Main News
இஸ்லாத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன
அஸ்ரப் ஏ சமத் இஸ்லாத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன. அதனை நீங்கள் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும், நான் நாளாந்தம் அவா்ளது உணவு, உடை, கலை கலாச்சார நிகழ்வுகள், அடிக்கடி எனது சக பரீட்சை ஆணையாளா்கள் ஏ.எஸ்.முஹமட், ஏ.சி சபீக் நிர்வாகம் ஆகியோரு டம் கலந்துரையாடி தெரிந்து கொண்டுள்ளேன். நோன்பு இரவையில் வயிறு நிறைய உணவு அருந்திவிட்டு பகலில் பசியுடன் இருப்பதில்லை அதில பல விடயங்கள் உள்ளன. . இறுதியாக வந்த நபி முஹம்மத் (ஸல்)…
500 குடும்பங்களுக்கு உலா் உணவு வழங்கிவைப்பு
அஸ்ரப் ஏ சமத் மலே அசியோசியனின் கீழ் உள்ள ருபீ பண்ட் 30 வருடகாலமாக நோன்பு காலத்தில் 500 குடும்பங்களுக்கு உலா் உணவு பெருநாள் மற்றும் பணம் ஆகியவற்றை வழங்கி வருகின்றது.இம்முறையும் சிலேவ் ஜலண்டில் உள்ள மலே மைதாணத்தில் வைத்து 500க்கும் மேற்பட்ட கொழும்பு வாழ் வறிய முஸ்லீம்களுக்கு உதவின. இந் நிகழ்வில் அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, புரவலா் ஹாசீம் உமா், திருமதி தஸ்னிம் முசாஸ், ரகிம் பல்லி, சம்கேம் டோல் ஆகியோா் இவ் உலா் உணவுகளை…
177 தேர்தல் சட்ட மீறல்கள் தேர்தல்கள் செயலகம் தகவல்
தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் 177 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. சட்ட விரோதமான முறையில் பொருட்கள் விநியோகித்தல் தொடர்பில் 87 முறைப்பாடுகளும், பதாகைகள் மற்றும் கட்அவுட்களை ஒட்டுதல் தொடர்பில் 24 முறைப்பாடுகளும், அரச சொத்துக்களை பயன்படுத்துதல் தொடர்பில் 20 முறைப்பாடுகளும், மற்றும் அரச ஊழியர்களை தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துதல் தொடர்பில் 06 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது….
மஹிந்தவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம்
மஹிந்த ராஜபக் ஷவை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நிரந்தரமாக அரசியலிலிருந்து விரட்டுவோம். தோல்வியடையும் போராட்டங்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம். எனவே , ஒரு முறை மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோம். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார். எனவே அவரை மீண்டும் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம் என்பதனை உறுதியாக கூறுகின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது…
பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக மஹிந்தவிடம் தெரிவித்தேன்: நிமல் சிறிபால டி சில்வா
பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கூறியதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத்தில் இறுதிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தானே இருந்து வந்ததாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தானே பிரதமராகும் நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், கட்சியை ஒருங்கிணைப்பதற்காகவும், வெற்றிபெற வைப்பதற்காகவும் பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் என்று அவர்…
ஜனாதிபதி நேற்று வழங்கிய விஷேட அறிவிப்பு
மஹிந்த ராஜபக்ஷவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஜனவரி 8ம் திகதிக்கு முன்பிருந்த அதே எதிர்ப்பே இன்றும் எனக்குள் உள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியுற்றது போன்றே அவர் எதிர்காலத்திலும் தோல்வியுறுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியாகத் தொடர்ந்தும் அவரே இருக்க வேண்டும் என ஜனாதிபதிக்கான காலத்தை நீடிக்க வழி வகுத்தார். அது போன்றே கட்சியில் எத்தனையோ சிரேஷ்ட உறுப்பினர்கள் இருந்தும் பிரதமராக தாமே வரவேண்டும் என்று சிந்தித்து மற்றவர்களுக்குள்ள…
மஹிந்தவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்!
பெரிய திருடனுக்கு வேட்பு மனு வழங்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறிய திருடர்களுக்கு வேட்பு மனு வழங்கவில்லையாம். இதிலேயே இவர்களின் தரத்தை நாம் புரிந்துகொள்ளலாம். அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டை குடும்ப ஆட்சி இல்லாமல் நாட்டை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்டியெழுப்புவோம். என்று நிதியமைச்சரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பெரும்பான்மை பலமற்ற எமது அரசாங்கத்தினால் இவ்வளவு வேலைத்திட்டங்கள் செய்ய முடியுமானால் அடுத்து நீங்கள் தரப்போகின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமுள்ள…
தேர்தல் சட்ட மீறல்கள் : பொது மக்கள் தகவல் தரலாம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்த முறைப்பாடுகளை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்க முடியும் என, பொலிஸ் தலைமையகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேட்புமனு வழங்கிய தினத்தில் இருந்து தேர்தல் நிறைவடையும் வரை பேரணி, வாகனப் பேரணி, ஊர்வலங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று வாக்கு கேட்பது உள்ளிட்டவை சட்டவிரோதமானதாகும். அதேபோல் பொது…
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு அடித்தளமிட்டவர் அமைச்சர் றிஷாத்
– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் முசலி மக்கள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை வெற்றி பெற களமிறங்குவதாக முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மத் காமில் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வெற்றி தொடர்பில் பாலக்குளி பிரதேச இளைஞர்கள் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அங்கு அவர் தெரிவிக்கையில் :– இன்று வடபுலத்து முஸ்லிம்கள் கௌரமானதொரு மீள்குடியேற்றத்தை…
யால சரணாலயத்தில் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை
யால தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யால சரணாலயத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிறுத்தை மற்றும் ஏனைய மிருகங்களை கண்டவுடன் ஏனைய வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கு தொலைபேசி மூலம் அறியப்படுத்துகின்றனர். இவ்வாறு அறிப்படுத்தியதும் விலங்குகள் இருக்கும் இடத்தை நோக்கி ஏனைய வாகனங்கள் வேகமாக வருகின்ற போது சிறுத்தை உள்ளிட்ட மிருகங்கள் வாகனத்தில் அடிப்பட்டு இறந்து விடுகின்றன. எனவே இதன் காரணமாக யால சரணாலயத்தினுள் செல்லும் பயணிகள் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை…
ஜனாதிபதியை சந்தித்தார் புதிய கடற்படை தளபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புதிய கடற்படை தளபதி ரவீந்திர குணரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் 20 ஆவது கடற்படை தளபதியாக பதவியேற்ற ரவீந்திர விஜயகுணரத்னவுக்கு ஜனாதிபதியினால் நினைவுப் பரிசொன்றும் இச்சந்திப்பின்போது வழங்கிவைக்கப்பட்டது.
நான் முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்டவன்: மஹிந்த
முஸ்லிம்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டவன் நான். முஸ்லிம்கள் நீங்கள் இந்த புனித ரமழானில் நோன்பு நோற்றுக் கொண்டு கேட்கும் துஆ பிரார்த்தனைகளை இறைவன் அங்கீகரிக்கிறான். நோன்பு பிரிவினை, சூழ்ச்சி, குரோதம், கெட்ட குணங்கள் என்பவைகளை உங்களிலிருந்தும் அகற்றிவிடுகிறது. முஸ்லிம்கள் நீங்கள் துவேசம், குரோதமற்ற நாட்டை உருவாக்குவதற்கு நிச்சயம் உதவி செய்வீர்கள் என நம்புகிறேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதுவிட்டு அவர் குருநாகல்…
