Main News
முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்
கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களுக்காக வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் அனைத்தும், இன்னும் அரசாங்கத்திடம் ஒப்படைக்காத நிலையில், அவர்களுடைய பெயர் விவரங்களை எதிர்வரும் நாட்களில் ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியினர் தெரிவித்துள்ளனர். குறித்த முன்னணியின் தலைவரால் இந்த பெயர்ப்பட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த கையொப்பமிட்டார்
சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
நாளை ஞானசாரவின் வழக்கு; சட்டம் தனது கடமையை செய்யும்
ஞானசார தேரரின் கைது தொடர்பாக பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தில் எதுவித தாக்கங்களும் ஏற்படாமை பொதுபல சேனா அமைப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவ்வமைப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் எமக்கு அறியக்கிடைத்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தலை எதிர்கொண்ட பொதுபல சேனா மூக்குடைத்து கொண்டது. அதனை தொடர்ந்து சிறிது துவண்டு போன பொதுபல சேனா ஞானசார தேரரின் கைது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்திருந்தது. இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஞானசார…
றிஷாத் பதியுதீன் பவுன்டேசன்; கொழும்பு முஸ்லிம் மாணவா்கள் கல்வி ஊக்குவிப்பு
– அஸ்ரப் ஏ சமத் – அமைசச்சா் றிஷாத் பதியுதீன் பவுண்டேசனினால் கடந்த (6) ஆம் திகதி கொழும்பு புதுக்கடை சந்தியில் கொழும்பு வாழ் 500 மத்ரசா மாணவா்களுக்கிடையே பேச்சு மற்றும் குர்-ஆன் மனனம் கசீதா, ஆங்கில சிங்கள பேச்சுத் திறன்களை வெளிப்படுத்தி போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தப்பட்டது. அதில வெற்றி பெற்ற சகல மாணவா்களுக்கும் அமைச்சா் றிஷாத் பதியுதீன், பிரதியமைச்சா் அமீா் அலி ஆகியோாினால் சின்னங்களும் சான்றிதழ் அப்பியாசப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கொழும்பு பல்கழைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளா்…
நாளை பிரியங்கரவிடம் விசாரணை
இலங்கை விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாளை (9) அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் இலங்கை கென்டரின் நிறுவனம் மற்றும் இலங்கை விமான நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காகவே அவர் நாளை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த மோசடி தொடர்பில் கடந்த வருடம் இராஜாங்க அமைச்சர் பிரியங்க ஜயரத்னவிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு , குறித்த…
கடந்த அரசிற்கு ஐ.நா நன்றி தெரிவிக்க வேண்டும்
கடந்த அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு நன்றி தெரிவிக்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹொரணையிலுள்ள விஹாரை ஒன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது புலம்பெயர்ந்தவர்களின் தேவைக்கு ஏற்பவே செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மைக்காக சிறைக்குச் செல்லவும் தயாரென அவர்…
என்னையும் விரைவில் கைது செய்வார்கள்! ஹம்பாந்தோட்டையில் நாமல்
அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் என்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க தாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர என்ற இடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய நாமல், அரசாங்கத்தினால் பொதுமக்களை திருப்திப்படுத்த முடியாமல் போயுள்ளது. எனவே தான் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்துள்ளது என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார். பழிவாங்கல் நடவடிக்கையாகவே தமது சகோதரர் யோசித்தவும் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி செல்கிறார் ஐ.நா ஆணையாளர்
செயிட் அல் ஹூசைன் இன்று (8) கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளார். குறித்த விஜயத்தின்போது அவர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் செல்லவுள்ளதோடு, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களையும் சந்திக்கவுள்ளார். அதனையடுத்து,ஐ.நா ஆணையாளர் கொழும்பிற்கு விஜயம் செய்து பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோரை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேசவுள்ளார். பின்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கத்தர்களுடன் மதிய விருந்தில் கலந்துகொண்டு மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆணைக்குழுவினருடன் கலந்துரையாடவுள்ளார். அதனையடுத்து இன்று மாலை…
இரட்டைப் பிரஜாவுரிமை அனுமதிக்கு அரசு அங்கீகாரம்
இலங்கை அரசாங்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கைகள் மீண்டும் துரிதமாக இடம்பெறுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார். 750 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே பிரஜாவுரிமை வழங்கப்படும் என்றும் அவர் ஊடகங்களுக்கு கூறினார். விண்ணப்பித்தவர்களில் 3500 பேருக்கு இதுவரை இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் மேலும் 750 பேருக்கு வழங்குவதற்கான அனுமதியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். போரினால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமை…
சிங்க லே அமைப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது!– மல்கம் ரஞ்சித்
சிங்க லே அமைப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தலைமையிலான அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் கர்தினலை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… மக்களை ஒன்றிணைக்க முழுக் கவனம் செலுத்தப்பட வேண்டிய தருணத்தில் மக்களை பிளவடையச் செய்யும் சிங்களே போன்ற அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மக்களை பிளவடையச் செய்யும் இந்த நடவடிக்கையை நல்ல நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து இன மக்களையும்…
சிங்க லே அமைப்புக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
சிங்க லே அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பனவற்றுக்கு நீதிமன்றத்தில் பொலிஸார் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பெற்றுள்ளனர். இந்த தடை உத்தரவை பதுளை நீதிமன்ற மேலதிக நீதவான் ஆர்.எம்.பி.சீ. ரத்நாயக்க பிறப்பித்துள்ளார். பண்டாரவளையிலிருந்து பதுளை நோக்கி வாகனப் பேரணியில் வந்து நேற்று (7) மாலை முதியங்கன ரஜமகா விகாரையில் கூட்டமொன்றை நடாத்த சிங்க லே அமைப்பு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை வைத்து பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றுள்ளதாகவும்…
சரத்பொன்சேகா நாளை எம்.பி. யாக பதவியேற்பு
ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இதேவேளை இவருக்கு “படையினர் நலன்புரிகள் அமைச்சர் ” பதவி வழங்கப்படும் என்றும் அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி கடந்த மூன்றாம் திகதி புதன் கிழமை இணைந்து கொண்டது. இது தொடர்பான இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு…
