா
இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆறு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்திய அரசால் பயிற்சியளிக்கப்பட்ட இந்தக் குதிரைகள் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்தக் குதிரைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஒருங்கமைப்புத் தலைவர் பிரகாஷ் கோபாலன் இலங்கை இராணுவத்தினரிடம் இன்று இந்த குதிரைகளைக் கையளித்தார். குதிரைகளை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்றதுடன், இதன்போது…
