Main News
ஹிருணிகாவை குறித்து பொலிஸார் அறிவிக்கவில்லை: சபாநாயகர்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்ய வேண்டிய தேவை இருப்பதாக பொலிஸார் இதுவரையில் தமக்கு அறிவிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஹிருணிகா பிரேமசந்திர தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் எனக்கு அறிவித்துள்ளனர். அண்மையில் தெமட்டகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் ஹிருணிகாவை கைது செய்ய வேண்டிய தேவை குறித்து இதுவரையில் அறிவிக்கவில்லை. பொலிஸார் முழு அளவிலான சுயாதீனத்தன்மையுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவார்கள்…
சர்வதேச விடுமுறையாகும் வெசாக் பௌர்ணமி தினம்!
இலங்கையில் பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமான தினங்களில் ஒன்றாக கருதப்படும் வெசாக் பௌர்ணமி தினம், சர்வதேச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் விடுமுறை தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் விடுமுறை தினமாக ஏற்றுக்கொள்ளபபட்டுள்ளது. அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 193 உறுப்பு நாடுகளும் கூடிய போது, வெசாக் பௌர்ணமி தினத்தை விடுமுறையாக அறிவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தீபாவளி பண்டிகை, பெரிய…
நான் முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்..
– இக்பால் அலி – 2015 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூhயில் ஆங்கில மொழியில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்றமாணவன் பழீல் முஹமட் ஆகீல் முஹமட் ஆகில் இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளர். இன்று வெளியான 2015 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர் தரப் பரீட்சை பெறு பேற்று அடிப்படையில் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூhயில் ஆங்கில மொழியில்…
நமது சமூகம் உயர்வான நிலையை அடைய, கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு அ.இ.ம.க வின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்கள் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற குருநாகல் மல்லியதேவ ஆண்கள் பாடசாலை மாணவன் முஹம்மத் அகீல் மற்றும் முசலி பிரதேசத்தின் கல்வி வரலாற்றில் முதன் முறையாக (3A) சித்திகளையும் அதிகூடிய z புள்ளியையும் பெற்று சாதனை படைத்துள்ள கலைப்பிரிவு மாணவி றிஸ்வினா…
மத்ரஸா கற்கைகளை நிறுத்துங்கள்
மத்ரஸா மற்றும் பள்ளிவாசல்களின் மூலமாகவே பயங்கரவாதம் பலப்படுத்தப்படுகின்றது. முஸ்லிம் அடிப்படைவாதத்தை பலப்படுத்தும் அனைத்து முஸ்லிம் செயற்பாடுகளுக்கும் உடனடியாக தடைவிதித்து முஸ்லிம்களை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடின் எந்த முறையிலாவது இதை நாம் தடுக்க வேண்டி வரும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் அடிப்படை வாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் மாறிவரும்போது நாம் இனவாதிகளாக மாறுவதில் தவறில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டது. பொதுபல சேனா அமைப்பினால் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அதன் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார…
ஹிருணிகா விவகாரத்தில் நான் தலையிடவில்லை
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர விவகாரத்தில் நான் எந்த விடயத்திலும் தலையிடவில்லை. அவ்வாறு பொலிஸ் விவகாரத்தில் நான் ஒருபோதும் தலையிடுவதில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார். எனது சொந்த ஊரில் கூட நான் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. எனது ஆதரவாளர்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தாலும் பொலிஸாரின் விவகாரத்தில் நான் தலையிடமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்…
சிறுபான்மை மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தேர்தல் முறைமை அமைய வேண்டும்
சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையிலான தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தேர்தல் முறைமை அமைய வேண்டும். பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து சிறுபான்மை கட்சிகளை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றன. இந்த நிலைமை குறித்து அனைத்து சிறுபான்மை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். நாடு முழுவதிலும் பரந்து வாழும்…
றிஷாத் பதியுதீனின் கரங்களை அனைவரும் பலப்படுத்துவது காலத்தின் கட்டாயம்
இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது கட்டாயமான சமூகக்கடமையாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் நடைபெற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன், சங்கைக்குரிய ஆனந்த சாகர தொலைக்காட்சி விவாதம் மூலம் அமைச்சர் ரிசாத் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டிருப்பதுடன் இது விடயத்தில் துணிச்சலாக தனது நியாயமான கருத்துக்களை முன் வைத்த அமைச்சர்…
கோட்டபாய குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை சந்தேக நபராக குறிப்பிடுவது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவினை மீறி, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு எதிரில் போராட்டம் நடத்தியமை தொடர்பான சம்பவமொன்றில், கோட்டபாயவை சந்தேக நபராக குறிப்பிட முடியுமா என்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பொலிஸார் நேற்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவினை மீறி பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில்…
வத்திக்கானில் பாப்பரசர் – மைத்திரி சந்திப்பு!
பாப்பரசர் பிரான்சிஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) வத்திக்கான் விசேட வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைக்குத் தான் விஜயம் செய்திருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட பாப்பரசர், உபசரிப்பும் நற்புறவும் நிறைந்த மக்களையும் இயற்கை அழகையும் கொண்ட ஒரு வளமான நாடு இலங்கை என ஜனாதிபதியிடம் தெரிவித்தார். இலங்கையின் ஐக்கியம் மற்றும் சகவாழ்வுக்காக ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சித் திட்டங்களுக்குத் தனது மகிழ்ச்சியை வெளியிட்ட பாப்பரசர், உலகில் இன்று இடம்பெறும்…
கடந்த அரசாங்கம் நச்சுப் பொருட்கள் கலந்த உரத்தையே வழங்கியது!– அதுரலிய தேரர்
கடந்த அரசாங்கம் நச்சுப் பொருட்கள் கலந்த இரசாயன உரத்தையே மானியமாக வழங்கியது என அதுரலிய ரதன தேரர் நேற்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உர மானியம் குறைக்கப்பட்டதாக குற்றம் சுமத்துகின்றனர். எனினும் கடந்த அரசாங்கம் இரசாயனக் கலவைகள் அடங்கிய உரத்தையே வழங்கியது. இவ்வாறு வழங்கிய உரத்தின் பாரியளவு வருமானம் வெளிநாடுகளுக்கே சென்றது. இந்த வகை உரங்களில் அதிகளவில் கெட்மியம் மற்றும் ஆசனிக் போன்ற நச்சு இரசாயன பதார்த்தங்கள் காணப்பட்டன. இவை மண்ணின் வளத்தை…
சாதிக்கு சமாதி கட்டிய, தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாத்
குப்பை அள்ளுவது, சாக்கடை சுத்தம் செய்வதெல்லாம் ‘தோட்டி’ களின் (கீழ் சாதி) வேலை என்று ஒரு மரபு இருந்தது தமிழகத்தில். அந்த மரபை உடைத்து சென்னையை சுத்தம் செய்கிறோம் என்று அறிவித்து 30000 இளைஞர்களை களத்தில் இறக்கியது தவ்ஹீத் ஜமாத். தமிழக அரசே என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கும் போது மள மள வென்று இளைஞர்கள் களத்தில் இறங்கினர். அவர்களோடு சேர்ந்து தமுமுகவும், எஸ்டிபிஐயும் துப்புரவு தன்னார்வலர்களை களத்தில் இறங்கியது. உடன் காட்சிகள் மாறத்…
