Main News
அமீர் அலியின் வெற்றியினை உறுதிப்படுத்தும் முகமாக வீடுவீடாக சென்று பிரச்சாரம்
– அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி – சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டதில் முதலாம் இலக்க யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ்.எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வெற்றியினை பலப்படுத்தும் முகமாக ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி தனது ஆதரவாளர்களுடன் 08.08.2015 சனிக்கிழமைகல்குடா ஓட்டமவடி இரண்டாம் வட்டார கிராம சேவைக்குட்பட்ட பிரதேசத்தில் வீடுவீடாகச் சென்று மக்களை தெளிபடுத்தும் நிகழ்வில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதனை அவதானிகக் கூடியதாக இருந்தது. இந்நிகழ்வில் ஓடாமவடி…
கொழும்பில் உள்ள 9000 பிச்சைக்காரர்களிடம் கைத்தொலைபேசிகள்
கொழும்பு நகரில் உள்ள பிச்சைக்காரர்களில் 9 ஆயிரம் பேரிடம் கையடக்க அலைபேசிகள் இருப்பதாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வின்மூலம் தெரியவந்ததாக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ‘இலங்கையில் இன்று 6 மில்லியன் ஸ்மார்ட் அலைபேசிகள் காணப்படுகின்றன. 27 இலட்சம் பேஸ்புக் கணக்குகள் காணப்படுகின்றன’ என்றார்.(tm)
வசீம் தாஜுதீனின் ஜனாஸா இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டது
வசீம் தாஜுதீனின் ஜனாஸா இன்று காலை அதிகாரிகளினால் தோண்டி எடுக்கப்பட்டதாக அதேவேளை ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டுள்ள மையவாடிக்கு செல்ல எந்தவொரு ஊடகவியலாளருக்கும் அனுமதி வழங்கப்படவில்லையென தெஹிவளை முஹியித்தீன் பள்ளிவாயலில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோண்டப்படும் ஜனாஸாவை வீடியோ காட்சிகளோ, புகைப்படமோ எடுக்கக் கூடாது என தாஜுதீனின் குடும்பத்தார் பொலிஸாரிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்கவே , மேற்படி ஊடகவியலாளர்கள் மையவாடிக்குச் செல்லக் கூடாது என கண்டிப்பான உத்தரவைப் பொலிஸார் பிறப்பித்துள்ளனர். அதேவேளை ஜனாஸா அடக்கபட்டுள்ள இடத்தை சுற்றி கருப்பு நிற…
எல்லாம் இந்த வெள்ளிக்கிழமை இரவுடன் முடிகிறது..
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசார செயற்பாடுகள் யாவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் இறுதிக் கட்ட பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் குருணாகல் மாவட்டத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி பிரசாரக் கூட்டம் கொழும்பு மருதானையிலும் நடைபெறவுள்ளன. அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி உள்ளிட்ட கட்சிகளும்…
கற்ற சமூகமொன்றினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
கற்ற சமூகமொன்றினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,பாலர் கல்வி என்பது மிகவும் முக்கியமானது அவர்களை நெறிபிரழா செய்வதற்கு அது இன்றியமையாததாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசி தலைவர் றிசாத் பதியுதீன் சாய்ந்தமருதுவில் கூறினார். சாய்ந்தமருதுவில் இயங்கும் கல்வி நிறுவனமான கொம்டெக் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கான டிப்ளோம பாடநெறியினை நிறைவு செய்த கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு…
ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார்
முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் சந்திரிக்கா குமாரணதுங்க ஆகியோர் ஜனாபதியில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் செயற்பட்டதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர்,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரது மறைவிற்கு பின்னர் தலைவராக வந்த ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார் என்றும் கூறினார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதிரத்து வரிப்பொத்தாஞ்சேனையில்…
தொழுகைக்காக வந்த அமைச்சரை தடுக்க முயன்ற மு.கா வின் வங்குரோத்து தனம்!
சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாசலுக்கு லுஹர் தொளுஹைக்காக வருகை தந்த ரிசாத் அமைச்சரை தடுக்க முயன்று மூக்குடைபட்டனர் மு காவின் வங்குரோத்து அரசியல் வாதியான கல்முனையின் அதிகாரி தனது வங்குரோத்து நிலைமையை இதன் மூலம் வெளிக்காட்டியுள்ளார். ரிசாத் மக்களுடன் சந்தித்து விட்டால் மக்கள் மனங்களில் இடம்பிடித்துவிடுவார் என்கிற அச்சத்தில் இன்று செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர் மு காவின் அரசியல் தலைமைகள். அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் ஜெமிலும் சிராசும் கலந்துகொண்டிருந்தனர். இவர்களின் பள்ளிவாசல் வருகையை தடுக்க பொலிசாரை பயன்படுத்தியும்…
முஸ்லிம் வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்
எதிர்வரும் 17ம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியே ஆட்சியமைக்குமென தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சரும், வேட்பாளருமான றிஷாட் பதியுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களை பெற்று வெற்றியீட்டுமென தெரிவித்தார். முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம்கள் மீதான விரோத மனப்பான்மையினால்தான் அவர் ஜாதிபதி தேர்தலில் தோட்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இன்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது. முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தற்காலிகமாக…
பெண்களுக்கு வாக்களியுங்கள்!
– அஸ்ரப் ஏ சமத் – இந்த நாட்டில் உள்ள 52 வீதமான பெண்கள் 15வது பொதுத் தோ்தலில் எந்தக் கட்சியோ அல்லது சுயாதீனமாக போட்டியிடும் பெண்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள். நாடு பூராவும் பெண்கள் அமைப்பு பிரச்சாரம் இந்தப் பாராளுமன்றத்தில் ஆகக் குறைந்தது 45 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். மேற்படி விடயமாக பெண்கள் அனைத்து ஊடக அமைப்பின் பணிப்பாளா் சேபாலி கொட்டகொட, இணைப்பாளா் வெயிலா பேரா, ஆராய்ச்சி பொது அமைப்பின் இலங்கைப் பணிப்பாளா் நவாஸ் மொஹமட்,…
இது ஜ.தே.கட்சிக்கு ஒரு பாரிய சக்தியாகும் – கரு
– அஸ்ரப் ஏ சமத் – கொழும்பில் பேரோச முசம்மிலின் ”காந்த சவிய 3வரு வருடாந்த மாநாடு நேற்று கைப்பாா்க் மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சா் கரு ஜயசூரிய ஜ.தே.கட்சி தவிசாலாளா மலிக் பிரச்சாரம் இங்கு உரையாற்றிய அமைச்சரும் ஜ.தே.கட்சியின் பிரதித் தலைவருமான கரு ஜயசூரிய – கொழும்பு மாவட்டத்தில் இருந்து மூவினத்திற்கும் சேவை செய்யக் கூடியவரும் கடந்த 3 வருட காலமாக காந்தா சவிய என்ற 51 கிளைகளையும் 16ஆயிரம் பெண்கள் அங்கத்தவா்கள் கொண்ட காந்தா சவிய என்ற…
4 கோடி ரூபாய்கள் பணம் கேட்ட விவகாரம் – போட்டுடைத்தார் றிஷாத்
குடும்பச் சண்டையினை வைத்து தழிருக்கு சொந்தமான தொலைக்காட்சி ஒன்று எமக்கெதிராக கடும் பிரச்சாரங்களை செய்துவருவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் என்னையும், எமது அரசியல் பயணத்தையும் அழிக்கும் கொன்தாராத்து காரர் ஒருவர் என்னிடம் 4 கோடி ரூபாய்கள் பணம் கேட்டது தொடர்பில் இரகசிய பொலீஸார் மற்றும் தேர்தல் ஆணையாளரிடத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாகவும் கூறினார். இன்று கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்…
வாக்குகளை கொள்ளையடிக்க சிலர் முயல்கின்றனர் – றிஷாத் பதியுதீன்
எமது மக்களின் தேவைகளை நாம் பெற்றுக்கொடுக்க முற்படுகின்ற சில கட்சிகள் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன.இடம் பெயர்ந்த மக்களின் எத்தனையோ தேவைப்பாடுகள் இருக்கின்ற போது அது தொடர்பில் பேசுவதற்கு முடியாதவர்கள் இன்று வந்து மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முயல்கின்றனர் என்று வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் 1 இலக்க வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் கரிக்கட்டி ஹிதாயத் நகர் பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு…
