Main News
பஞ்சமா பாவங்களை செய்துள்ளார் மஹிந்த : அசாத் சாலி
பௌத்த மதத்தில் செய்யக்கூடாதென கூறப்பட்டுள்ள ஐந்து மகா பாவங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்துள்ளதாக மத்திய மகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொலை, கொள்ளை, களவு, காமம், தெய்வ நிந்தனை என அனைத்து பாவங்களையும் இவர் செய்துள்ளதாக குறிப்பிட்ட அசாத் சாலி, மக்கள் இதனை நன்கு அறிவர் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், ஒரு ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த தற்போது நாடாளுமன்ற தேர்தலில்…
லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மிக முக்கிய தகவல்கள் பல இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. லசந்த படுகொலை செய்யப்படும்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரிடமிருந்தே இந்தத் தகவல்கள் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இந்த நபரிடமிருந்து பெறப்பட்டுள்ள முக்கிய தகவல்களின் அடிப்படையில் இரகசியப் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ள இந்த நபர்…
றிஷாத் நாளை அம்பாறை விஜயம் அ.இ.ம.கா வில் இணைய பலர் முஸ்தீபு
– ஏ.எச்.எம் பூமுதீன் – பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டு தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் நாளை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார். நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமையும் அம்பாறை மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் தலைவர் ரிசாத் பதியுதீன் தனது தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளார். நாளை மருதமுனையிலிருந்து தனது சூராவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரிசாத் பதியுதீன் நிந்தவூர், பொத்துவில்…
ஆசியாவின் ஆச்சரியத்திற்கான பயணம் ஆகஸ்ட் 18 இல் உதயமாகும் : மனோ கணேசன்
பிரிவினைவாதம், இனவாதம், மதவாதம் என்பவற்றை வீழ்த்தி உண்மையான ஆசியாவின் ஆச்சரியத்திற்கான பயணம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பு விஹாரமா தேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், ஆச்சரியத்தை நோக்கிய அந்த பயணத்தில் தாமும் இணைந்து கொண்டமை பெருமைக்குரிய விடயம் என்றும்…
கட்சிகளின் செயலர்களுக்கு மாத்திரம் பாதுகாப்பு
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு மாத்திரம் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார். கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்களைத் தவிர்த்து ஏனைய வேட்பாளர்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்க இயலாதெனத் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கட்சிகளின் செயலாளர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார். யாரேனும் வேட்பாளருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமானால் அதுபற்றி தேர்தல் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் கட்சிகளின் செயலாளர்களுக்குத தெரியப்படுத்தியுள்ளார். இதற்கமைய கட்சிச் செயலாளர் மற்றும்…
பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் – ரணில்
ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் வெளியிடப்பட்டது. (முழு விபரம்) ஐந்து முக்கிய வேலைத்திட்டங்களை கொண்டதாக தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் எமது பொருளாதாரக் கொள்கை அனைவரையும் செல்வந்தர்களாக்கும் கொள்கையாகும் என்று அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதாரம் எமது ஆட்சியில் 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கைஎடுக்கப்படும். ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்வோம். தெற்காசிய…
தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் பூர்த்தி
பொதுத் தேர்தலுக்கான தபால்மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அச்சிடப்பட்ட அனைத்து தபால் மூலம் வாக்காளர்களின் வாக்கட்டைகளும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஏனைய உத்தியோகபூர்வ வாக்கட்டைகள் அனைத்தும் விரைவாக அச்சிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை கிடைத்துள்ள விண்ணப்பங்களின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்போர் எண்ணிக்கை 25இ000 வரை அதிகரித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவிக்கின்றார். இதனிடையே, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான…
அ.இ.ம.கா. வின் திகாமடுல்ல கூட்டம்!
– அப்துல் அஸீஸ் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை மாவட்டத்தில்) போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்சியியின் விஷேட கூட்டம் (23) மாலை அதன் செயலாளர் நாயகத்தின் கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளை தொகுதிகள் ரீதியாகவும், பிரதேசம்கள் ரீதியாகவும் விஸ்தரித்து முன்னெடுப்பது தொடர்பாகவும், தேர்தல் கால சட்டதிட்டம்களை கடைபிடிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், எதிர்வரும் சனி,…
ISIS பற்றிய இலங்கை முஸ்லிம்களின் கூட்டுப் பிரகடனம்!
– அஸ்ரப் ஏ சமத் – அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஊடகவியலாளர் மாநாடு ஐ.எஸ் பற்றிய இலங்கை முஸ்லீம் அமைப்புக்களின் கூட்டுப் பிரகடனப்படுத்தப்பட்டது. மேற்படி விடயமாக நேற்று மாளிகாவத்தையில் உள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையகத்தில் அதன் தலைவர் அஸ் ஷேக் றிஸ்வி முப்தி தலைமையில் ஊடக மாநாடு நடைபெற்றது. இங்கு அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் – 1924ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உலமா சபை இன்றும் ஒரு கட்டுக்கோப்பின்…
நாட்டு மக்களின் எதிர்காலமே எமது நோக்கம் – பிரதமர்
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே நாட்டை மீண்டும் சீரழிக்க மஹிந்த ராஜபக்ஷவிற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதா என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “60 மாதங்களில் புதிய தேசத்தை உருவாக்குவதற்கான ஐந்து திட்டங்கள்” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல்…
‘புலிகளுக்கு மஹிந்த கப்பம் செலுத்தினார்’
2009ஆம் ஆண்டு நாட்டில் பயங்கரவாதம் தோல்வியடைய செய்யப்பட்டது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பலத்தை பெற்றது பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அல்ல.விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இதற்காக அரசாங்க திறைசேரியின் பணத்தை பெற்று அவர் புலிகளுக்கு கப்பமாக செலுத்தினார்’ என்றார். tm
ஆட்சியை கைப்பற்றுவோம் : ஞானசார தேரர் முழக்கம்
பொதுத் தேர்தலில் நாம் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் பெயரை மாற்றுவோம்.சிங்கள மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவோம்.என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரும்,வேட்பாளருமான கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டின் தலைவர் மற்றும் கட்சித் தலைவர்கள் அனைவருமே தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.அவர்களுக்குச் சிங்கள மக்களின் உரிமை குறித்து கவலைகள் இல்லை….
