Headlines

யுத்தம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கு மகிந்த தரப்பு செய்தது

தமிழ் மக்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரத்தை அன்றே மஹிந்த ராஜபக் ஷ வழங்­கி­யி­ருந்தால் இன்று எமக்கு எதி­ரான அழுத்­தங்கள் வந்­தி­ருக்­காது. அன்று மஹிந்த செய்த தவ­றுக்கு இன்று அனை­வரும் விளைவை அனு­ப­விக்­க­வேண்­டி­யுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக தெரி­வித்தார். வடக்கில் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­களை உட­ன­டி­யாக தீர்க்க வேண்டும். இனியும் காலம் கடத்­து­வது பிரச்­சி­னை­களை வளர்க்கும் செயற்­பா­டாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார். இலங்­கையில் உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும் எனவும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு ­காண வேண்டும் எனவும் பிரித்­தா­னியா…

Read More

மொபைல் தொலைபேசியில் மீட்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள்

ரகர் வீரர் வசீம் தாஜூடினின் செல்லிடப்பேசி மெமரியின் உள்ளடக்கத் தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன. தாஜூடீனின் செல்லிடப்பேசி மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்த போதிலும், செல்லிடப்பேசியின் நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் போன்ற தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு ஆய்வு அறிக்கை ஒன்றை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது. செல்லிடப் பேசி நினைவகத்திலிருந்து மீட்கப்பட்ட தகவல்கள் இறுவட்டு ஒன்றில் பதியப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாஜூடீன் வாகன விபத்தில் உயிரிழக்கவில்லை படுகொலை…

Read More

இலங்கைக்கு எதிர் நாடுகள் என எந்தவொரு நாடும் தற்போது இல்லை

இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் எதிர் நாடுகள் என எந்தவொரு நாடும் தற்போது இல்லை. அனைத்து நாடுகளும் நட்பு நாடுகளாகவே இருக்கின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த தருணம் இதுவே எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் தொடக்கிவைக்கப்பட்டபோது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

Read More

15ஆயிரம் தொடர்மாடி வீடுகள் நிர்மானிக்கப்படும் -சம்பிக்க

– அஸ்ரப் ஏ சமத் – கொழும்பினை அழகுபடுத்துதல் என்ற போர்வையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட சில திட்டங்கள் முற்று முழுதாக பராமரிக்க முடியாத நிலையில் உள்ளது. இதற்காக பாரிய நிதி வீனடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பாரிய நிதிகள் மோசடியாக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நகர அபிவிருத்தி சகல கட்டுமான திட்டங்களும் முறையான பொறியியல் திட்டமிடாமலும் தனிப்பட்டவர்களுக்கு கட்டுமான ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளன. இனி வரும் காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் நடைபெறமாட்டாது….

Read More

அளுகோசு பதவி : 13 ஆம் திகதி நேர்முகப் பரீட்சை

மரணத் தண்டனை கைதிகளை தூக்கில் போடும் தொழிலான அளுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலை திணைக்களத்திற்கு இதுவரை 24 விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப்பெற்றுளதாகவும் இம் மாதம் 13 ஆம் திகதி நடைபெறும் நேர்முகத் தெரிவின் போது தகுதியான  இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இத் தொழிலுக்கு ஆகக் குறைந்த கல்வித் தகைமை 8 ஆம் தரம்வரை கல்வி கற்று இருக்க…

Read More

உள்நாட்டுப் பொறிமுறைக்கு ஜப்பான் ஆதரவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, இலங்கையின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு தாம் பூரண ஆதரவு வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

Read More

CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் காணி பறிபோகிறது

டி.ஏ. ராஜபக்ஸ அமைப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையை பிழையாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வேறும் எந்தவொரு பணிக்காகவும் குறித்த காணி பயன்படுத்தப்பட மாட்டாது என நிபந்தனையை மீறி ராஜபக்ச அமைப்பு, சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவைக்கு காணிகளை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து விசேட விசாரணை நடத்தப்பட உள்ளது. நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் குறித்த காணிகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த சட்டவிரோத…

Read More

இஸட் வெட்டுப் புள்ளிகள் வெளியானது

பல்கலைக்கழங்களுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான இஸட் வெட்டுப்புள்ளிகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளும் வெட்டுப் புள்ளிகள்http://www.ugc.ac.lk/ (link is external) என்ற இணைத்தளத்தில் பார்வையிடலாம் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில்  மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட உள்ள இஸட் வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து…

Read More

உலக ஆசிரியர் தினம் இன்றாகும்

உலக ஆசிரியர் தினம் இம்முறை ஆசிரியர்களை வலுப்படுத்தி நிலையான சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினமானது நாட்டுக்கு நாடு வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கையில் ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.  ஆசிரியர்கள் வெறுமனே கல்வியை மட்டுமே கற்பிப்பவர்கள் அல்ல. மாறாக அவர்கள் வலுவான, நிரந்தரத்தன்மையுடைய சமூகத்தை கட்டியெழுப்ப காரணமாயிருப்பதுடன் கற்றல் அறிவினூடாக மூலமாக ஆக்கத் திறன் மிக்க சமூகத்தை கட்டியெழுப்புகின்றனர். மேலும் ஒழுக்க விழுமியங்கள்,  கோட்பாடுகளை  தொடர்ச்சியாக கொண்டு செல்ல காரணமாயிருக்கின்றனர் என…

Read More

கடாபியின் உதவியை, நன்றியுடன் நினைவுகூறும் மஹிந்த

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியென சிலர் எடுத்துக்காட்டினாலும், அந்த நிலைப்பாட்டுக்கு தன்னால் இணங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார். மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஸ்தாபிக்கப்படும் விசாரணைப் பொறிமுறையில் பாதுகாப்பு படையினரில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகப்படுவோர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அளவுக்கு சாட்சியங்கள் இல்லை என்றால்,…

Read More

இலங்கையர்களின் ஹஜ் குழு நாடு திரும்பியது

– அப்துல் மலிக் சரீப் – பலவருடங்கள் அனுபவம் வாய்ந்த ஹஜ் வழிகாட்டியான அல் ஹாஜ் அமானுல்லா கமால்தீன் அவர்களின் தலைமையில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள RJ Travels  உரிமையாளரான அல் ஹாஜ்.எம். ஜே.எம். ரிஸ்விஅவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டஹஜ் குழு நேற்று நாடு திரும்பியது. இக்குழுவை வரவேற்பதற்காகவும் அவசரமாக ஹாஜிகளை விமானநிலையத்திலிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவும்  ஜித்தா சர்வதேச விமான நிலையமூத்த அதிகாரியானஎம். எச.;முஹம்மத் ரிள்வான் அவர்கள் சமூகமளிதிதிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இக் குழுமக்காவில் நடந்த’கிரேன்’அசம்பாவிதம் நடந்த இடத்தை நேரடியாகச் சென்றுபார்வையிட்டதுடன்…

Read More

அடுத்தமாத பட்ஜெட் புரட்சியை ஏற்படுத்தும்!

– மகேஸ்வரன் பிரசாத் – பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய வகையிலான வரவுசெலவுத்திட்டமே எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி முன்வைக்கப்படவிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவைகள், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைகளுக்கான முழுமையான நிதி ஒதுக்கப்படும். அதில் எதுவித குறைப்பும் மேற்கொள்ளப்படாது. அத்துடன் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக் கூடியதான வரவுசெலவுத்திட்டமொன்றே இம்முறை முன்வைக்கப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு துறைசார் வல்லுனர்களிடமிருந்து ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதுவரை…

Read More