Main News
சொத்து விபரங்களை வெளியிடாத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின்போது சொத்து விபரங்களை வெளியிடாத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், சொத்து விபரங்களை வெளியிடுமாறு சகல வேட்பாளர்களுக்கும் தேர்தல் செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டது. சொத்து விபரங்களை வெளியிடாத எந்தவொரு வேட்பாளருக்கும் வேட்பாளர் அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார். வேட்பாளர் அட்டை இல்லாத வேட்பாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தால் வழங்கப்படும் எந்தவொரு…
ரணில் பிரதமராகியமை நாட்டுக்கு கிடைத்த அதிஷ்டம்: மல்வத்து பீடாதிபதி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரையும் அஸ்கிரிய மகாநாயக்க தேரரையும் சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுமான லக்ஷ்மன் கிரியெல்லஇ ரவூப் ஹக்கீம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். ரணில்…
சங்காவுக்கு கௌரவமான பிரியாவிடை: ரணில் தீர்மானம்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ள நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சங்கக்காரவுக்கு கௌரவமான பிரியாவிடை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதன் பிரகாரம் பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெறும் இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியை கண்டுகளிக்க இன்று வருகை தரவுள்ளார். பின்னர் பிரதமரின் தலைமையில் சங்கக்காரவுக்கு கௌரவமான பிரியாவிடை அளிக்கப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சங்கக்கார இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12, 400 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 14, 234 ஓட்டங்களும்,…
கோத்தபாயவிடம் விசாரணை ஆரம்பம்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் இவ்விசாரணையானது தற்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த விசாரணைகளின் நிமித்தம் கோட்டா காலை 10 மணியளவில் அங்கு சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ரக்ன லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான வாக்குமூலத்தை பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளத்திற்கு தேசியப்பட்டில் ஆசனம் கிடைத்தது பெரும் வரப்பிரசாதமே
– ரஸீன் ரஸ்மின் – பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேசியப்பட்டியல் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாகவே காணப்படுகிறது. முன்னார் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனவர்களுக்கு தேசியப்பட்டியல் மூலம் சந்தர்ப்பம் வழங்க மாட்டாது என தேசிய அரசியலில் பேசப்பட்டு வந்ததை யாவரும் அறியாமலிருந்திருக்க மாட்டீர்கள். ஆனால், தேர்தல் முடிந்த நிலையில், தோற்றுப் போனவர்களுக்கு மீண்டும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி, தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களை விட தோற்றுப் போனவர்கள் தமக்கு நெருக்கமான ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு…
தேசியப் பட்டியல் குறித்து நீதிமன்றில் மனு – சுசில்
தேசியப் பட்டியல் குறித்து நீதிமன்றில் மனுத் தொடரப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இவ்வாறு மனுத் தாக்கல் செய்ய உள்ளன. இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலுக்குஇ பங்கு கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தனது வருத்தத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கை ஒன்றின் மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு…
ஊழல்வாதிகளுக்கு எதிராக சுமார் 7 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன -ராஜித
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளும் புதிய அரசாங்கத்தின் கீழ் துரிதமாக விசாரணை செய்யப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதால், பலர் எண்ணியுள்ள போதிலும் எந்த காரணம் கொண்டும் விசாரணைகளை இடையில் நிறுத்த போவதில்லை. ஊழல்வாதிகளுக்கு எதிராக சுமார் 7 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. விசாரணைகளை நடத்த போதுமான காலம் இருக்கிறது. குற்றச்சாட்டு…
மைத்திரி – மஹிந்த – சந்திரிக்கா ஒரே மேடையில்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது ஆண்டுவிழா வரலாற்றில் முதல் தடவை பொலன்றுவையில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ம் திகதி இடம்பெறவுள்ளதாக வட மத்திய முதலமைச்சர் பெஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் ஆண்டு விழா கொண்டாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி…
UPFA இன்னும் சில நாட்களுக்குள் கலைக்கப்படலாம்?
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்னும் சில நாட்களுக்குள் கலைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று மாலை முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் அல்லது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இச்செய்தி அச்சிக்கு போகும் வரையிலும் வெளியாகவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாகவோ அல்லது வேறு வகையிலையோ…
ஜனாதிபதியால் மூன்று பேருக்கு அமைச்சு பதவிகள் வழங்கபட்டது
சற்றுமுன் ஜனாதிபதியால் மூன்று பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சு பதவிகள் வழங்கபட்டு ஜனாதிபதி முன் நியமனங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்தது. அதன்படி, மங்கள சமரவீர அவர்களுக்கு வெளி விவகார அமைச்சும், விஜேதாச ராஜபக்ச அவர்களுக்கு நிதி அமைச்சும், DM சுவாமிநாதன் அவர்களுக்கு மீள்குடியேற்ற மற்றும் புனருத்தாரண அமைச்சும் வழங்கபட்டுள்ளது.
தோல்விக்கு மஹிந்தவே பொறுப்பு – டிலான்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோல்விக்கு மஹிந்த ராஜபக் ஷவும், முன்னணியின் கட்சித் தலைவர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுமே பொறுப்பேற்க வேண்டுமென குற்றம் சாட்டியுள்ள சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா, “பட்டர்” கேக்கைத் தயாரித்த ஐ.ம.சு.மு. ஜனாதிபதியிடமிருந்து “ஐசிங்”கை பெற்றுக் கொள்ளவில்லை. எனவே தோல்விக்கு ஜனாதிபதி பொறுப்பல்ல என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா மேலும் தெரிவித் திருப்பதாவது. மஹிந்த…
இச்சிறுமியின் சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பரீட் நகர் மஸ்ஜிதுல் மனாருல் ஹ{தா பள்ளிவாயல் மஹல்லாவை சேர்ந்த என்.எம்.மர்சூக் என்பவருடைய மகள் பாத்திமா இல்மா (வயது 10) என்ற சிறுமிக்கு மூலையில் கட்டி ஒன்று ஏற்பட்டுள்ளதால் (Brain Lesion of Uncercain Patholog) என்ற ஆபத்தான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். இச்சிறுமிக்கு வைத்திய சத்திரசிகிட்சை செய்வதற்கு ரூபா.600,000 தேவை என இச்சிறுமியினை பரிசோதனை செய்த சத்திர சிகிச்சை நிபுனர் டாக்டர். சமன் புஸ்பகுமார (MBBS)COL.MRCS.(ENG)என்பவர் தெரிவித்துள்ளதால்…
