Main News
தவறிழைத்தோர் தனது குடும்பப் பெயரைக் கூறித் தப்பிக்க முயற்சி –
கடந்த காலங்களில் தவறிழைத்த பிரிவினர் தமது குடும்பத்தினரின் பெயரைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்துவருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ராஜபக்ச குடும்பத்தினர் மீது தற்போது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக அவன்கார்ட் விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும்…
இது சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் – ஞானசார தேரர்
வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவுமே ஏனைய இனத்தவர் இந்த நாட்டுக்கு வந்தனர். இந்த நாடு சிங்களவர்களின் நாடு. நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது சிங்களவர்களின்…
சீருடை வவுச்சர்! ஆசிரியர், அதிபர் சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
பாடசாலை சீருடைக்குப் பதிலாக வழங்கப்பட்டுள்ள பண வவுச்சர் முறைமையை நீக்கிவிடுமாறு தெரிவித்து ஆசிரியர், அதிபர் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு முன்னணி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதில், இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், சுயாதீன கல்வி சேவை சங்கம், பொது ஆசிரியர் தொழிலாளர் சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம், அகில இலங்கை அதிபர் சேவை சங்கம், முதலாம் தர அதிபர்களின் சங்கம் மற்றும் அதிபர் சேவை…
இலங்கை – மாலைதீவிற்கு இடையிலான உறவு விருத்தி குறித்து பேச்சு
இலங்கையுடன் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள ராஜதந்திர முறுகலை தீர்த்துக்கொள்ளும் வகையில் உயர்மட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. மாலைதீவின் வெளியுறவு அமைச்சர் தஹன்யா மயூமூன் நேற்று (9) இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து உரையாடியுள்ளார். முன்னதாக அவர் கடந்த திங்கட்கிழமையன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தார். இந்தநிலையில் குறித்த சந்திப்புக்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று மாலைத்தீவு அமைச்சர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மாலைத்தீவில் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவர் உட்பட்ட இரண்டு இலங்கையர்கள்…
தாஜுதீன் தீர்ப்பு இன்று..
யோஷித்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான CSN தொலைக்காட்சியில் நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றிய, அவரது முன்னாள் காதலி என அறியப்படும் யஷாரா அபேநாயக்கா நிதி மோசடி குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவில் நேற்றைய தினம் வாக்குமூலமொன்றை அளித்துள்ளார். அத்துடன், நேற்றைய தினமே குறுஞ்செய்தியொன்றின் (SMS) மூலம் யஷாரா நடந்த விடயங்களை நாமல் ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார். நிதி மோசடி குற்றத்தடுப்புப் பிரிவில் தான் உண்மைகள் அனைத்தையும் தெரிவித்ததாகவும், அவர்கள் CSN பணிப்பாளர்களை விசாரணைக்கு அழைப்பார்கள் என்றும், அனைவருக்கும் உள்ளே செல்வதற்கு தயாராக இருக்கும்படியும்…
(ஹோமாகம) பாடசாலை உட்கட்டமைப்பை பார்வை
ஹோமாகமவில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தேசிய பாடசாலையின் அமைப்புப் பணிகளை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பார்வையிட்டுள்ளார்.முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தனவின் அழைப்பின் பேரில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு சென்றார். அமைச்சராக இருந்தபோது பந்துல குணவர்தன அவர்கள் இந்த பாடசாலையினை இங்கு உருவாக்கினார்.இந்த பாடசாலையில் உட்கட்டமைப்பு வசதிகளை கண்டறியவருமாறு,இவ்வாறான அமைப்பு ரீதியான பாடசாலைகளை கிராமப் புறங்களிலும் உருவாக்குவதன் அவசியத்தை முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இதன் போது விளக்கமளித்தார்.
பொதுவான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவோம்
– ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம் – அரச ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்வதற்கோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பிலோ எதுவிதமான தீர்மானத்தையும் அரசு மேற்கொள்ளவில்லையென இன்று சபையில் உறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தில் அரச தனியார் துறையினருக்கு பொதுவான ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படுமென்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரையொன்றை ஆற்றும்- போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்
பரீட்சை எழுதும் மாணவர்களின் நன்மை கருதி தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடும்போது போக்குவரத்து பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் வரவு செலவுத்…
அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவீட்டு ஆய்வகம்
தெற்காசியாவில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய அளவீட்டு ஆய்வகம் ஹோமாகமயில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீனினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உற்பட பலர் கலந்துகொண்டனர்.
நாலக கொடஹேவா கைது
விசாரணைக்காக நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவில் ஆஜராகிய பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா கைது செய்யப்பட்டுள்ளார்.
பகிரங்க மன்னிப்புக் கேட்கவும் தயார்: திஸ்ஸ
ஐ.தே.க. வின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க , அக்கட்சியில் மீண்டும் இணைந்து கொள்வதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு தொடர்ச்சியாக தூது விட்டுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் கட்சியில் தான் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் கட்சிக்கும், கட்சித் தலைவருக்கும் தான் செய்த துரோகம் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கேட்கவும் தயாராகவுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்….
ஜனாதிபதி முன்னிலையில் றிஷாத் பதியுதீன் விடுத்த சவால்
– அமைச்சரின் ஊடகப்பிரிவு – வில்பத்து வனப்பகுதியில் நானோ எனது சமுகமோ ஒரு அங்குல காணியையேனும் அடாத்தாக பிடிக்வில்லை. அவ்வாறு பிடித்திருந்தால் நிரூபித்துக் காட்டுமாறு இந்த உயர் சபையில் சவால் விடுகின்றேன் என்றார் அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன். ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன இன்று சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த போது ஜனாதிபதியின் முன்னையிலையில் இந்த சவாலை ரிசாத் பதியுதீன் மிக ஆக்ரோசமாக விடுத்தார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு சபையில் மிக ஆக்ரோசமாக…
