Main News
435 முறைப்பாடுகள்
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 435 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
பிரபல கால் பந்து நட்சத்திரம் இமானுவேல் இஸ்லாத்தில் இணைந்தார்
உலகின் மிக சிறந்த கால் பந்து நட்ச்சத்திங்களில் ஒருவர் இமானுவேல். இவர் நைஜிரியாவை சார்ந்தவர். 2008 ஆம் ஆண்டு ஆப்ரிக்க கண்டத்தின் மிக சிறந்த கால் பந்து நட்சதிமாக தேர்வு செய்ய பட்டவர் அவர் 2000 மாவது ஆண்டில் இருந்தே சர்வதேச கால் பந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். 63 சர்வதேச போட்டிகளில் கலந்து 29 கோல்கள் அடித்தும் சாதனை படைத்துள்ளார் அண்மை காலங்களில் அவரது சிந்தனை இஸ்லாத்தை நோக்கி திரும்பியது இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்த…
அனைத்து கொடுப்பனவுகளும் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் – பிரதமர்
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கொடுப்பனவுகளும் அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். காலி அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கோப் உபகுழுவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
மத்திய வங்கி பிணை முறியுடன் தொடர்புடைய கோப் உபகுழு அறிக்கையை வெளியிட பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் சபாநாயகரின் பணிப்பில் கோப் உபகுழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அறிக்கையை சபாநாயகருக்கு கையளிக்கும் முன்னர் பகிரங்கப்படுத்துவது சட்டவிரோத செயல் என்றும் அதற்கு தடை விதிக்குமாறும் கோரி பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மனு தாக்கல் செய்திருந்தார். அந்த…
அது கோட்டாவின் காலத்தில் புலிகளிடமிருந்த பெறப்பட்ட வௌ்ளை வேன்
இன்னும் வௌ்ளை வேன்கள் இருக்கலாம் என்றும் அவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நிர்வகிக்கப்ட்டு வந்ததாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ வீரர்கள் மற்றும் வௌ்ளை வேன் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். இதுதவிர நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியேரை…
தனிப்பட்ட தோ்தல் பிரச்சாரத்துக்கு அரச சொத்துக்களை பாவிக்க விரும்பவில்லை -சஜித்
அஸ்ரப் ஏ சமத் நான் கடமையாற்றம் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச கபினட் அமைச்சா் அவருக்கு அமைச்சின் சேவைகளை செய்யும் போது அமைச்சில் ஊடகப்பிரிவை பாவிக்க முடியும். அவ்வாறே கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சா்கள் இந்த ஊடகத்தை பாவித்தாா்கள். ஆனால் தற்பொழுது ஹம்பாந்தோட்டையில் நான் ஒரு பாராளுமன்ற வேட்பாளா். அமைச்சின் ஊடகப் பிரிவு எனக்கு வேண்டாம். நான் அரச சொத்துக்களை எனது தனிப்பட்ட விடயங்களுக்கு பாவிக்க கூடாது. அந்த அமைச்சில் சம்பளம் வாகனங்கள், வதிவிடம்…
மென்பொருள் உருவாக்க போட்டியில் எல்.ஹஸீப் முஹம்மத் இரண்டாமிடம்
– எஸ்.எம்.எம்.றம்ஸான் – கொழும்பு விசாகா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, INFOV 2015 ICT மற்றும் தொழில்நுட்ப தொடரில் பாட ரீதியான கணினி மென்பொருள் உருவாக்க போட்டியில், அகில இலங்கை ரீதியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவரான எல்.ஹஸீப் முஹம்மத் 02ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார். . இப்போட்டி கொழும்பு விசாக்கா கல்லூரி மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் கணினிப் பொதிகளையும்…
ACMC 8 ஆசனங்களை பெறும் – அமீன் ஹாஜியார்
பாறுக் சிகான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி நாடளாவிய ரீதியாக 8 ஆசனங்களை வெல்லும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.சி.எம் அமீன் ஹாஜியார் தெரிவித்தார். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக வினவியபோது மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் , இவ்; ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் எமது கட்சிக்கு முக்கியமானது.இதில் 8 ஆசனங்களை கட்சி பெறுவதில் எவ்வித…
அம்பாறையில் றிஷாதுக்கு வெற்றி கிடைக்கும் – அதாவுல்லாஹ்
ஏ.எச்.எம்.பூமுதீன் அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா வெற்றி பெறும். அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம் உறுதி என முன்னாள் அமைச்சரும் தே.கா தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார். தேசிய காங்கிரஸின் மருதமுனை மத்திய குழுவினரை அக்கரைப்பற்றில் வைத்து சந்தித்து உரையாடும்போதே மேற்கண்ட கருத்தை உறுதியாக தெரிவித்துள்ளார். அ.இ.ம.கா அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் என்பது இறுதிவரை எதிர்பார்க்கப்படாத ஒரு விடயம். எனினும், அக்கட்சி தனித்து களமிறங்கியுள்ளமை மு.கா.வுக்கு உண்மையில் சவால்தான். அ.இ.ம.கா அம்பாறையில் போட்டியிடுவதை நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என…
மஹிந்தவின் கூட்டத்திற்கு சென்று திரும்பும்போது, கஞ்சா ஏற்றி வருகின்றனர் – அநுரகுமார
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலக்கி கொள்ள வேண்டும் என ஜே.வீ.பி கோரியுள்ளது. ஜே.வீ.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மாத்தறை – வெலிகமயில் அண்மையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் அநுராதப்புர கூட்டத்திற்கு சென்று திரும்பும்போது. கஞ்சாவை ஏற்றி வருகின்றனர். மஹிபால ஹேரத்தின் கஞ்சா போதைப் பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டன. இவ்வாறான சந்தர்பத்தில் தமது வாகனத்தை…
கல்லாறு விபத்தில் உயிரிழந்தவர்களின் சுவன வாழ்வுக்கு பிரார்த்திகின்றேன்
இன்று கல்லாற்று பாலத்தில் இடம் பெற்ற வாகன விபத்து குறித்து கேள்வியுற்றதும்,தாம் பெரும் அதிர்சியடைந்துள்ளதாகவும், மரணமானவர்களின் சுவன வாழ்வுக்கு பிரார்த்திப்பதகாவும் தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் துரித சுகத்திற்குமாக பிரார்த்திப்பதாகவும் கூறினார். இன்று காலை புத்தளத்திலிருந்த எலுவலங்குளம் ஊடாக பெரியமடுவிக்கு பயணித்துக்கொண்டிருந்த போது ஏற்பபட்ட விபத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் பெரும் கவலையடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு அல்லாஹவின் அருளும்,மன ஆறுதலும்…
தகுதியான வேட்பாளருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்யுங்கள்
இந்த மாவட்ட மக்களது வாழ்வுக்காக போராடக் கூடிய சிறந்த வீர தளபதிகளே இன்று தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்கு தேவையான சூழலை உருவாக்கித் தர காத்திருக்கும் ரணில் விக்ரம சிங்கவின் தலைமையிலான ஆட்சியொன்றினை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைப்போம் எனவும் அழைப்புவிடுத்தார். பாராளுமன்றத்தேர்தலில் ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தில் போட்யிடும் வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை கிண்ணியா நகர சபை மைதானத்தில்…
