Headlines

ரணிலின் பதிலில் அமை­தி­யான தினேஷ்

அமெ­ரிக்­கா­வி­னதும் இலங்கை அர­சாங்­கத்­தி­னதும் சர்­வ­தேச மனித உரி­மைகள் பேர­வையில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட தீர்­மானம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்த கருத்­தி­னை­ய­டுத்து எதிர்க்­கட்சி உறுப்­பி­னரும் மஹிந்த அணி யின் பிர­தா­னி­யு­மான தினேஷ் குண­வர்த்­தன நேற்று பாரா­ளு­மன்றத்­தினுள் அமை­தி­யாக சிரித்­த­வாறே அமர்ந்து கொண்டார். மேற்­படி தீர்­மா­னத்தை வாசித்துப் பார்க்­க­வில்லை என்று கூறும் எனது நெருங்­கிய உறுப்­பினர் (தினேஷ் குண­வர்த்­தன) அதனை வாசித்து அறி­யாது எவ்­வாறு தாய்­நாட்டைப் பாது­காப்போம் எனும் பெயரில் நேற்று (நேற்று முன்­தினம்) மாநாட்டை நடத்த முடிந்­தது என்று கேட்­ட­போதே உறுப்­பினர்…

Read More

ஜனாதிபதி + பிரதமரிடம் செயற்திட்ட அறிக்கையை, சமர்ப்பிக்க ஜம்இய்யத்துல் உலமா தீர்மானம்

நேற்று (19.10.2015) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் தஃவா மற்றும் தொண்டர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு ஜம்இய்யாவின்  தலைவர் தலைமை தாங்கினார். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் நிறைவு பெறும் இத்தருணத்திலும் வாழ்க்கையையே வாழ்கின்றனர். இவர்களின் மீள் குடியேற்றத்தை பூரணப்படுத்தி நல்லதொரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்றை ஜம்இய்யா குறித்த அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. மன்னார், யாழ்ப்பாணம்,…

Read More

மஹிந்தவை புகழ்ந்து பேசுவதற்கு, நான் எப்போதும் தயார் – ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தான் புகழ்ந்து பேசுவதை ஐ.ம.சு.மு. வினால் பொறுத்துக்கொள்ள முடியாமலிருப்பது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிந்தவை புகழ்ந்து பேசுவதற்கு தான் எப்போதும் தயாராகவிருப்பதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று (20)  செவ்வாய்க்கிழமை தனது ஜப்பான் விஜயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்தார். இதன்போது அவர், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜப்பான் நீதிபதியான மொடோ றகூசியை அழைத்திருந்ததை ஜப்பானின் பிரதமர்…

Read More

ஜனவரி.08 அலரிமாளிகை சதி முயற்சி ;சீ.சீ.ரீ.வி. பதிவுகள் அனைத்தும் அழிப்பு

கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அலரி மாளிகையில் தீட்டப்பட்டதாக கூறப்படும் சதி தொடர்பில், முக்கிய ஆதாரமாக கருதப்படும் அலரி மாளிகையின் சீ.சீ.ரீ.வி.கண்காணிப்பு கமரா பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் கீழ், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அதன் அறிக்கை மேலதிக ஆலோசனைகளுக்காக சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எவ்வாறாயினும்…

Read More

மஹிந்தவின் ஊடகப் பேச்சாளரிடம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட வாக்குமூலம் வழங்குவதற்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவிலிருந்த பல காணொளிகள் காணாமல் போனமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

சஜின் வாஸ் சிங்கப்பூர் செல்ல அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன 5 நாட்களுக்கு மட்டும் சிங்கப்பூர் செல்ல கொழும்பு சிரேஷ்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதியளித்துள்ளார். சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை செய்யட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கவேண்டுமென கோரி, நேற்று கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் சஜின் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆராய்ந்த பின்னர், 5 நாட்களுக்கு மட்டும் சிங்கப்பூர் சென்று திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More

“சமூக வலைத் தளங்களுக்கு எதிராக வருகிறது புதிய சட்டம்”

சமூக வலை­த்த­ளங்­களில் தனி நபரை இழி­வு­ப­டுத்தும் வகை­யி­லான பதி­வேற்­ற ங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­மொன்றை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மேலும் வழக்­கு­களின் கால­தா­மதத்தை குறைப்­ப­தற்கு விசேட நட­வ­டிக்­கை­களை அரசு முன்­னெ­டுக்­க­வுள்­ளது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.நீதி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற சட்டம் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­கு­ழுக்­க ளின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கூட்­டத்­தொ­ட ரின் பின்­னரே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­போ­தைய காலத்­திற்கு ஏற்ற வகையில்…

Read More

அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கிறது

சர்­வ­தேச அழுத்­தங்கள் மற்றும் உள்­ளக அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் நோக்­குடன் எமது அர­சாங்கம் இன்று மிகச்­ச­ரி­யான பாதையில் பய­ணித்து வரு­கின்­றது என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார். மஹிந்­த­விடம் இருந்து நாட்டை மீட்­ட­போதே அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு எட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்­கத்தின் சர்­வ­தேச கொள்­கைகள் மற்றும் உடன்­ப­டிக்­கைகள் தொடர்பில் மஹிந்த அணி­யினர் தொடர்ச்­சி­யாக விமர்­சித்து வரும் நிலையில் அர­சாங்­கத்தின் அர­சியல் செயற்­பா­டுகள் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்….

Read More

சோபித தேரரின் நலம் விசாரிக்கச் சென்ற மஹிந்த

சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.   கடந்த பதினெட்டாம் திகதி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடுமையான சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலனை விசாரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ச குறித்த மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வருகை தந்துள்ளார். இதன் போது இருவரும் சுமார் அரை மணிநேரம் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்….

Read More

ரோயல் கல்லூரி மாணவர்களின் நடைப்பயணத்தில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள ரோயல் கல்லூரி மாணவர்களின் நடைப்பயணம் ஒன்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளனர். செயற்கை நிறமூர்த்தங்கள் மற்றும் சுவையூட்டிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களுக்குப் பதிலாக தண்ணீர் அருந்துதல், புகைப்பழக்கத்தை ஒழித்தல், போசாக்கான உணவுகளை மட்டும் தெரிவு செய்தல் ஆகிய மூன்று விடயங்களை வலியுறுத்தி இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. ரோயல் கல்லூரியின் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். 24ம் திகதி காலை ஏழுமணிக்கு நெளும்பொக்குண அருகில் ஆரம்பமாகும்…

Read More

டிஜிட்டல் என்றால் என்னவென்றே எனக்குத் தெரிந்திருக்கவில்லை! அமைச்சர் ஹரின்

டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவி கிடைக்கும் வரை டிஜிட்டல் என்றால் என்னவென்றே தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மொனராகலை, வெல்லவாய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நமது பிரதேசத்தில் எப்போது மழை பெய்யும், காலநிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை நம் கைகளில் வைத்திருக்கும் மொபைல் போன்கள் ஊடாக…

Read More

இராவணன் தொடர்பில் கிரமமான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!- புத்திக்க பத்திரண

இராவண மன்னன் தொடர்பில் கிரமமான ஆய்வு நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இது தொடர்பில் புத்திக்க பத்திரண யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இராவண மன்னன் தொடர்பில் திடமான வரலாற்றுத் தகவல்கள் இல்லாத போதிலும், கிரமமான ஆய்வின் மூலம் இராவண மன்னன் தொடர்பிலான மக்களின் எண்ணக்கருக்களை மேம்படுத்த முடியும். இராவண மன்னனிடம் காணப்பட்ட அறிவினை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். இலங்கை வரலாற்றில்…

Read More