Main News
வாக்களிக்க செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு தேர்தல்கள் ஆணையாளரின் செய்தி
முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாது என சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், குறித்த பிரசாரங்களை மேற்கொள்ளும் சமூக ஊடகங்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பிலே மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லமுடியும், என்றாலும் அங்கே அவர்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்து கொள்வதற்காக…
ஜோதிடம் பார்த்து தேர்தலுக்கு நாள் குறிப்பவன் நானில்லை
நான் ஜோதிடம் பார்த்து, நேரம் பார்த்து தேர்தல் தினத்தை தீர்மானிப்பவனில்லை. அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. புத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால் நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்? – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். கொழும்பு – 07 இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாட்டின்போது “ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்…
மைத்திரியின் கரங்களைப் பலப்படுத்தும் பிரதமர் வேண்டும் : சந்திரிக்கா
தற்போதைய நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமரை நியமிப்பது அனைவரதும் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பலங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்வொரு வழியிலேனும் பிரதமராகினால் நாடாளுமன்றம் மாத்திரமின்றி முழு நாடும் குழப்பமடையும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுடன் அன்று கருத்து மோதல் இருந்திருந்தாலும், கட்சியை விட நாட்டை குறித்து சிந்தித்து ராஜபக்ஷவை தோல்வியடைய செய்யுமாறும் அவர்…
உங்களையும் குடும்பத்தையும் பாதுகாப்பதா? மஹிந்தவையும் குடும்பத்தையும் பாதுகாப்பதா?
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் இந்நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான தேர்தலாகும். இதில் நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதா அல்லது மஹிந்த ராஜபக் ஷவையும், அவரது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதா என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு உங்கள் குடும்பமும், உங்களது எதிர்காலமும் நாசமாகிப்போக வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக் ஷ தலைமையி லான கூட்டணிக்கு வாக்களிக்க முடியும். இந்தத் தேர்தல் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு தேர்தல் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,…
மஹிந்தவின் பிரதமர் கனவுடன் குடியுரிமையும் பறிபோகும் : ராஜித
புலிகளுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் பிரதமர் கனவு மட்டுமல்ல, அவரது குடியு ரிமையும் பறிபோகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இன்று மஹிந்த ராஜபக் ஷவின் காற்று தடைப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காற்று வீச ஆரம்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து…
மஹிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் : இன்றைய தினம் விசாரணை
ஊழியர் சேம இலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் இருந்த பொது மக்களின் 1150 கோடி ரூபாவை தெரிந்துகொண்டே மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டி முன்னாள் நிதியமைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி கெலும் குமார சிங்கவினால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த விசேட வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு பிரதான நீதிவான் கிஹான்…
உங்களுக்கு பிரதமர் பதவி இல்லை! மஹிந்தவுக்கு மைத்திரி அதிரடி அறிவிப்பு
சிலவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள 5 பக்க கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான பகுதிகள் பின்வருமாறு உள்ளன! “நீங்கள் என்னுடன் ஒத்துழைத்து செயற்பட எதிர்பார்ப்பதாக கூறும் செய்தியொன்றை அண்மையில் ஊடகங்கள் வௌியிட்டிருந்தன. உங்களுக்கு அவ்வாறான எதிர்பார்ப்பு இருக்குமாயின் அது தொடர்பில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய சில…
வெள்ளைவேன் தான் வந்தது:வெலே சுதா வாக்குமூலம்
துமிந்த சில்வா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நான் அவரின் கீழ் பணியாற்றினேன். அச்சந்தர்ப்பத்தில், தேர்தல் பிரசாரத்துக்காக என்னிடம் 20 இலட்சம் ரூபாவை கேட்டார். அந்த பணத்தை கொடுத்தேன். நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதன் பின்னர் என்னுடைய வீட்டுக்கு வெள்ளைவேனும் பொலிஸமே எந்தநேரமும் வந்தது என்று வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமார, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாக்குமூலமளித்தார். சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே…
ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் இணைந்த ஆட்சியே வேண்டும்
இலங்கையின் அரசியலமைப்பை மதிக்காது அதனை தூக்கியெறிய வேண்டும் எனக் கூறும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியில்லையெனத் தெரிவித்த சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும், கொழும்பு மாவட்ட ஐ.தே.முன்னணி வேட்பாளருமான ரோஸி சேனா நாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்த ஆட்சியே சிறப்பான புரிந்துணர்வு ஆட்சியென்றும் தெரிவித்தார். கொழும்பில் ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்…
மரணித்த சிசுவை எலிகள் கடித்தன : யாழ்.போதனா வைத்தியசாலையில் சம்பவம்
யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்த குழந்தையின் முகத்தை எலிகள் கடித்த சம்பவமொன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதனால் அச் சடலத்தை பொறுப்பேற்க பெற்றோர் மறுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உடுவில் பகுதியில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை ஒன்று மூச்சுத்திணறி இறந்துள்ளது. குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டு இருந்த நிலையில் எலிகள் குழந்தையின் முகத்தை கடித்து குதறியுள்ளன. இந்நிலையில்…
பொதுபல சேனா, ராவண பலய அமைப்புகள் தற்போது இல்லை – ராஜித
பொது பல சேனா, ராவண பலய ஆகிய அமைப்புகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது செயற்பட்டதெனவும் தற்போது அவற்றில் ஒன்றேனும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொது பல சேனா அமைப்பினாலேயே ஏனைய அமைப்புகளுக்கும் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது, தற்போது ராஜபக்சர்கள் அதிகாரத்தில் இல்லை என்பதனால் அவ் அமைப்புகளும் நாட்டில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரி மாதம்…
பௌத்தர்களையும் முஸ்லிம்களையும் பிரித்த சம்பிக்க எந்த அணியில் இருக்கின்றார்? – அஸ்வர் கேள்வி
– அஸ்ரப் ஏ சமத் – முன்னாள் இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம் அஸ்வர் ஊடக மாநாடு பம்பலப்பிட்டி ரணில் விக்கிரமசிங்க அமைச்சா் றிசாத், ஹக்கீம் அணியில் அமைச்சரவையில் இருக்கின்ற பாட்டலி சம்பிக்க அவா்கள் முஸ்லீம்களுக்கு எதிராக எழுதிய சிங்கள 7 புத்தகங்களை இங்கு பாருங்கள் – இலங்கையில் ஒவ்வொரு பள்ளிவாசல்களிளும் அகதியா இஸ்லாம் பாடாசலை என்றபோா்வையில் முஸ்லீம் இளைஞா்களை அல் ஜிகாத் அல் கையிதாவுக்கு பயிற்சி அளிக்கப்படுகி்ன்றதாம். இது சிறுவயதிலேயே இதனை எற்படுத்துகின்றோம். என்ற சிங்கள அல் கயிதா…
