Main News
காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் அலங்காரக் கண்காட்சி
– ஊடகப்பிரிவு – கைத்தொழில், வர்த்தக அமைச்சும், சர்வதேச அபிவிருத்தி மூலோபாய அமைச்சும் இணைந்து நடாத்திய, காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் அலங்காரக் கண்காட்சியின் இறுதி நாள் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (07) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, கண்காட்சியில் பங்குபற்றிய காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான விருதுகளையும் வழங்கி வைத்தார். இங்கு உரையாற்றிய அமைச்சர் இவர்களின்…
வந்தடைந்தார் செயிட் அல் ஹூசைன்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை 8.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். டுபாயிலிருந்து வந்த ஈகே650 என்ற விமானத்தில் வந்த செய்ட் அல் ஹூசைனுடன் 6 பிரதிநிதிகளும் வருகை தந்தனர். நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள செயிட் அல் ஹூசைன் எதிர்வரும் 9 ஆம்திகதி வரை நாட்டில் தங்கியிருப்பதுடன் அரச தரப்பு, எதிர்த்தரப்பு, சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்டோரை…
யோசிதவிற்காக கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவி விலக முடியும்!- கிரியல்ல
யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமைக்காக கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் என அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சில் நேற்று (6) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முக்கிய பிரபு ஒருவரின் மகன் கைதானமையை தாங்கிக் கொள்ள முடியாத பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் எனவும் அதற்கு தடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்… பதவி விலகப்…
தமிழில் தேசியகீதம்! சிங்கள கல்விமான்கள், புத்திஜீவிகள் வரவேற்பு
சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை சிங்கள கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வரவேற்றுள்ளனர். காலத்துக்குத் தேவையான விடயமொன்று நடைமுறைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள் தமிழில் தேசிய கீதம் இசைப்பதை உண்மையான பௌத்தர் எவரும் எதிர்க்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை தொடர்பில் சிங்கள கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கருத்துத் தெரிவித்தபோது; இது எப்போதோ இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் தமிழில் தேசிய கீதம் இசைப்பதால் சிங்களவர்களுக்கு எதுவும் ஏற்படப் போவதில்லை. எதிர்க்க…
நாடு பூராகவும் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு
நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தைமுன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை(4) மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்
இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் 05 ஆம் திகதி (நாளை மறு தினம்) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தரவுள்ளார் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 09 ஆவது அமர்வில் பங்குகொள்ளும் பொருட்டே எதிர்வரும் 05 ஆம் திகதி வருகைதரவுள்ள இவர் 06 ஆம் திகதி வரையான இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார். இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவுக்கு இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள…
பதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளை, ஜம்இய்யத்துல் உலமாவும் வழங்கும்
கில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களிலுமுள்ள துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உலமாக்களிடமிருந்து புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் மூலம் இந்தப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்களை உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உலமா சபையின் கிளைகளின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார். நாடெங்குமுள்ள உலமா சபைகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஆலோசனைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு அரசியல் யாப்பு வரைபுக்…
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 145 பேர் தாயகத்திற்கு வருகை
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்த சிலர் இன்று (3) நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு வருவோரில் 145 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த இலங்கையர்களில் 100 பெண்கள் அடங்குகின்றனர். அத்துடன், டுபாய் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து மேலும் 30 பேர் வருகை தந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவிலிருந்து 15 பேரும் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பியவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள்…
எம்பிலிபிடிய சம்பவம் : ஏ.எஸ்.பி விளக்கமறியலில்
எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திரதின நிகழ்வில் த.தே.கூட்டமைப்பு பங்கேற்கிறது
இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை (4) காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பார்களென கூட்டமைப்பின் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்
யுத்தக்குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் அமைவான விசாரணை நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு வேண்டியதில்லை. இதற்கு ஒரு போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பங்களிப்பு வழங்காது. இவ்விடயம் தொடர்பில் எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதியும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இவ்வார இறுதியில் ஜக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கான விஜயத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தின் கீழ்…
பஷில் ராஜபக்ஷ ஆஜர்
முன்னால் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு முன் வாக்குமூலம் வழங்க ஆஜர்.
