Main News
மலேசிய வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு
– முனவ்வர் காதர் – மலேசிய வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு நேற்று (03) பகல் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது. இதில் வடக்கில் சுமார் 20000 க்கு மேற்பட்ட தொழில்வாய்ப்பையும் ஏற்படுத்தவேண்டிய தேவையுள்ளதால் வடக்கில் தொழில்பேட்டைகளை அமைக்க எனது அமைச்சினால் உங்களுக்கு பூரண ஆதரவை வழங்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஐனாதிபதி மற்றும் பிரதமரின் இலக்கு நாடுபூராகவும் சுமார் 44000 க்கு மேற்பட்ட தொழில்பேட்டைகளை அமைக்கவுள்ளனர். ஆகவே, முதலீட்டாளர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்குமாறு அமைச்சர் வருகை…
1988, 1989 சம்பவங்களை விவாதிக்க தயார்
1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்கத் தயார் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க, நேற்று(02) யோசனை தெரிவித்தார். 1988, 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, அதே காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட வன்முறைகள் குறித்து விவாதிக்க தயார் என்றால், தாமும் விவாதம் மேற்கொள்ள தயார் என குறிப்பிட்டார்….
கோத்தபாயவிடம் இன்று விசாரணை
அவன்ட் கார்ட் மற்றும் ரக்ன லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ இன்று (வியாழக்கிழமை) பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆயுத கொடுக்கல் வாங்கல் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கோத்தபாய உள்ளிட்ட ஐவரை குற்றவாளிகளாக நிரூபிக்க முடியுமென அண்மையில் பிரதி சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த மோசடிகள் தொடர்பில் பொதுமக்களிடமும் சாட்சியங்கள்…
வாகன அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக விரைவில் மாற்று திட்டம்
அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான வரிவிலக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திர சலுகைக்குப் பதிலாக மாற்று திட்டமொன்றை விரைவில் முன்வைக்க இருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 2017 முதல் சகல அரச நிறுவனங்களும் தமது உண்மையான பெறுமதியை வரவு செலவுத் திட்டத்தினூடாக வெளிப்படுத்த வேண்டும். உந்துருளி,முச்சக்கரவண்டி என்பவற்றிற்கு புகைப் பரிசோதனை கட்டணம் அறவிடப்படமாட்டாது. வெளிநாட்டவருக்கு காணி விற்கப்போவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. கடந்த ஆட்சியிலே துறைமுக நகரில் 216…
கடந்த கால திருடர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம்
கடந்த கால திருடர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். இப்போது கைவசம் 35 “பைல்கள்” உள்ளது. இவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றது என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். டுபாய் வங்கியில் 650 மில்லியன் டொலர்கள் யாருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் பலரின் வங்கிக் கணக்கு தகவல்கள் வெளியில்வரும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 9 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே…
மஹிந்த குடும்பத்தின் மோசடிகளை விடமாட்டோம்
அரசாங்கத்தினால் கண்டறியப்பட்டுள்ள 725 பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த 725 மோசடிகளுடன் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தாரும் உறவினர்களும் மறைமுகமாகத் தொடர்புபட்டிருக்கின்ற அதேவேளை இவற்றில் 25 மோசடிகளில் மஹிந்த குடும்பத்தாரின் நேரடித் தொடர்புகள் இருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெல்சன் மண்டேலாவாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை லீகுவான் கி வாகவும் இன்று வர்ணித்துக் கொண்டிருக்கின்ற சர்வதேசம் மைத்திரிபாலவின் ஜனநாயக ஆட்சியையும்…
மஹிந்த எங்கே? ஏன் வரவில்லை : சபையில் சிரிப்பொலி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எங்கே? ஏன் அவர் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகே நேற்று பாராளுமன்றத்தில் மஹிந்த அணியைப் பார்த்து கேள்வியெழுப்பினார். நளின் பண்டார எம்.பி. இவ்வாறு கேள்வியெழுப்பியதையடுத்து ஆளும்கட்சியினர் ஊ சத்தம் எழுப்பி மேசையில் தட்டினர். இதேவேளை மஹிந்த ஆதரவு அணியினரும் கூச்சலிட்டனர். அத்துடன் பலத்த சிரிப்பொலியும் எழுந்திருந்தது. வரவு–செலவுத்…
ஆதரவளித்த அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றிகளைத் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு…
நிறைவேற்று அதிகாரங்களை மைத்திரிபால குறைப்பார்: அமெரிக்கா நம்பிக்கை
இலங்கையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளை சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்வார் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப்பிரதிநிதி சமந்தா பவார் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அதிகாரக் குறைப்புக்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் பவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சோதனைகளில் இருந்து மீண்டு சமநிலையை பேண ஜனாதிபதி மைத்திரிபால விரும்புவதாகவும் பவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் மாதாந்த வருமானம் 4,54,000 ரூபா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சம்பளத்தையும், முன்னாள் ஜனாதிபதிக்குரிய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறாரென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் முதல் இதனைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் படி மாதாந்தம் 4 லட்சத்து 54,000 ரூபாவை வருவாயாக பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மஹிந்த ராஜபக்ச, ஓய்வூதியமாக மாதாந்தம் 3 லட்சத்து 49 ஆயிரமும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாவும் பெற்று வருவதாகவும் சம்பளப்…
பொலிஸ் செய்தி ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பம்
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் செய்தி, நேற்று செவ்வாய்க்கிழமையிலிருந்து (01) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த செய்திச் சேவை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் நண்பகல் 12 மணிக்கு இனி தொடர்ச்சியாக ஒலிபரப்பாகும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் என். இலங்ககோனின் ஆலோசனையின் கீழ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செயலாளரான சட்டத்தரணி நந்த முருத்தெட்டுவேகமவினால் இச்சேவை மீள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிக வருமானம் பெறும் நாடாக மாறிவிடும்: ரணில்
பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாக ஆக்குவது கடினமான பணி. எனினும், அது சாத்தியமற்றது அல்ல என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பங்குச் சந்தையின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், அதனை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு காரணம் 2030ஆம் ஆண்டளவில் இலங்கை அதிக வருமானம் பெறும் நாடாக மாறிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சியை 6.5…
