Main News
வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டாம் – சந்திரிக்கா பகிரங்க அறிவிப்பு
ஊழல்களில் ஈடுபடும் தனிநபர்களிடமிருந்து எமது நாட்டை காப்பாற்றவேண்டும் என்றால், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிலை மற்றும் கை சின்னங்களைத் தவிர வேறெந்த விலங்குக்கு வேண்டுமென்றாலும் வாக்கயுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார். ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று, ஐ.தே.க, ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் இடதுசாரி கட்சிகள் அனைத்தும் கைக்கோர்த்தன என்றும் அவர் குறிப்பிட்டார். எம்பிலிபிட்டிய மற்றும் எஹெலியகொட ஆகிய…
ssp மஜீத் திறந்த மடல்!
பிறந்து வளர்ந்த மண்ணில் நிற்கிறேன் SSP Majeed 2015 பொதுத் தேர்தல் – திகாமடுல்ல மாவட்டம் வாக்காளப் பெரு மக்களுக்கான திறந்த மடல்! சில உண்மைகள்! நான் செல்லுவது எல்லாம் உண்மை! உண்மையைத் தவிர வேறில்லை. சாட்சிக் கூட்டில் சாட்சியம், கூறுகின்றேன். நீதிபதிகள் நீங்கள், தீர்ப்பு எழுதுங்கள்! யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா! யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா! எழில் மிகு அறுகம் குடாவும், வனப்பு மிகு மணல் மேடும், கடல் சூழ்ந்து அலை…
இந்த தேர்தல் மேடையினை நாம் சமூகத்தின் விமோசனத்திற்கும் விடிவுக்குமாகவே பயன்படுத்துகி்ன்றோம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா – புத்தளத்து மக்களை அடக்கு முறை அரசியலுக்குள் வைத்து செயற்படும் கலாசாரத்துக்கு முடிவுகட்டி ஜனநாயகமாகவும்,சுதந்திரமாகவும் செயற்படும் பாதைக்குள் பிரவேசிக்க அனைவரும் ஜக்கிய தேசிய கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் எமது வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வதன் மூலம் இந்த அடிமைச் சங்கிலியினை உடைத்தெறிய முடியும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதயுதீன் சுயேட்சை அணியாக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறுகள் இல்லை என்பதாலும்,சுயேட்சை அணியில்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம்
– அப்துல் அஸீஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதிக்கான இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம், இன்று வியாழக்கிழமை மாலை 5.00மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் இடம்பெறவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் 7ஆம் இலக்க வேட்பாளராக போட்டியிடும் எம்.எ.கலீல்லூர் ரஹுமானின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ள இப்பிரச்சாரக்கூட்டத்தில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி , கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட்…
3 முஸ்லீம் பிரநிதித்துவத்துக்காக பிரச்சாரம்
– அஸ்ரப் ஏ சமத் – கொழும்பு புளுமென்டால், ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள முஸ்லீம்கள் சிங்களவா்கள் இணைந்து கொழும்பில் தோ்தல் கேட்கும் 3 முஸ்லீம் வேட்பாளா்களான மரிக்காா், பெரோசா முசம்மில் , முஜிபு ரஹ்மான் (3)வருக்கும் ஓரே மேடையில் 3 முஸ்லீம் பிரநிதித்துவத்துக்காக பிரச்சாரம் மேடை அமைத்து பிர்சாராம் செய்தனா். கொழும்பு மேல் மாகாணசபை முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பிணா் அர்சத் நிசாம், மற்றும் கொழும்பு மாநகர சபையில் உள்ள முஸ்லீம் உறுப்பிணா்களும் இணைந்து இவ் 3 வருக்கும் பிரச்சாரம்…
ஐ.எஸ்.ஐ.எஸ். வரைபடத்தில் இலங்கை இருப்பது பற்றி சிங்கள ஊடகங்களில் வெளியான செய்திக்கு பதில்.
ஐ.எஸ். போன்ற மைப்பின் செயற்பாடுகளுக்கு இந்த நாட்டு முஸ்லிம்கள் யாராவது சம்பந்தப்படுவதாக தெரியவந்தால் அவர்களுக்கு உயர்ந்த பட்ச சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார். ஐ.எஸ். களின் 2020 வரைபடத்தில் இலங்கையும் உட்பட்டுள்ளமை குறித்து சிங்கள ஊடகமொன்று அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். பயங்கரவாத அமைப்புக்களுக்கு இளைஞர்களை இழுத்துக் கொள்வது இலகுவானது. எல்.ரி.ரி.ஈ. அமைப்பானாலும், ஐ.எஸ்.போன்ற பயங்கரவாத அமைப்பானாலும் இவ்வாறே…
UPFA யில் இருந்து நான் ஏன் விலகினேன்?
மாத்தறை வாழ் மக்களுக்கு எந்தவித சேவையும் செய்ய முடியவில்லை என நான் மன விரக்தி யுடன் இருந்தேன். இதனாலேயே ஐ.ம.சு. முன்னணியில் இருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் விலகினேன். இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் அமைச்சரும், விளையாட்டு வீரருமான சனத் ஜயசூரிய கூறினார். நேற்று முன்தினம் (11) மாத்தறை – பம்புரணையிலுள்ள ஐ.தே.முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊழல் மோசடிகளற்றவர்களையே இம்முறை பாராளுமன்றத்திற்கு…
அஸ்வர் ஹாஜியாருக்கு தொலைபேசி அச்சுறுத்தல் விவகாரம்.. தொலைபேசி இலக்கத்திற்கு சொந்தக்காரரின் அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுடன் சேர்த்து தன்னையும் கொலைசெய்வதாக தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகதத் தெரிவித்து முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இதன்போது வெளியிட்டிருந்த தொலைபேசி இலக்கங்களில் எனது காரியாலய இலக்கமும் இருந்ததுடன் எனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதனைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நேற்றைய தினம்(2015.08.12) பத்திரிகைகள், இணயதளங்கள் வாயிலாக இந்தச் செய்தி வெளியாகியிருந்தது. நான் ஓர் ஊடகவியலாளர் என்ற ரீதியில் எனக்கும் அஸ்வர் ஹாஜியாருக்கும் நல்ல தொடர்பும், புரிந்துணர்வும் இருக்கின்றது….
இந்த தேர்தலானது நன்மைக்கும், தீமைக்கும் இடையிலானது – சோபித தேரர்
எதிர்வரும் 17 ஆம் திகதி தகுதியானவர்கள் தெரிவு செய்யும் பாரிய பொறுப்பு வாக்காளர்களிடம் இருப்பதாக சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். புறக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தகுதியானவர்களை சில கட்சிகள் நிறுத்தவில்லை என்பதால், வாக்காளர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நல்லவர்களுக்கு மாத்திரம் வாக்களியுங்கள். இந்த தேர்தலானது நபர்களுக்கு இடையிலான தேர்தல் அல்ல. கட்சிகளுக்கு இடையிலான…
அரசியலில் இருந்து ரணில், விலக வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பு – மஹிந்த ராஜபக்ஸ
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ பாதுக்கையில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். இதன்போது, விமல் வீரவன்சவின் மனைவியின் கடவுச்சீட்டில் ஒரு எண் பிழையாக இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என கேள்வியெழுப்பினார். அத்துடன், ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மாஅதிபரின் பணியைச் செய்வதாகவும் அவர் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
எனது தந்தை பிரதமராவதை தடுக்கமுடியாது – நாமல்
நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அல்ல என்னை சிறைக்கு அனுப்பினாலும், எனது தந்தை இந்நாட்டின் பிரதமராவதனை தடுக்க முடியாதென ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியடையும் முஸ்லிம் தலைவர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் -சேகு இஸ்ஸதீன்
அதிக பாராளுமன்ற ஆசனங்களைப் பெறத்தவறும் கட்சி எதுவாக இருந்தாலும், அந்தக் கட்சியின் தலைவர் தமது தலைவர் பதவியை கௌரவமான முறையில், காலம் தாழ்த்தாது இராஜினாமாச் செய்துவிட்டு, பொது முஸ்லிம் தலைமைத்துவத்துக்கு விசுவாசமாக உழைக்கும் ஒரு தொண்டனாக, விருப்பத்துடன் செயற்பட முன்வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் கூறினார். பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தொடர்பாக அக்கரைப்பற்றில் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்படி கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – ஆகஸ்ட் 17 ஆம் திகதி…
