Main News
“அநகாரிக தர்மபால என்பவர் யார்?” – ஜனாதிபதி விளக்கம்
கெட்ட குணமுள்ள, ஒழுக்கமற்ற சிங்கள மக்கள் வாழும் பக்கமாக தலைவைத்துக்கூட உறங்கமாட்டேன் என அன்று அநகரிக தர்மபால தெரிவித்தார். ஏனென்றால் அவரது சிந்தனைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளே இவ்வாறான கருத்தை வெளியிடும் நிலைமையை ஏற்படுத்தியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று சில அடிப்படைவாத தேசப்பற்றாளர்கள் அநகாரிக தர்மபாலவை இனவாதியாக சித்தரிக்க முயல்கின்றனர். இதனை எதிர்க்கின்றேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜன்ம தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை பன்னிப்பிட்டிய…
மார்ச் இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தல்
எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும், இது குறித்து அமைச்சரவை தீர்மானம் எடுத்து, ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டுமாயின் நாடாளுமன்றினூடாக அதனை மேற்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வருட இறுதிக்குள் உள்ளுராட்சி தேர்தலை நடத்தவிருந்தபோதும், பின்னர் அதற்கான கால அவகாசத்தை கருத்திற்கொண்டு பிற்போடப்பட்டுள்ளது. உள்ளுராட்சி தேர்தலானது, அநேகமான பழைய தேர்தல் முறையின் கீழேயே நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பேராசிரியா் தாரிக் ரமதானின் சொற்பொழிவு
– அஸ்ரப் ஏ சமத் – முன்னாள் சபாநாயகா் எம.ஏ பாக்கீா் மாா்காா் தேசிய ஜக்கிய மன்றம், வருடாந்த நினைவுச் சொற்பொழிவு எதிா்வரும் 21ஆம் திகதி செப்டம்பா் 2015 பி.பகல் 04ஃ15 கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள தேசிய ஆக்காய் கூட்ட மண்படத்தில் நடைபெற ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்வுக்கு லண்டன் ஒக்போட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் தாரிக் ரமதான் பிரதான உரையை நிகழ்த்துவாா். Late Speaker M.A Barkeer Markar commemoration Lecture (By Ashraff. A. Samad)…
அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவேன் – அமீர் அலி
– இர்ஷாத் றஹ்மத்துல்லா – எனக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பெறுப்பை கொண்டு அனைத்து மக்களுக்கும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ள கிராமிய,பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி ஏற்கனவே தான் மூன்று முறை பிரதி அமைசை்சர் பதவியினை வகித்து மக்களுக்கு பணியாற்றியுள்ளதாகவும் கூறினார். கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பெற்கும் நிகழ்வு கொழும்பு புஞ்சி பொரள்ளயில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத்…
வன்முறைக்கு இடமில்லை : பாதுகாப்புச் செயலாளர்
மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்பு செயலாளர் நேற்றுக் காலை மல்வத்து பீடாதிபதியைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டினுள் வன்முறை நிலைமைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுக்களை எதிர்த்துப் போராடுவதே தனது பிரதான நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் கடல்வழியாக இடம்பெறுகின்ற சட்ட விரோத செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும்…
ஐ.நா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் தொடர்பான அறிக்கை, இந்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால், அனைத்துலக நாடுகளின் கவனமும் ஐ.நா பக்கம் திரும்பியுள்ள அதேவேளை, இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஜெனிவாவில் மூன்று வார காலம் தொடர்ந்து நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், இலங்கை குறித்து அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளதோடு, எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. . இக்கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, வெளிவிவகார…
சஜித் பிரேமதாச தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாா்!
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச அதி காலை 05.00 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாயவில் உள்ள அமைச்சுக் காரியாலயத்தில் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாா். இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சா் சஜித் பிரேமதாசா, இலங்கையில் சுமாா் 15-20 இலட்சம் குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் வெயிலிலும், மழையிலும் நனைந்து, பாதை ஓரங்களிலும் கடலோரங்களிலும் கஸ்டப்படுகின்றனா். ஆகவே வீடமைப்பு அமைச்சுக்கு இந்த வீட்டுப் பிரச்சினையை தீா்ப்பதற்கு பாரிய பொறுப்பினை ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் தன்னிடம் ஒப்படைத்துள்ளாா்கள்….
ஊழல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவியா?
தேசிய அரசாங்கத்தில் ஊழல், மோசடிக்காரர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் பொறுப்புக் கூறாது. மோசடிக்காரர்களுக்கு அமைச்சு வழங்கியுள்ளதாகக் கூறப்படுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சு பதவிகளை வழங்கியமைக்கு பொறுப்புகூறவேண்டும். ஐக்கிய…
பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி ரத்து
பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியை நிறுத்துவதற்கு பல்கலைக்கழக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வருடந்தோறும் புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்ளும்போது முன்னைய அரசாங்கத்தின் கீழ் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தவகையில் கடந்தகாலங்களில் வருடந்தோறும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் இந்த பயிற்சிகளில் ஈடுபடுவது கட்டாயமானதாக இருந்ததோடு இவர்களுக்கான பயிற்சியானது இராணுவத்தினராலேயே வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறான நிலையில் தேசிய அரசாங்கத்தின் கீழ் இதுவரை பல்கலைக்கழக மாணவர்களுக்காக வழங்கப்பட்டு…
இன்று நாட்டின் எப்பாகத்திலாவது தலைப் பிறையை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்
– எம்.ஆர்.எம்.வஸீம் – துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை மஹ்ரிப்தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடுகின்றது. இம்மாநாட்டில் அகிலஇலங்கை ஜம் இய்யதுல் உலமா,கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்,முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப் பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பி னர்கள் மற்றும் உலமாக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். நாட்டின் எப்பாகத்திலாவது தலைப் பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் 0714817380, 011 2432110 fax 011 2390783 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு…
நாமலும் – கோத்தாபயும் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில்..
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு சென்றுள்ளனர். நிதிக்குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் இன்று இந்தியாவுக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உட்பட இந்தியாவின் சிரேஷ்ட தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
