Headlines

மஹிந்­தவை பிர­த­ம­ராக்­கு­வ­தற்கு எந்­த­வொரு முஸ்­லிமும் வாக்­க­ளிக்­கப்­போ­வ­தில்லை

களுத்­துறை மாவட்ட முஸ்­லிம்கள் பேரி­ன­வாத வலையில் சிக்கிவிடாமல் தமது பெறு­மதி மிக்க வாக்­கு­களை பய­னுள்ள வகையில் அளித்து அதன் மூலம் தமது கிரா­மத்­திற்கும், சமூ­கத்­திற்கும் கூடிய சேவை­களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இம் மாவட்­டத்தில் மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்­கு­வ­தற்கு எந்த ஒரு முஸ்­லிமும் வாக்­க­ளிக்­கப்­போ­வ­தில்லை என்­பது உறு­தி­யாகும் என பேரு­வளை நகர சபை முன்னாள் தலைவர் மஸாஹிம் முஹம்மத் கூறினார். பேரு­வளை மரு­தானை, மாளி­கா­ஹேனை பகு­தி­களில் நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் பேசும் போதே அவர் இவ்­வாறு…

Read More

ஞானசாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : நீதவான் உத்தரவு

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறை ஏற்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். கடந்த 8ம் திகதியன்று வெலிப்பன பொலிஸ் பகுதியில் பொலி;ஸ் அனுமதியின்றி கோயில் ஒன்றுக்குள் பிரசாரக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தேர்தல் சட்டத்தை மீறும்செயலாகும் என்று சுட்டிக்காட்டிய போது ஞானசார தேரர், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து மத்துகம நீதிவானின் உத்தரவின் பேரில் ஞானசார தேரர்…

Read More

பொலிஸ் நிலையத்துக்குள் ஞானசார அட்டகாசம்

தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக வேட்பாளர் விளம்பரத்துடன் பயணித்த ஞானசாரவின் பொது ஜன பெரமுன வாகனம் ஒன்றை நிறுத்தி அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை பொலிசார் கழற்ற முயன்றபோது சாரதி எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இது சம்பந்தமாக கேள்வியுற்று அங்கு வந்த ஞானசார, பொலிஸ் நிலையத்துக்குள் அடாவடித்தனம் செய்து கூச்சலிட்டுள்ளதைத் தொடர்ந்து அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தாம் முயல்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரமாதலால் ஏதாவது…

Read More

பல சந்தர்ப்பங்களில் நாம் அபிவிருத்தி செய்ய முற்பட்ட போதெல்லாம் மு.கா வினர் எம்மை ஓரம் கட்டினர்

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களித்து இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தால் இம்மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலத் தேவையாகப் பார்க்கப்படுகின்ற கரையோர மாவட்டம் நிச்சயம் பெற்றுத் தரப்படும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்று கரையோர மாவட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்பே நானும் எனது கட்சியினரும் அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வோம் இல்லையேல் நாம் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொள்வோம் என வன்னி மாவட்ட வேட்பாளரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்….

Read More

தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து 1199 முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து ஆயிரத்து 199 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அரச வளங்களை முறையற்ற விதத்தில் தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை குறித்து 155 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. அதிக படியாக 254 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

அம்பாறை மாவட்ட கரையோர நிர்வாக அலகைப் பெற்றுக் கொடுப்பேன் – அமைச்சர் றிஷாத்

முஸ்லிம்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டமை வரலாற்றுத் துரோகமாகும். மீண்டும் அதனை இணைப்பதற்கான எந்தத் தேவையும் கிடையது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்க தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எமது கட்சிக்கு இரு ஆசனங்களைப்…

Read More

அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் இறுதிநாள் இன்று

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கும் கால எல்லை இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி தேர்தலில் வாக்களிக்க உரிய அடையாள அட்டை இல்லாதவர்கள், இன்றைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பிரதேசத்திற்கான கிராம சேவகர் அல்லது அருகிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் தற்காலிக அடையாள அட்டைகள் மாவட்ட செயலகத்தினால் மாத்திரம் விநியோகிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

அஷ்ரப் விட்டுச் சென்ற கொள்கைகளை மு.கா. மறந்து செயற்படுகின்றது – றிஷாத் பதியுதீன்

மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்கள் விட்டுச் சென்ற பணியினையும்,கொள்கையினையும் மறந்து செயற்படும் தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை நம்பி மருதமுனை மக்கள் மீண்டும் அவர்களுக்கு வாக்களிப்பீ்ர்கள் என்றால்,எதிர்வரும் ஆறு வருடங்களுக்கு நீங்கள் கைசேதப்பட நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறினார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மருதமுனை கடற்கரை மைதானத்தில் நேற்று இரவு இடம் பெற்ற பிரமாண்டமான…

Read More

தெஹிவளை பள்ளிக்கு அருகில் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட தெஹிவளை பள்ளிவாசலுக்கு அருகில் பொது மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸ்லிம் தலைவர் உற்பட மூவரின் உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் …!

பொது தேர்தலுக்கு இன்னும்  எட்டு தினங்களே உள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மஹிந்த அரசின் முக்கியஸ்தர்களாக இருந்து பின்னர் அதே மஹிந்த  அரசில் இருந்து வெளியேறி மகிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த  அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க  மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்  தினங்களுக்குள் குறித்த மூவருக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தல் நிலவுதாக புலனாய்வு துறை வழங்கிய தகவலை அடுத்து…

Read More

கடந்த பாராளுமன்றத்தில் செய்த தவறை இம்முறையும் செய்ய வேண்டாம் – முஸம்மில்

– அஸ்ரப் ஏ சமத் – கொழும்பு மேயா் முசம்மில் கொலனாவை பிரதேச வாழ் முஸ்லீம் மாணவா்களது கல்வி சாகாய நிதியதித்துக்கு 10 இலட்சம் ருபாவை அன்பளிப்பு செய்வதாக உறுதியளித்தாா். கெலானாவையில் உள்ள 24 பள்ளிவாசல் கள் அமைப்பின் தர்மாகத்தா உறுப்பினர்கள் கொழும்பு மேயா் ஏ.ஜே.எம் முசம்மிலை தெமட்டக்கொடையில் நேற்று (8)ஆம் திகதி சந்தித்தனா். இச்சந்திப்பில் உரையாற்றிய மேயா் முசம்மில் தெரிவித்தாவது – கடந்த பாராளுமன்றத் தோ்தலில் ஜ.தே.கட்சி சாா்பில் போட்டியிட்ட நான் மறைந்த மஹ்ருப் மற்றும் சபீக்…

Read More

ரங்காவின் வேட்பாளர் றிஷாத் பதியுதீனுடன் இணைவு

வன்னி மாவட்டத்தில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக் கூடிய தவைராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இருக்கப் போகின்றார்.எனவே இந்த தேர்தலில் அவரது ஜக்கிய தேசிய முன்னணியினை வெற்றி பெறச்செய்து எமது வன்னி மண்ணில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடியவரான அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து செயற்பட போவதாக வன்னி மாவட்டத்தில் பிரஜைகள் முன்னணியில் 8 இலக்கத்தில் போட்டியிடும் இரா விக்டர் ராஜ் தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யானைச்…

Read More