Main News
வெஸ்டர் றியாஸ் அ.இ.ம.கா. வில் இணைவு
-எம்.வை.அமீர்- ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினராகாவும் கட்சியின் உயர் பதவிகளிலும் இருந்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அக்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார். மாகாணசபை உறுப்பினரின் செயற்பாடுகளில் திருப்திகொண்ட அமைச்சர் றிசாத் பதியூதீன், அவரது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைத்து ஜெமீலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியதுடன் எதிர்வரும் ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தேசியப்பட்டியலில் அவரது பெயரை…
நாடு திரும்புகிறார் சந்திரிகா
முன்னாள் ஜனாதி பதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் அறிவிக் கப்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தல் கூட்டங்கள் பலவற்றில்…
மோசடி:கோத்தாவின் ஒப்பந்தங்கள் யாவும் பிரதமரினால் ரத்து
– லக்ஷ்மி பரசுராமன் – மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான வீடுகளை ஏழு மில்லியன் ரூபாவென பொய்கூறி தவணையடிப்படையில் விற்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் தலையீட்டி னையடுத்து ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா நேற்று தெரிவித்தார். ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டவர்களுள் அநேகமானவர்கள் தமிழர்களாக இருந்த போதும் ஒப்பந்தப் பத்திரங்கள் தமிழில் இல்லாமை கவலைக்குரிய விடயமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்காக…
வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்ச அதிபர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான அனுமதியை தேர்தல் ஆணையாளர் நேற்று முன்தினம் அரச அச்சகத்துக்கு வழங்கியுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அதிகளவில் போட்டியிடுவதால், வாக்குச்சீட்டு நீளமானதாக இருக்கும் எனவும் காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களே திட்டமிட்டு மஹிந்தவை தோற்கடித்தனர் : வசந்த பண்டார
ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் வாக்குகள் திட்டமிட்டு பக்கசார்பாக அளிக்கபட்டமையினால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தோற்கடிக்கப்பட்டார் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியகலாநிதி வசந்த பண்டார தெரித்தார். கொழும்பு தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அலுவலுகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் சிங்கள பௌத்த மக்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கே வாக்களித்தனர். அதனால் சிங்கள…
பூமி நீரில் மூழ்கும் அபாயம்!
இரண்டு பில்லியன் வருடங்களில் பூமி மீண்டும் தண்ணீர் மயமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீரிலிருந்து நிலம் வெளிவரத் தொடங்கியது எனவும் கண்டங்களின் மேலோட்டின் தடிமன், அதன் அதிகபட்ச அளவான 40கி.மீ., அளவை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எட்டியது எனவும் இலண்டன் நேச்சர் ஜியோசைன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருகிறது. கண்டங்களின் மேலோடுகள் அரிப்படைந்து வருவதால், 2 பில்லியன் ஆண்டுகளில் பூமி…
ஹிட்லரை விட படு தோல்வியை மஹிந்த சந்திப்பார்!
ஹிட்லரை விடவும் படுமோசமான தோல்வியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை குருநாகலில் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அறிவிலும், விழிப்புணர்விலும் சிறந்து விளங்கும் குருநாகல் மாவட்ட மக்களின் வாக்குகளை அபகரிப்பதென்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இயலாத காரியமென்றும் அவர் குறிப்பிட்டு்ள்ளார். அம்பாந்தோட்டையைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ, பரசூட் மூலம் குருநாகல் மாவட்டத்தில் வந்து குதித்தாலும், அவரது சாகசங்களைக் கண்டு குருநாகல் மாவட்ட…
மஹிந்த-கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவசர சந்திப்பு!
– ஆர்.யசி – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுத்திரக் கட்சி தலைமையகத்தில் அவசர சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று மாலை நாட்டு மக்களுக்கு நிகழ்த்தியிருந்த விசேட உரையினையடுத்தே மேற்படி சந்திப்பு தற்போது இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக் ஷவுடன் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த வைராக்கியம் இன்னும்…
கட்சியின் செயற்குழு கூட்டம் இரத்து : ஜனாதிபதி அதிரடி
இன்று இரவு நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்து செய்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இரவு 8 மணியளவில் இலங்கை மன்ற கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் செயலாளர்களிடம், கட்சி செயற்குழு கூட்டத்தை இரத்துச்…
மஹிந்த, தேர்தல் சட்டங்களுக்கு அமைய போட்டியிடவில்லை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முறைப்பாடு ஒன்றை செய்ய உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தனது அதிகாரங்கள் மற்றும் வளங்களை நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்வதாக முறைப்பாடு செய்யப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளது. குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் மஹிந்த, தேர்தல் சட்டங்களுக்கு அமைய போட்டியிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு உண்டான அதிகாரங்கள் மற்றும் வளங்களை…
விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படும்
வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது. விருப்பு இலக்கங்கள் மாவட்டச் செயலகங்களிலிருந்து தேர்தல் செயலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு சிரேஷ்ட அதிகாரிகளால் அது பரீட்சிக்கப்பட்ட பின் தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரத்துடன் வேட்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொகமட் தெரிவித்தார். இதேவேளை, மின் கம்பங்கள், மதில்கள் உள்ளிட்ட பொது இடங்களில், வாகனங்களில் தேர்தல் தொடர்பான போஸ்டர்கள் ஒட்டப்படக்கூடாது என்றும் தேர்தல் பிரசாரச் செயற்பாடுகளின் போது சூழல் மாசடையாமல் பாதுகாக்க ப்படுவது தொடர்பிலும் வேட்பாளர்கள்…
மஹிந்தவை துடைத்தெறிய ஒத்துழைப்பு வழங்குங்கள்!
மீண்டும் களமிறங்கியுள்ள மஹிந்த ராஜபக் ஷவை ஆகஸ்ட் 18 ஆம் திகதியுடன் அடியோடு ஒழித்து குழி தோண்டி புதைக்க ஆதரவு வழங்குமாறு மக்களை கோருகின்றேன். மஹிந்தவை அடியோடு துடைத்தெறிவதை உறுதிப்படுத்துங்கள். என்று பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலை வருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டை 10 வருடங்கள் ஆட்சி செய்தார். ஆனால் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. கல்வித்துறை சுகாதாரத் துறை வீழ்ச்சி கண்டது. நாடு கடன் சுமையால் வாடியது. ஊழல் தலைவிரித்தாடியது. மஹிந்த மக்களைசிந்திக்கவில்லை. கண்டி…
