Headlines

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி – சாந்த பண்டார

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சிலர் அரசியல் இலாபத்திற்காக சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதி அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஊடக பிரதி அமைச்சர், சாந்த பண்டார தெரிவித்ததாவது; 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சிலர் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அதனை நிறைவேற்றாதிருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அதனால் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தமாகக் கொண்டு வந்து, தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சிறு…

Read More

சில அடிப்படைவாத பிரிவுகள் முன்வைக்கும் போலிக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சேறு பூசல்களை நம்ப வேண்டாம்

நாட்டில் யுத்தம் முடிவுற்று 6 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் புதிய ஆட்சியின் நோக்கத்தின் அடிப்படையில் அபிவிருத்தியும் நல்லிணக்க முயற்சியும் சரிநிகராக பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படவும் தீவிரவாதிகள் தலைதூக்கவும் இடமளிக்கப்படாது என்றும் தேசிய பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் முப்படையினரும் பாதுகாப்பு சபையில் வழங்கப்படும் ஆலோசனைக்கு அமைய திரம்பட செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். நாட்டில் உள்ள சில அடிப்படைவாத பிரிவுகள் முன்வைக்கும் போலிக் குற்றச்சாட்டுக்கள் மற்றும்…

Read More

20ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவு தயார் ?

எம்.ஐ.அப்துல் நஸார் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு வருவதாக சட்ட வரைஞர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜீ.எஸ்.அருண ஷhந்த டி சில்வா தெரிவித்தார். முதற் பிரதி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் அது சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்படவுள்ளது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவினை சத்தமேதுமின்றி   செய்து முடித்த பெருமையும் சட்ட வரைஞர் திணைக்களத்தையே சாரும். அரச கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் கொள்கைககளை சட்ட வரைவுகளாக மாற்றுவது எமது திணைக்களமாகுமட எனவும்…

Read More

கண்டி மன்னர்கள் முஸ்லிம்களை பாதுகாத்து கௌரவித்தனர்- லக்ஷ்மன் கிரியெல்

அஸ்ரப் ஏ சமத் சிறுபான்மையினரை பாதுகாப்பதே ஐக்கிய தேசிய கட்சியினரின் கொள்கை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் கண்டி யை ஆட்சி செய்த சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களை பாதுகாத்து வந்தனர். ஒல்லாந்தர் காலத்தில் முஸ்லிம்களை அவர்கள் இனச்சுத்திகரிப்பு செய்ய முயற்சித்தனர் அப்போது ஸ்ரீ ராஜ சிங்க மன்னர் முஸ்லிம்களை அவர்களை கிழக்கிலும் அக்குரனையிலும்…

Read More

(தொடரும் வில்பத்து சர்ச்சை )….மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்ற நீதி மன்றம் செல்வோம் …! சிங்களே ஜாதிக பெரமுன

வில்பத்து வன பிரதேசத்தில் முஸ்லிம்களை சட்டவிரோதமாக குடியமர்த்தியுள்ளதாக  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மீது சிங்களே ஜாதிக பெரமுன  இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவில் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை செய்திருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த அமைப்பு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு திணைக்களத்தில் சாட்சி வாக்கு மூலங்களை பதிவு   செய்துள்ளது. அதன் பின்னர் இவ்விடயம் தொடரப்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிங்களே ஜாதிக பெரமுன அமைப்பின் தலைவர்  மன்னார் மாவட்ட செயலாளர் மற்றும் வன பாதுகாப்பு…

Read More

சுவிஸ் அரசு இலங்கையில் முதலீடுகளை செய்வது எமது நாட்டில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

– இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் – இலங்கையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு சுவிஸ் நாடு தயாராகவுள்ளதாகவும், அதற்கு இலங்கையின் முதலீட்டு தளம் சிறந்ததாக காணப்படுவதாக சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெனிஸ் வோர்கர் நெவில் கூன் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடத்தில் கூறினார். இலங்கைக்கு வருகைதந்துள்ள சுவிஸ் நாட்டின் உயர் மட்ட குழுவினருக்கும், அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம் பெற்ற வர்த்தக மேம்பாடு தொடர்பிலான கலந்துரையாடலின் போது இதனை அவர் சுட்டிக்காட்டினார்….

Read More

மகிந்தவின் ஆட்சியில் சிறுபான்மையினரின் வர்த்தகம் நசுக்கப்பட்டது – ரவி கருநாயக்க

அஸ்ரப் ஏ சமத் நிதி அமைச்சர் ரவி கருநாயக்க கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பில் சிறுபான்மை வர்த்தகர்கள் தமது வர்த்தக நிறுவனங்களை புதிதாக ஆரம்பிக்கவோ, அல்லது வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் முதலிடவோ மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அதற்குரிய சர்ந்தாப்பங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் திட்டமிட்டு சிறுபான்மையினரின் வர்த்தக நிறுவனங்களை எவ்வாறு மூடவைக்காலாம், அல்லது நஸ்டமாக்கலாம், பற்றவைக்கலாம் பாரிய வரிகளை அவர்கள் மேல் சுமத்தி வர்த்தகர்களை ஒழித்துக் கட்டுவார்கள். அல்லது சட்டவிரோத வியாபார நிறுவனம், என்ற ரீதியில்…

Read More

றிஷாதை அழிக்க சதி; அம்பலத்திற்கு வரும் ஆதாரங்கள்

எ.எச்.எம்.பூமுதீன்  முஸ்லிம் சமுகத்தை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலமிழக்கச் செய்யும் சதித்திட்டங்கள் மகிந்த ஆட்சியுடன் முற்றுப் பெறாது இன்று வரை தொடர்வது முஸ்லிம் சமுகத்தினர் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் தோற்றிவித்துள்ளது. 2012ல் பொதுபலசேனாவின் அராஜகத்துடன் ஆரம்பித்த முஸ்லிம் சமுகத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் அட்டூளியங்களும் 2015ல் சிங்கள ராவயவின் மூலம் மேலும் வலுப்பெற்றுவருகின்றது. பொதுபலசேனாவாகட்டும் அல்லது சிங்கள ராவய ஆகட்டும் இவர்களின் ஒரே குறிக்கோள் முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக அழிப்பதும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை இல்லாது…

Read More

இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை விசேட மின் கட்டணம்

குறைந்தளவிலான மின் கட்டண முறைமை இரவு 9.30க்குப் பின்னர் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது. மாலை 6 மணிமுதல், இரவு 09 மணிவரை காணப்படும் மின்சாரத்திற்கான மேலதிக கேள்வியை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமென அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் படகொட கூறினார். இதற்கமைய, இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரையான காலப்பகுதியில் விசேட கட்டணத்திற்கு அமைவாக மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மின்சாரத்திற்கான தேவை காலை 6 மணிமுதல்,…

Read More

சிறுவர் துஷ்பிரயோகம் பெரும்பாலும் உறவினர்களினாலேயே இடம்பெறுகின்றது -மாஹிர்

எம்.எம்.ஜபீர் தற்போது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் பெரும்பாலும் உறவினர்களினாலேயே இடம்பெற்று வருவதை காணக்கூடியதாகவுள்ளது. இதுவிடயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு -03ஆம்  பிரிவிலுள்ள நீண்டகால தேவையாக இருந்த மதீனா உம்மா வீதிக்கு குடிநீர்க் குழாய் பொருத்தப்பட்டு வீடுகளுக்கு குடிநீர் பெறக்கூடிய வசதியை  ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு அல்-மபாஸா மகளிர் சங்கம் ஏற்பாடு செய்த நன்றி கூறும் நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்…

Read More

எனது தந்தையும், எனது பரம்பரையிலுள்ளவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் – ஜனாதிபதி மைத்திரி

எனது பரம்பரையிலுள்ளவர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம் பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பரம்பரை பரம்பரையாக எனது குடும்பம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தனக்கு எப்போதும் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் கிடையாது எனவும் மக்களின் பிரச்சினைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்காக அர்ப்பணிப்புடன்…

Read More

கடந்த அரசின் நிதி பதுக்கல் விசாரணை உலக வங்கியிடம் ஒப்படைப்பு -ஜோன் அமரதுங்க

கடந்த அரசாங்கத்தின் பிரமுகர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பாரிய அளவில் பணத்தை பதுக்கிவைத்துள்ள விதம் தொடர்பாக பொது சமாதான மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க வெளிப்படுத்தியுள்ளார். கம்பஹா – திவுலப்பிட்டி கட்சி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இவ்வாறான முறையற்ற நிதி வைப்பீடுகள் தொடர்பிலான சர்வதேச ரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பான பொறுப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உலக வங்கியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.

Read More