Main News
உழைக்கும் மக்கள் போராட்டம் நடத்துவதில் பிழையில்லை!– மஹிந்த ராஜபக்ச
உழைக்கும் மக்கள் போராட்டம் நடத்துவதில் பிழையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போது அதற்காக குரல் கொடுப்பது அவர்களின் உரிமையாகும். அதனை எந்த வகையிலும் பிழையாக கருத முடியாது. வேலை நிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்காதவர்கள் பற்றியே பிரச்சினை காணப்படுகின்றது. வரவு செலவுத்திட்டத்தில் எந்தவொரு தரப்பும் பிளவடைந்திருக்கப் போவதில்லை. எதிர்க்கட்சி எதிர்க்கட்சியேயாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலுத்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில்…
அமைச்சர் றிஷாத் – மலேசியா அமைச்சர்களுடன் சந்திப்பு
மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அன்னாட்டு சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் முஸ்தபா முஹம்மத் மற்றும் மலேசியாவின் பிரதமர் முஹம்மத் னஜீப் பின் துன் ஹாஜி அப்துல் ரசாகினையும் சத்தித்து கலன்துரையாடுவதையும்,வெளினாட்டு வர்த்தக அமைச்சருக்கு ஞாபகார்த்த சின்னம் ஒன்றினை வழங்குவதையும்,அருகில் இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர்,கலானிதி ஜெமீல் இருப்பதையும் படங்களில்
தாஜூதீன் கொலை; மஹிந்தவின் வாகன சாரதி விரைவில் கைது
முன்னாள் றக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார். சீசீடிவி கமரா மூலம் அடையாளம் காணப்பட்ட அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாஜூதீன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சீசீடிவி கமராவின் படங்கள் கிடைத்துள்ளன. இவை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவின் சாரதியாக இருந்த இராணுவ வீரர் உட்பட இதன் பின்னர் பலர் இந்த மரணம் தொடர்பில் கைது…
மஹிந்த ரெஜிமன்ட் முஸ்லிம்களை தாக்குகிறார்கள்
– அஸ்ரப் ஏ சமத் – பாராளுமன்றத்தில் ஊடக அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட விவாத்தின்போது பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க உரையாற்றும்போது பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக சில ராஜபக்ச ரெஜிமன்ட் உறுப்பினர்கள் தாக்குவதற்கு வந்துள்ளனா். கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தான் பாராளுமன்றதுக்கு வெளியில் வைத்து முஸ்லீம்களை எல்லாம் அடித்தீா்கள். அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்த பிறகு தற்பொழுது அந்த சண்டித் தணத்தை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வந்து முஸ்லீம் எம்.பிக்கு அடிக்க வருகின்றீா்கள். இதனை நாம்…
மாகாணசபைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி தீர்மானம்
மாகாணசபைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்றே எதிர்வம் 2016ம் ஆண்டிலும் மாகாணசபைகளுக்கு நேரடியாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டத்தில் மாகாணசபைகளுக்கு, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த யோசனைத் திட்டத்தை மாகாண முதலமைச்சர்கள் கடுமையாக எதிர்த்திருந்தனர். ஜனாதிபதி, நிதி அமைச்சர், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும்…
தனியார்துறைக்கு சம்பள உயர்வு; 2016ல் சட்டம் நிறைவேறும்!
தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பில் தொழில் அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு 2016ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், தோட்டத் தொழிலாளர்களுக்கும் உறுதியளித்தப்படி சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பாதனியவின் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்….
வசிம் தாஜுதீனின் கொலை; அநுர சேனநாயக்கவிடம் விசாரணை
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீனின் கொலை தொடர்பிலான சி.சி.டி.வி கமெராவின் காட்சிகள் தொடர்பில், அடுத்த 14 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ், கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு நேற்று (10) கட்டளையிட்டார். இந்த சம்பவம் தொடர்பிலான காட்சிகள் அடங்கிய இறுவட்டுகள் (சீடி) நான்கு, பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வாகனம், அங்கிங்கும் பயணம் செய்வதுபோன்ற காட்சிகளும் அதில் இருக்கின்றன என்று இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதேவேளை,…
அமைச்சர் றிஷாதோ, முஸ்லிம்களோ காட்டை அழிக்கவில்லை – ராஜித
-அஷ்ரப் ஏ சமத்- வாராந்த அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு நேற்று (10)ஆம் திகதி மு.பகல் 11.00 மணிக்கு பாராளுமன்றத்தில் அமைச்சா் டொக்டா் ராஜித்த சேனாரத்தினாவில் தலைமையில் நடைபெற்றது. இங்கு ஊடகவியலாளா் ஒருவா் கேட்ட கேள்வி – அமைச்சா் றிஷாத் பதியுதீனால் வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு மக்கள் குடியேற்றப்படுகின்றனா் அது பற்றி அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன ? இதனை நீங்கள் அறிவீா்களா ? அமைச்சா் டொக்டா் ராஜித்த பதில் – அவ்வாறு அந்த…
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக அமீர் அலி நியமனம்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். 08 ஆம் திகதி மாலை பிரதி அமைச்சா் அமீா் அலி மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நியமித்துள்ளார்.
ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திட தீர்மானம்
பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுவதில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பது தொடர்பான ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் இலங்கையும் கையெழுத்திடவுள்ளது. இந்த முக்கியமான பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவார். பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுதலை ஒரு மனித உரிமை மீறலாக இந்தப் பிரகடனம் வரையறுப்பதுடன், இதனை ஒரு குற்றவியல் நடவடிக்கையாக கருதும் வகையில் சட்டங்களை வகுக்கவும் உறுப்பு நாடுகளை வலியுறுத்துகிறது….
வசிம் தாஜூதீனின் கொலை வழக்கு தீர்ப்பு இன்று அறிவிக்கப் படாது
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீனின் கொலை தொடர்பாக, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரை விசாரணை செய்யுமாறு, நீதிமன்றம் குற்றப்புலனாய்வு அதிகாரிகளை பணித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், சந்தேகத்துக்கிடமாகவுள்ள இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வாசக்கின் தீர்ப்பு இன்று…
ஐக்கிய மலாய தேசிய அமைப்பின் பொதுக்கூட்டம்: அதிதியாக அமைச்சர் றிஷாத்
ஐக்கிய மலாய தேசிய அமைப்பின் (UMNO) வருடாந்த பொதுக்கூட்டம், இன்று (10) மலேசியா, கோலாலம்பூர், பியூட்றா உலக வர்த்தக நிலையத்தில் ஆரம்பமானது. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் இந்நிகழ்வில் அதிதியாக பங்கேற்றார். இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஜமீலும் கலந்துகொண்டார். உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும், பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
