Headlines

புதிய சூழ்ச்சியில் மஹிந்த: எச்சரிக்கும் புலனாய்வுப் பிரிவு

பௌத்த விகாரைகளை மையமாகக் கொண்ட நவபாசிச அமைப்பொன்றை உருவாக்குவதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவான எஸ்ஐஎஸ் பிரிவினர் இது தொடர்பான புலனாய்வு அறிக்கையொன்றையும் தயாரித்துள்ளனர். அதன் ஒரு பிரதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நோக்கில் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நவபாசிச அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது….

Read More

YLS ஹமீட் நீக்கம்; றிஷாத் பதியுதீன் அதிரடி

– ஏ.எச்.எம்.பூமுதீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சியின் உயர்பீடம் இன்று காலை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று காலை கொழும்பில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது மேற்படி அறிவிப்பை கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்தார். அதே நேரம் அ.இ.ம.காவுக்கு கிடக்கப்பெற்ற தேசியப்பட்டியலுக்கு புத்தளத்தைச்…

Read More

புதிய அரசாங்கத்தில் மொத்தம் 30 அமைச்சர்கள் மட்டுமே

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை விட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பதாயின் அதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். D c

Read More

UPFA யின் தேசியப்பட்டியலில் இருந்து நிராகரிக்கபட்டவர்கள்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேசியப் பட்­டி­யலில் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்த ஜே.ஸ்ரீரங்கா, பிர­பா­க­ணேசன்,  பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ்,   டியு. குண­சே­கர,  திஸ்­ஸ­வி­தா­ரன மற்றும் திஸ்ஸ அத்­த­நா­யக உள்­ளிட்ட 11 பேர் முன்­ன­ணியின் தேசியப் பட்­டி­ய­லி­ருந்து நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளனர். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு தேசியப் பட்­டியல் ஊடாக 12 ஆச­னங்கள் கிடைக்­கப்­பெற்­றி­ருந்த நிலையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை முன்­னணி அதற்­கான உறுப்­பி­னர்­களை நிய­மித்து உத்­தி­யோக­பூர்­வ­மாக அறி­வித்­தி­ருந்­தது. தேர்­தல்­க­ளுக்கு முன்­ப­தாக முன்­ன­ணி­யினால் பெய­ரி­டப்­பட்­டி­ருந்த பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ், திஸ்ஸ விதா­ரண, டியு.குண­சே­கர, திஸ்ஸ அத்­த­நா­யக்க,…

Read More

சம்மந்தன் அதிரடி!

நாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எம்.சரவனபவன், மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை…

Read More

புதிய பிரதமர் பதவியேற்பு ;சுவாரஷ்யமான சந்திப்புக்கள்

– ஜனாதிபதி ஊடகப்பிரிவு – இலங்கை சனநாயகக் குடியரசின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) காலை பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ஜனதிபதியின் செயலாளர் பி.பீ.அபேக்கோன் அவர்கள் அவர்கள் உட்பட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Read More

தலைவர் முடிவு நியாயமானது! அ.இ.ம.கா வேட்பாளர்கள் கூட்டறிக்கை

– ஏ.எச்.எம்.பூமுதீன் – .இ.ம.கா வுக்கு கஷ்டப்பட்டு வாக்கு திரட்டிய நாங்கள் இருக்கும் போது வீட்டிற்குள் சொகுசாக இருந்த கட்சியின் செயலாளர் நாயகத்தை எம்பியாக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இவ்வாறு நடந்த முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அ.இ.ம.கா சார்பில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் ஒருமித்;த நிலையில் கருத்து வெளியிட்டுள்ளனர். 10 வேட்பாளர்களும் ஒருமித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது வருமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அ.இ.ம.கா வுக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் நியமனத்தை கட்சியின்…

Read More

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக சத்தியப் பிரமாணம்

சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெறும் விசேட நிகழ்வில் சுபவேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். உலக அரசியல் வரலாற்றில் நான்காவது முறை…

Read More

அ.இ.ம.கா வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி பாராட்டுகின்றார் றிஷாத் பதியுதீன்

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஆறு மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் எமது கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்;ட வேட்பாளர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள், சவால்கள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் எமக்கு ஆதரவளித்து வாக்களித்த அத்தனை வாக்காளப் பெருமக்களுக்கும் எனது சார்பிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தேர்தலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் எதுவித இன,மத,மொழி,பிரதேச…

Read More

மஹிந்த சிறைக்கு செல்ல நேரிடும் -அசாத் சாலி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு மூன்று நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் சிறைக்கு செல்ல நேரிடும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அத்துடன் தான் எதிர்க்கட்சிப் பதவியை ஏற்கப்போவதில்லை’ என அவர் கூறமுடியாது என்றும், ஏனென்றால் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படாது என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் வரையில் அவருக்கு எதுவித பதவிகளும்…

Read More

சந்திரிக்கா அதிரடி

தேசிய அரசாங்க கொள்கைகளுக்கு இணங்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும், ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். தேசிய அரசாஙகம்…

Read More

அ.இ.ம.கா வின் எழுச்சியும் தேசிய தலைவர் மீள் பிரகடனமும்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – பொதுத் தேர்தல் முடிவு ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு எழுச்சியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்துடன் ரிசாத் பதியுதீனை நாட்டின் தேசியத் தலைவராகவும் இந்த முடிவு மீளவும் பிரகடனப் படுத்தியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 07 மாவட்டங்களில் களமிறங்கியிருந்தது. வன்னி, புத்தளம் ,அநுராதபுரம், குருநாகல் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஐதேகவின் யானைச் சின்னத்திலும் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் சொந்தச் சின்னமான மயிலிலும்…

Read More