Main News
கல்வியின் மூலம் முஸ்லிகளின் தலையெழுத்தை மாற்ற முடியும்
கல்விதான் நமது சமூகத்தின் ஒரே ஒரு சொத்து. மாணவர்கள் அதனை அக்கறையுடன் கற்பதன் மூலமே முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை மாற்ற முடியுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் க.பொ.த சாதாரண தரத்தில் நாடாளாவிய ரீதியில் 9 ஏ தர சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சங்கத்தின் தலைவர் எம்.இஸட்.எம்.அஹம்மட் முனவ்வர் தலைமையில் பம்பலப்பிட்டி…
முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படாவிட்டால் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவேன்
வடக்கில் அடுத்த இரு வருடங்களுக்குள் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு அரசுக்கு எதிராகப் போராடுவேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் சூளுரைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (5) இடம்பெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சூளுரைத்த அவர் மேலும் கூறுகையில், எனக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம் எனவும், வன்னி அபிவிருத்தியில் என்னை இணைக்க வேண்டாம் எனவும் தமிழ்த் தேசியக்…
செலவைக் குறைத்ததால் 1400 மில்லியன் எஞ்சியது
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெளிவூட்டினார். அங்கு அவர் தெரிவித்ததாவது; 2014 ஆம் ஆண்டு வைபவங்கள் மற்றும் கூட்டங்களுக்காக 335 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு 34 மில்லியனே ஜனாதிபதி செயலகத்தின் செலவாகும். 301 மில்லியன் குறைவடைந்துள்ளது. மரணங்களின் போது அனுதாபம் தெரிவிப்பதற்காக 2014 ஆம் ஆண்டு 15 மில்லியன் செலவிடப்பட்டுள்ள அதேவேளை, 2015 ஆம் ஆண்டு 3…
ஓய்ந்தது பேய் மழை: வழமைக்கு திரும்புகின்றது சென்னை
சில நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தண்ணீரில் தத்தளித்து வந்த சென்னையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதுடன் பல பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து வருகிறது. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், மழை ஓய்ந்துள்ளதாலும் பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருகிறது. அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடந்த 2 நாட்களாக சைதாப்பேட்டை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், அடையாற்றில்…
முதற்தடவையாக பாராளுமன்றில் உரையாற்றும் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச முதற்தடவையாக நாடாளுமன்றில் தற்சமயம் உரை நிகழ்த்துகிறார். பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்திலே அவர் உரை நிகழ்த்துகிறார்.
கிரிக்கெட் தேர்தலில் பிரதித் தலைவர் பதவிக்கு அர்ஜுண
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க கிரிக்கெட் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கிரிக்கெட் சபையின் பிரதித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காகவே அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கிரிக்கெட் தேர்தல் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதோடு அமைச்சர் அர்ஜுண ரணதுங்க வேட்புமனு தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் முன்னாள் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உபாலி தர்மதாஸவும் கலந்துகொண்டுள்ளார். தலைமைத்துவதற்கு போட்டியிடுமாறு அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அதனை…
சவூதியில் இலங்கை பெண்ணுக்கு இன்று மரண தண்டனை – சுமந்திரன் எம்.பி.
முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று (04) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சவூதியில் 50பேருக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள போதும் இலங்கைப் பெண்ணின் பெயர் அதில் இருக்கவில்லை என்று நேற்று வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் துறை…
கோத்தபாயவிடம் மீண்டும் வாக்குமூலம்
ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இன்று முற்பகல் 9 மணியளவில் ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, கோத்தபாய சென்றார் இதேவேளை நேற்றும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த கோத்தபாய, வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம்
பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஊடக பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்றத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. கருணாரத்ன பரணவிதான இதற்கு முன்னர் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு 10.000 டொலர்கள் வழங்கிய சங்கா
இந்தியாவில் தமிழ் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கிரிக்கட் வீரர் சங்ககார 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளார். அத்துடன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.. இந்த மாண்புமிகு மனிதரை அனைவரும் வாழ்த்துவோம்..
“இன்னுமொரு பாபர் மசூதியை இடித்து விடாதீர்கள்”
“இன்னுமொரு பாபர் மசூதியை கண்டால் இடித்து விடாதீர்கள், ஆபத்து காலத்தில் நாம் தங்குவதற்கு உதவும்” முரளி முணிசாமி
இளமையும், துடிப்பும் கொண்ட தலைவராக றிஷாதை காணுகிறேன் – காசி சபருள்ளா
இளமையும், துடிப்பும் கொண்ட ஒரு அரசியல் தலைவராக அமைச்சர் றிஷாத் பதியுதீனை காணுவதாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ள பங்களாதேஷின் அவாமி லீக் ஆளும் கட்சியின் தலைமைத்துவ சிரேஷ்ட உறுப்பினர் காசி சபருள்ளா கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீனை நேற்று (03) வியாழக்கிழமை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் சூழல் இந்த நாட்டின் உண்மையான ஜனநாயகத்தினை எடுத்தியம்பும் ஒன்றாக காணமுடிந்ததாக…
