Headlines

ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவும் அழகிய நிகழ்வு!

– சையது அலி பைஜி – எனது இல்லத்தை தொழகுடியர்களுக்காகவும் தவாப் செய்யகுடியவர்களுக்காவும் சுத்தம் செய்யுங்கள் என்ற இறைவனின் ஆணைக்கு இணங்க புனித இல்லத்தின் ஒரு பகுதியாக உள்ள ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவும் அழகிய நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு மக்காவில் நடை பெற்றது. மக்காவின் இமாம்களில் ஒருவரும் புனித தலங்களின் பராமரிப்பு குழுவின் தலைவருமான அப்துரஹ்மான் சுதைஸ் தனது கரங்களால் ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவுவதைதான் படம் விளக்குகிறது.

Read More

எரிவாயுக்களின் விலை குறைப்பு!

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ எரிவாயுவின் விலை 1496 ரூபாவாகவும்  5 கிலோ எரிவாயுவின் விலை  632 ரூபாவாகவும்  2.3 கிலோ எரிவாயுவின் விலை 300 ரூபாவாகவும்  காணப்படும்.

Read More

அரச வாகனங்களை பயன்படுத்த மாதம் 1 லட்சம் கட்டணம்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்க வாகனங்களை பயன்படுத்தும் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் குறித்த அமைச்சுக்கு மாதத்திற்கு ஒருலட்சம் ரூபா செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சி செயலாளர்கள் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த…

Read More

புள்ளே, லசந்த, எரிக் பதவி விலகல்!

பிரதி அமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன மற்றும் எரிக் வீரவர்த்தன ஆகியோர் பிரதி அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் பதவி விலகியதாக சுதர்ஷனி பெனாண்டோ புள்ளே தெரிவித்தார். பொதுத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்த பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தோல்வியடையும் என்ற கருத்து…

Read More

தேர்தல் ஆணையாளரை சந்திக்கின்றது கூட்டமைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்திக்க உள்ளனர். பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இன்று நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று முற்பகல் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பாரளுமன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து…

Read More

வாக்குகளைப் பெற மதுபானம் பகிர்ந்தளிப்பு

–எம்.ஐ.அப்துல் நஸார்– வாக்காளர்களுக்கு போதைப் பொருள் மற்றும் மதுபானம் ஆகியவற்றை பகிர்ந்தளிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் புத்தளம், பதுளை மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கெபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது தேர்தல் சட்டங்களை மீறுகின்ற செயற்பாடு மாத்திரமல்லாது மதுவரி கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுகின்ற செயற்பாடுமாகும் என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கிடையே மதுபானங்களை வினியோகித்தல் ஒரு வகையில் சமூக விரோத செயற்பாடு என்பதோடு இதன்…

Read More

கட்டுநாயக்கவில் விமானம் அவசரமாக தரையிறக்கம்

டுபாயிலிருந்து அவுஸ்திரேலிய நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான  A 380  விமானம்   அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே  விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 75 வயதுடைய அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு திடீர் சுகயீனத்துக்கு உள்ளானதாகவும் அவர் தற்போது நீர்கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கட்டுநாயக்க விமானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட குறித்த விமானம் மீண்டும் அவுஸ்திரேலியா நோக்கி…

Read More

மஹிந்தவை யானை தாக்கும்!

மரத்திலிருந்து வீழ்ந்த மஹிந்தவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் தகிதி யானைத் தாக்கும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம் எனது பிறந்த ஊராகும், கம்பஹாவிற்கு நான் பரசூட் மூலம் குதிப்பது மாவட்டத்தை சுத்தப்படுத்தவே தவிர கொள்ளையடிப்பதற்கு அல்ல. குட்டி ரோமபுரியை அழிவடையச் செய்தது யார் என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த காலங்களில் மக்கள் பணத்தில் கை வைக்காத காரணத்தினால் நாடாளுமன்றில் ஊமை போன்று செயற்படவில்லை. நாட்டில் நிலவிய சட்டம் ஒழுங்கீனங்களுக்கு எதிராக உயிர்…

Read More

மஹிந்தவை பிரதமராக்கியே தீருவோம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தேர்தலின் பின்னர் பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏகமனதான தீர்மானமாகும். அத்துடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஏக­ம­ன­தான தீர்­மா­னத்­துக்கு அமை­யவே பிர­தமர் தெரிவுசெய்­யப்­ப­டுவார். யார் தடுத்­தாலும் மஹிந்­தவை பிர­த­ம­ராக்கியே தீருவோம் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் தெரி­வித்­துள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கட்­சியின் தலைமைப் பத­வியில் இருந்து நீக்கும் எண்ணம் எமக்கு இல்லை. அவரே தொடர்ந்தும் தலை­வ­ராக இருப்பார் எனவும் அவர்கள்…

Read More

தேர்தலை கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தினால் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடை­பெற இருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை கண்­கா­ணிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட இருக்­கின்­றன. தேர்தலை கண்­கா­ணிப்­ப­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள தேர்தல் கண்­கா­ணிப்பு திட்­டத்தின் தலைமை அதி­கா­ரி­யாக ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தின் உறுப்­பி­ன­ரான கிறிஸ்­டியன் ப்ரேடா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர் எதிர்­வரும் சில நாட்­களில் இலங்கை வரவுள்ளார்.இதேவேளை இலங்கையில் நடை­பெற இருக்கும் தேர்­தலை எந்­த­வித குறுக்­கீ­டு­களும் இல்­லாமல் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக கண்காணிப்பதே எமது நோக்கம் என்று கிறிஸ்டியன் ப்ரேடா தெரிவித்துள்ளார்.

Read More

அளுத்கம முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும்

கடந்த ஆண்டு அளுத்கமவில் நடைபெற்ற இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இது குறித்து அரசு விஷேட கவனம் செலுத்தவேண்டுமென முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் வேண்டுகோள் விடுத்தார். அளுத்கம அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் தெஹிவளையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பிரதம அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இலங்கை இராணுவத்தின் மேற்குப் பிராந்தியத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவெல இந்நிகழ்வில் கலந்து…

Read More

றிஷாத் பதியுதீன் வடக்கு, கிழக்கை வழிநடத்தும் எல்லாத் தகுதிகளும் பெற்றவர்

– ஜெஸ்மி எம்.மூஸா – முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இரண்டரை தசாப்தங்களாக ஏகபோக அரசியல் கட்சியாக ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த மு.கா. வுக்கு எதிரான ம.கா வின் எழுச்சி முஸ்லிம்களுக்கு ஊட்டமளிக்கக் கூடிய ஊக்க மருந்து போன்றது என முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார் சம கால அரசியல் கள நிலைவரம் தொடர்பான கருத்துப் பரிமாறலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறியதாவது இத்தேர்தலில்…

Read More