Main News
ஹக்கீமின் தலைமையில் முஸ்லிம்களடைந்த நன்மையென்ன- றிஷாத் பதியுதீன்
மாற்றம் தேவை என்று சிந்திக்கும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு தனித்துவமாக முதன்முறையாக களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்திற்கு வாக்களித்து மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று புதிய வரலாறு படைக்க வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருது சீபிறிஜ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை(25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு…
அக்கரை மண்ணில் றிஷாதின் முதல் உரை!
– இப்னு ஜமால்தீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மாலை (26) அக்கரைப்பற்றில் நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் அ.இ.ம.கா வின் அக்கரைப்பற்று தேர்தல் காரியாலயம் அ.இ.ம.கா தேசியத் தலைவர் றிஷாத் பதியுதீனினால் திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மயில் சின்னம் 08ம் இலக்கத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் போட்டியிடும் சமுக சேவகரும் நீண்ட கால அரசியல் குடும்பத்தை பின்னணியாக கொண்டவமான கணக்காளர் நபீல் அவர்களை ஆதரித்து நடைபெற்ற இன்றைய கூட்டத்தில்…
அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் அடிமைத்தனத்தை துடைத்தெறிவேன் – றிஷாத் பதியுதீன்
எம்.வை.அமீர் கடந்த 30 வருடகாலமாக தங்களின் சுகபோகங்களுக்காக அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப்பெற்றுக் கொண்டு அவர்களை அரசியல் அனாதைகளாக வைத்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் அரக்கப்பிடியில் இருந்து அகன்று வாருங்கள் எல்லா உரிமைகளையும் பெற்ற உங்களை நீங்களே ஆளும் நிலைக்கு நாங்கள் கொண்டு வருகிறோம் அள்ளாதுவிடின் எதிர்காலத்தில் எங்களை நிராகரித்து விடுங்கள் என்கிறார் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியூதீன். அமைச்சர் றிசாத் பதியூதீன் அம்பாறைக்கு மேற்கொண்ட சூறாவளிப் பயணத்தின் இரண்டாம் நாளான 2015-07-26…
அ.இ.ம.கா வின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருடனான கலந்துரையாடல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்,ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான SSPமஜீத் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஊரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதோடு,அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு ஊரின் நன்மை கருதி ஊர் மக்கள் அனைவரும் SSP மஜீத் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ஒருமித்து கேட்டுக் கொண்டனர்..
மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல – றிஷாத் பதியுதீன்
அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் பிரதி நிதித்துவம் அநாதையாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தனிச்சின்னத்தில் இங்கு களம் இறங்கி இருப்பதாக அ.இ.மு.கா.தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் மருதமுனையில் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் தொழிலதிபர் சித்தீக் நதீரின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இங்கு வந்து புலம்புவதாக அறிகின்றேன்.ஏன்…
தேசியப் பட்டியல் ஊடாக ஜெமீல் பாராளுமன்றம் செல்வார்
எமது கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக ஏ.எம்.ஜெமீல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவிருக்கிறார். அந்த அதிகாரத்தின் மூலம் சாய்ந்தமருதின் அனைத்து தேவைகளையும் அவர் நிறைவேற்றித் தருவார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலகம் இன்று சாய்ந்தமருதில் திறந்த வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சீ பிரீஸ் மண்டபத்தில் இடம்பெற்ற உடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியுடன்…
மக்களுக்குப் பயன்படாத கட்சிகளோ அமைப்புகளோ அவசியமற்றது – றிஷாத்
தேசியப் பட்டியல் ஊடாக சாய்ந்தமருது ஜெமீலை பாராளமன்றம் அழைத்துச் செல்வேன் – றிசாத் ஏனைய கட்சிகளைப் போன்று ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையை தருவோம் என்று மக்களை ஏமாற்றும் கட்சி தங்களது கட்சி இல்லை என்று தெரிவித்த அமைச்சர் றிசாத், எங்களது கட்சி சொல்வதையே செய்யும் என்றும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தங்களது கட்சிக்கு கிடைக்கவிருக்கின்ற தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தில் ஒன்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸின் காங்கிரசின் கோட்டையான…
ACMC நிந்தவூர் கட்சிக் காரியாலயம் திறந்து வைப்பு
கட்சியென்றால் மார்க்கம் போல் நினைக்கின்றனர்.கட்சியினை வைத்து தொழில் செய்கின்றனர்.மக்களுக்கு உதவாத கட்சி அதனை விட்டுவாருங்கள் என்றால் ஏதோ மதத்தினை விட்டுவருவதால் பிரயத்தனம் செய்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் முஹம்மத் சிசானின் கட்சி அலுவலகத்தினை நிந்தவூரில் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ இந்த முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகத்தின் விளைவு அவர் ஆட்சியில்…
அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கவில்லை: சீன நிறுவனம்
எந்தவொரு அரசியல்வாதிக்கும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நிதியுதவி வழங்கவில்லை என்று சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த நிறுவனம், சர்வதேச மதிப்புப்பெற்ற தமது நிறுவனத்தை உள்ளுர் ஊடகம் ஒன்று பிழையாக கருதி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் எமது நிறுவனம் தொடர்பில் தவறான எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அத்துடன் முதலீட்டு நாடுகளுக்கு பிழையான சமிஞ்சையை காட்டக்கூடாது. இலங்கையின் அபிவிருத்தி…
நாட்டை கட்டியெழுப்ப பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் – ரணில்
ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற நல்லாட்சிக்கான புரட்சியை வெற்றி கரமாக முன்னெடுக்க ஆகஸ்ட் 17ஆம் திகதி மக்கள் எமக்கு பெரும்பான்மையை வழங்கி நாட் டில் ஐ.தே.முன்னணியின் ஸ்திரமான ஆட்சிக்கு வித்திட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறைகூவல் விடுத் தார். அரச மாளிகை அமைப்பது எனது நோக்கமல்ல. உங்கள் வீடுகளை அரசமாளிகை யாக மாற்றுவதே எனது நோக்கமாகும் என் றும் பிரதமர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஐ.தே.மு.வின் கொள்கை பிரகடனத்தை வெளியிட்டு வைத்து…
அரசு எமக்கு கிடைத்ததே தவிர அரசாங்கம் கிடைக்கவில்லை : ராஜித
ஜனவரி 8ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த சந்தர்ப்பத்தில் எமக்கு அரசு கிடைத்தபோதும், அதனை இராச்சியம் செய்யும் அரசாங்கம் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு விஹாரமா தேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ‘பசில் ராஜபக்ச கைது…
“நாட்டின் தேசிய பாதுகாப்பில், விழிப்புடன் செயற்படும் இராணுவம்”
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விழிப்புடன் செயற்பட்டுவருவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலோரப் பகுதிக்கு அருகாமையில் உச்சிப்புளி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் 75 சயனைட் குப்பிகள், 7 கைத்தொலைபேசிகள், 300 கிராம் சயனைட் பவுடர் உட்பட மேலும் பல பொருட்களுடன் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேரை பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்தனர். இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இராணுவ ஊடகப்பேச்சாளர்…
