Main News
தேர்தல் முடிவு தொடர்பில் நீதிமன்றம் செல்ல ஆலோசனை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக நீதிமன்றம் செல்ல ஆலோசித்து வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது, அம்பாரை மாவட்டத்தில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 மொத்த வாக்குகள் இருக்கின்றன. அதேநேரம் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து மாவட்ட வாக்களிப்பு வீதங்கள் அறிவிக்கப்பட்டபொழுது அம்பாரை மாவட்டத்தில் சுமார் 65 வீதம் வாக்களிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது வெளிவந்திருக்கின்ற தேர்தல் முடிவுகளின்படி…
மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் விடுத்துள்ள ஊடக அறிக்கை
முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான மாற்றுத் தலைமைத்துவத்தை பலப்படுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசை அமோகமாக ஆதரித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஐ.தே.க.தேசியப் பட்டியல் வேட்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காக ஸ்தாபிக்கப்பட்டு- பெரும் தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
UPFA கலைப்பு? ; சு.கட்சிக்கு பிரதிப் பிரதமர் பதவி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கலைக்கப்படவுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கிடையில் கைச்சாத்தான ஒப்பந்தம் ஒன்றின் மூலமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவானது. சுமார் 11 ஆண்டுகளாக இக்கூட்டணி அதிகாரத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் அநீதியான தலையீடுகளைத் தவிர்க்கும் பொருட்டு கூட்டணியை கலைத்துவிட அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் எதிர்வரும் 24ம் திகதி…
உளறித் திரியும் ஞானசார!
சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்து வேறுபட்டிருக்கும் போது, ஏனைய தரப்பினர் தங்களது நலனை உறுதி செய்து கொண்டுள்ளனர். சிங்களவர்களின் அதிகார மோகத்தினால் எமது இளைய தலைமுறையின் எதிர்காலம் பாரிய கேள்விக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை அடைந்துள்ளது. நாட்டை நேசிக்கும் நாட்டை பாதுகாக்க விரும்பும் தரப்பினரை ஒன்றிணைத்துக்கொள்ள முடிந்துள்ளது….
தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை : ஜே.வி.பி
நாம் விதைத்ததை மக்கள் புரிந்துகொண்டிருப்பார்களானால் நாம் அறுவடை செய்திருப்போம் என நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு வியாக்கியானம் தெரிவித்த ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக, மக்களுக்கான எமது போராட்டம் பாராளுமன்றத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. அதற்கு வெளியே எமக்கு பலம்பொருந்திய அரசியல் போராட்டத்திற்கான பலம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக இவ்வாறு…
சேவை செய்பவர்கள் யார் -YLS ஹமீட் கேள்வி
கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் இருக்கின்ற கட்சி அலுவலகத்திற்கு நாளாந்தம் அம்பாரை மக்கள் அலையலையாய் வந்த காரணமென்ன ? நாம் சேவை செய்வோம் என்ற நம்பிக்கையில்தான் எம்மிடம் மக்கள் வந்தார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். கல்முனைக்குடி கடற்கரை வீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 7 ஆம் இலக்க வேட்பாளர் கலீலுர் ரஹ்மான் மற்றும் இதர வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற இறுதி தேர்தல்…
கல்குடா தெளஹீத் ஜமாஅத்தினருடன் அமீர் அலி சந்திப்பு
கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் நிருவாகிகளுடனான சந்திப்பில் ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தொகுதிவாரித்தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் நடைபெறுமெனத் தெரிவித்தார். மேற்படி சந்திப்பு எம்.பி.சி.எஸ் வீதி, மீராவோடையில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஜமாஅத்தின் நிருவாகத்தின் கீழுள்ள அனைத்துப்பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். ஜமாஅத்தின் பொதுத்தலைவர் மௌலவி ஏ.எல்.பீர் முஹம்மது காசிமி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, வேட்பாளர்…
உங்களுக்கே வெற்றி கிடைக்கும்! ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாழ்த்துத் தெரிவித்தாராம் மைத்திரி
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் களமிறங்கியுள்ள உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த அமைச்சரவையில் உங்களை நான் மீண்டும் எதிர்பார்க்கின்றேன். ஜனவரி 8 ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியை இந்தத் தேர்தலிலும் பெற்றுத் தாருங்கள்” – என்று இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன கூறினார். கொழும்பு – 07 இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய…
மஹிந்தவை பிரதமராக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது!
தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்றில் பெரும்பான்மை உள்ள நபர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் தற்போதைய ஜனாதிபதியும் கூட்டமைப்பு வெற்றிபெறும் என ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றவுடன் மஹிந்த ராஜபக்ஷ…
தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன்று நள்ளிரவுடன் ஓய்வு!
பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (15) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. எதிர்ரும் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதன்படி, இந்தக் காலம் அமைதியான காலம் என அழைக்கப்படுகின்றது. இந்தக் காலத்தில் வாக்காளர்கள் சுயாதீனமாக முடிவு எடுக்கக் கூடிய வகையில் வேட்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை,…
615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு
பொதுத் தேர்தல் தினத்தன்று அசம்பாவிதங்கள் மற்றும் கைகலப்புக்கள் இடம் பெறலாம் என ஊகிக்கப்படும் பிரதான 615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் வீதம் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், தேவையேற்பட்டால் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக கலகங்கள் அடக்கும் 165 குழுக்கள் தேர்தல் தினத்திற்கு முன்பும் தேர்தல் தினத்தன்றும், அதற்கு பின்னரும் ஆயத்தமான நிலையில் தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஏரி நீர் ஆவியாவதை தடுக்க அசத்தல் யோசனை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், மாநிலத்தில் 175 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள ஏரிகளில் உள்ள குறைந்த அளவிலான நீரும் ஆவியாகிவிடாமல் தடுக்க ஏரி முழுவதும் கருப்பு பந்துகளை மிதக்கவிடும் நூதன திட்டத்தை கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டி அறிவித்துள்ளார். சூரிய ஒளிக் கதிர்கள் நீரில்பட்டு அவை ஆவியாவதில் இருந்து இந்த கருப்பு நிற பந்துகள் காக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து லாரிகளில் கொண்டு…
