Main News
ஹஜ் முறைகேடுகளை ஆராய விசேட குழு!
இம்முறை ஹஜ்ஜின்போது இலங்கை யாத்திரிகர்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ள முஸ்லிம் சமய கலாசார அமைச்சு விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளது. இது தொடர்பான தீர்மானங்களை எடுக்க எதிர்வரும் 22 ஆம் திகதி ஹஜ் கமிட்டி கூடவுள்ளது. இலங்கையிலிருந்து யாத்திரிகர்களை அழைத்துச்சென்ற சில முகவர் நிலையங்கள் வாக்குறுதி அளித்தபடி சேவைகளை வழங்காததால் ஹஜ் யாத்திரிகர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இது தொடர்பான முறைப்பாடுகளை ஆராயவே மேற்படி விசாரணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரை தலைமையாகக்கொண்டே இந்த விசாரணைக்குழு…
சுவிட்சர்லாந்து தேர்தல், சொல்லும் செய்திகள்..!
சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்திற்கான பொது தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வெளியாகி உள்ள நிலையில், அந்நாட்டின் முக்கிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றுள்ளது. சுவிஸில் நேற்று தொடங்கிய பொது தேர்தலுக்கான வாக்குபதிவின் முடிவுகள் நள்ளிரவு முதல் வெளியாகி வந்துள்ளது. 200 பாராளுமன்ற கீழ் சபை உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட சுவிஸின் 3 முக்கிய கட்சிகளான சுவிஸ் மக்கள் கட்சி(SVP) 65 தொகுதிகளிலும், சமூக ஜனநாயக கட்சி(SP) 43 தொகுதிகளிலும் மற்றும் லிபரல் கட்சி(FDP)…
சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்ட நபர் கொழும்பில் கைது
மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீரின் சட்டதரணியை கத்தியால் குத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர், இன்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாலைத்தீவு அரசாங்கத்துக்குச் சொந்தமான சொசுன் விலா எனும் விடுதியொன்றிலேயே ஷஃப்ராஸ் இப்ராஹிம் (வயது 20) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது
அரசியல்வாதிகள் தாம் அதிகாரத்துக்கு வருவதற்காக மக்களின் வறுமையைத் தவறாகப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பொலனறுவை இரகாந்தகற்று வெவ வித்தியாலயத்தின் புதிய தொழில்நுட்பக் கூடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் வறுமையை அரசியல் வாதிகள் தாம் அதிகாரத்துக்கு வருவதற்குப் பயன்படுத்துகின்றனர். தேர்தல் வரும்போது அதி காரத்தில் உள்ள அரசியல்வாதி கள் எவராக இருந்தாலும் அரச நிதி வளங்களைப் பயன்படுத்து கின்றனர். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு…
கொண்டைய்யா தொடர்ந்தும் விளக்கமறியலில்
கொடதெனியாவ சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த வழக்கு தொடர்பில் கைதாகி தானே குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ள கொண்டையாவின் சகோதரர் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன், கொண்டைய்யாவின் சகோதரராக சமன் ஜெயலத்தின் மரபணுப் பரிசோதனை அறிக்கை, சிறுமியின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மரபணுக்களுடன் ஒத்துப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வழக்கில் முதலில்…
தரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
– அஸ்ரப் .ஏ சமத் – லங்கா எக்ரோ பொரோசிசிங் தனியார் லிமிட்டெட் நிறுவனத்திற்கு எஸ்.எல்.ஏ மற்றும் ஜ.எஸ்.ஓ 22000 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு 18ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் கோட்டலில் நடைபெற்றது. இக் கம்பனி 1970 களில் ஒரு அரிசி, மா அரைக்கும் ஆலையாக ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது வத்தளையில் மாபெரும் ஏற்றுமதி உள்ளுர் பருப்பு, சோளம், குரக்கன் போன்ற பல வா்த்தக தானியங்களை கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் உள்ளுரிலும் “அங்கா்…
முஸ்லிம் பாடசாலைக்கு இரண்டி மாடிக்கட்டிடம்: ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்
பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கான புதிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலன்னறுவை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொலன்னறுவை எழுச்சி (பிபிதெமு பொலன்னறுவ) என்றொரு அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வார இறுதிநாட்களில் பொலன்னறுவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இத்திட்டத்தின் கீழான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பொலன்னறுவையில் தங்கியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைபவங்களின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இத் திட்டத்தின் கீழ்…
ஐ.நா.பிரேரணையால் நாட்டுக்கு பாதிப்பில்லை
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை யினால் பொதுமக்களுக்கோ நாட்டிற்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதனை திட்டவட்டமாக நான் கூறுகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகளினால் வெளியிடப்படவிருந்த பாரதூரமான அறிக்கையை மாற்றியமைப்பதற்கு புதிய அரசாங்கத்தினால் முடிந்தது. இருந்தபோதிலும் முன்னைய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த அறிக்கை மிகவும் காரம் கூடியதாக அமைந்திருக்கும். அதிலிருந்து நாம் நாட்டை பாதுகாத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை,முன்னாள்…
வெளிநாட்டு நீதிபதிகள் வந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் உள்ளக விசாரணை நடைபெறுமாயின் அது அரசியலமைப்பை மீறுவதாகவே அமையும். அவ்வாறு அரசிய லமைப்பை மீறும் செயற்பாடுகளை மேற்கொண்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தயங்க மாட்டோம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என தம்மை அறிவித்துக்கொண்டுள்ள மஹிந்த அணியின் முக்கியஸ்தர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்கம் உள்ளக விசாரணை என்ற போர்வையில் சர்வதேச விசாரணையே நடத்துவதற்கு முயற்சிக்கிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். மேலும் அரசாங்கமானது உள்ளகப் பொறிமுறை செயற்பாட்டை…
424 பேர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்
1976 ஆம் ஆண்டு முதலாக விடுதலைப்புலிகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள், குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி புரிந்த 424 பேர் தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டும் என பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை கையளித்ததாக புத்திஜீவிகளின் குரல் அமைப்பு தெரிவித்தது. கொழும்பில் வியாழக்கிழமை அவ்வமைப்பு நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அதன் இணைச்செயலாளர் சட்டத்தரணி தினேஷ் தொடம்கொட இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், கடந்த 1976ஆம் ஆண்டு முதல்…
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக களமிறங்குவோம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவுபடும் இதனை தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார,எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றுபட்ட எதிர்க்கட்சியாக நாம் களமிறங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,எதிர்காலத்தில் மைத்திரி, ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு எதிராக எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். உள்ளூராட்சி தேர்தலில் ஒன்றுபட்ட எதிர்கட்சியாக இணைந்து நாம் போட்டியிடுவோம். மைத்திரி எந்தச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்கினாலும் நாம் அதனை எதிர்ப்போம். ஐக்கிய தேசிய கட்சியையும்…
மக்களுக்கு சலுகை வழங்கும் வகையிலான வரவு–செலவு திட்டத்தை முன்வைப்போம்
ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வரவு செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக, கல்விக்கு முதன்மை இடம் வழங்கப்படும் எனவே பொய்யான பிரசாரங்களுக்கு ஏமார வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வீண் செலவுகளுக்கே வரவு செலவுத் திட்டத்தில்…
