Main News
உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுங்கள்- மஹிந்தவுக்கு அறிவுரை
தமது மகன் கைது செய்யப்பட்டமை காரணமாக மஹிந்த ராஜபக்ச தம்மீது அவதூறான குற்றங்களை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகளும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உங்களது மகன், யோசித்த ராஜபக்ச குற்றவாளியா? குற்றமற்றவரா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். எனினும் மகன் கைது செய்யப்பட்டமைக்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை தம்மீது சுமத்த வேண்டாம் என்று துலாஞ்சலி…
சிங்கள ராவய பிக்குகள் மஹர சிறைக்கு மாற்றம்
அண்மையில் ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் இரண்டு பௌத்த பிக்குகளும் மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இடப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் படல்கும்புரே ஆரியசாந்த ஆகிய தேரர்களே கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில்…
ட்ரம்பை வென்றார் டெட் குருஸ்
அமெரிக்க ஜனாதிபதிக்கான வேட்பாளர் தெரிவின் முதற்கட்ட தெரிவில் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து டெட் குருஸ் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் அயோவா பகுதியில் நேற்று முன்தினம் வேட்பாளர் தெரிவின் முதற்கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் குருஸ் 27.7 சதவீத வாக்குகளையும், டிரம்ப் 24.3 சதவீத வாக்குகளையும் பெற்றனர். அவர்களுக்கு அடுத்த நிலையில், மார்கோ ருபியோ 23.1 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இதனால் டெட் குரூஸை குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதில் எவ்வித சிக்கலும்…
எம்பிலிப்பிட்டிய விவகாரம்: ஏ.எஸ்.பி கைது
எம்பிலிப்பிட்டியவில் 29 வயதான இளைஞன், படுகொலைச்செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு ஆறு நாட்களுக்கு பின்னரே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஊழியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள்
உலகின் முதன் முதலாக ஊழியர்களுக்கு பதிலாக முற்று முழுதாக தன்னியக்க ரோபோக்களை வைத்து தாவர பண்ணையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய தொழிற்சாலையொன்று நேற்று (1) அறிவித்துள்ளது. கயோட்டோ பிராந்தியத்தில் கமியோகா நகரிலுள்ள மேற்படி தொழிற்சாலையானது கீரை வகையான இலைக்கோசு தாவர செய்கையை மேற்கொள்வதற்கான இந்த ரோபோ பண்ணையை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டின் மத்தியில் நிர்மாணிக்கவுள்ளது. 47,300 சதுர அடி பரப்பளவில் செயற்படவுள்ள இந்தப் பண்ணையில் ரோபோக்கள் தாவர விதைகளை நாட்டுதல், அவற்றைப் பராமரித்தல் மற்றும் அறுவடை செய்தல்…
சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினர் ஒத்திகை
இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரின் ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ளது. காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள இவ்வைபவத்திற்கான முப்படையினரின் ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், கொழும்பின் பிரதான மற்றும் குறுக்கு வீதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சவிற்கு ஆதரவாக குரல் எழுப்ப தயார்: மேர்வின் சில்வா
ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தான் கவலையடைவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கிராமத்தில் பிறந்தவன் என்ற விதத்திலேயே தான் கவலையடைவதாக முன்னணி வானொலியொன்றின் நேர்காணலின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனது கவலையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கவில்லை எனவும், தேர்தலுக்கு பின்னர் தான் இதுவரை அவருடன் கதைக்கவில்லை எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார். சட்ட விதிகளுக்கு முரணான வகையில் ராஜபக்ச குடும்பத்தாரை பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால், தான் அதற்கு…
இலங்கை யுவதியால் விராட் கோஹ்லிக்கு அவமானம்
சர்வதேச கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம் வாய்ந்த இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோஹ்லி கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் இக்கட்டான நிலைமை ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்காக அந்த நாட்டில் இந்திய அணி தற்போது தங்கியிருக்கும் நிலையில் கோஹ்லி தனது முகாமையாளருடன் அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றிட்கு காலை உணவை உட்கொள்ளச் சென்றிருந்தார். அவ் வேளையில் அங்கு வருகை தந்திருந்த இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் கோஹ்லியுடன்…
தண்டனை அனுபவிக்கத்தயார் ;மஹிந்த
தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவிக்கத் தயார் என்றும் மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பை தமது குடும்பத்தார் மீது காண்பிக்க வேண்டாம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் நேற்று காலை கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்னும் சில நாட்களில் என்னையும் அழைப்பர். நாமலையும் அழைப்பர். பஸில், மற்றும் கோத்தபாய ஆகியோரையும் அழைப்பர். நல்லாட்சியை…
ஜனநாயகக் கட்சி, ஐ.தே.க.வுடன் நாளை இணையும்
பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் தலைமையின் கீழ் உள்ள ஜனநாயகக் கட்சி, நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தேர்தல் கோரி நீதிமன்றம் செல்லும் மஹிந்த
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை விரைவில் நடத்தாவிட்டால், நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். உடனடியாக இந்த தேர்தலை நடத்துமாறு கோரப்படுகிறது. ஆனால் இது திட்டமிட்டே பிற்போடப்பட்டு வருகிறது. எனவே இந்த தேர்தல் விரைவில் நடத்தப்படவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடி அதனை நடத்த செய்யவிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் காலமானார்
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளரும் மற்றும் பல சமூக அமைப்புக்களின் முன்னிலை உறுப்பினருமாகிய முத்தையா கதிர்காமநாதன் இன்று (2) காலை காலமானார். இறுதிச் சடங்கு வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
