Main News
சரணடைந்த பிக்குகள் அடையாள அணிவகுப்பு
ஹோமாகம பொலிஸில் சரணடைந்த நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பல தேரர்களுக்கு ஹோமாகம நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்தவகையில், ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன, மெதிரிகிரிய புஞ்ஞாசார மற்றும் பஸ்ஸர நந்தஜீவ…
இன்று நீதிமன்றத்தில் ஞானசார தேரர்
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரதான பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர், இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பாக கடந்த 9 ஆம் திகதி பிணை வழங்கபட்ட போதிலும், அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக மீண்டும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு நிதிக்கான வங்கி வைப்பில் சிக்கலில்லை
வெளிநாட்டு நிதியை இலங்கையின் வங்கிகளில் வைப்பிடும் போது, புதிய சட்டத்திட்டங்கள் அமுலாக்கப்படுவதாக கூறப்படும் செய்தி மறுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். புதிதாக இவ்வாறான சட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறி இருந்தார். இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மத்திய வங்கியின் நிதி நுண்ணறிவு பிரிவின் பணிப்பாளர் எச். அமரதுங்க, வெளிநாட்டு நிதியை இலங்கையின்…
23 ஆம் திகதி அமைச்சராகும் பொன்சேகா
– லியோ நிரோஷ தர்ஷன் – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிவழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். வடமத்திய, மத்திய மற்றும் ஊவாக மாகாணங்களுக்கான மாநகர அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். (vk)
நட்பு ரீதியான கப்பலுக்கு அமோக வரவேற்பு
ஜப்பான் நட்பு ரீதியான கப்பல் நான்கு வருடங்களின் பின்னர் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 243 பேர் இந்த கப்பலில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல் 28ஆவது தடவையாக கடந்த மாதம் 28ஆம் திகதி ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. இதன்படி, இந்த கப்பலில் வருகைத் தந்திருந்த இளைஞர் யுவதிகளை நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கப்பலுக்கு சென்று சந்தித்து கலந்துரையாடல்களை…
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் எவ்வித காரணங்களுமின்றி மூடப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை என பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 15000 திற்கும் அதிகமான மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் அமில சந்தரூவன் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் கடமையாற்றவில்லை என தெரிவித்து ஜனவரி மாதம் 22ஆம் திகதி இந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டதாகவும், எனினும், ஊழியர்கள் சாதாரண பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் அனைத்து…
கோத்தாவை கைது செய்ய பணிப்புரை கிடைக்கவில்லை! பொலிஸார் தகவல்
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஸவை கைது செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்திடமிருந்து பணிப்புரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்வேறு ஊடகங்களும் கோத்தாபாய விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று செய்திகளை சூசகமாக தெரிவித்திருந்தன. இந்தநிலையிலேயே, பொலிஸ் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள முக்கியஸ்தர்களுக்கான அறைகள் திருத்தப்படுவதாக வெளியான செய்திகளுடன் கோத்தாபாயவின் கைது விடயமும் பேசப்பட்டது. எனினும், கோத்தாபாய விரைவில் கைது செய்யப்படுவதற்கான பணிப்புரை கிடைக்கவில்லை என பொலிஸ் திணைக்கள அதிகாரி ஒருவர்…
ஜெயலலிதாவுக்கு அடிபணியமாட்டோம்
ஜெயலலிதாவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய தாம் தயாரில்லை. இந்திய மீனவர்களை மனிதாபிமானத் துடன் விடுதலை செய்வோம். ஆனால் படகுகளை மீளக் கையளிக்கமாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்திய மத்திய அரசுடனேயே பேச்சு வார்த்தை நடத்துவோம். தமிழகத்துடன் “பேச்சு” என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கடற் தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்பில் அத்துமீறி ரோலர்கள் மூலம் மீன் வளங்களை…
எனது பதவியை பறித்துக்கொண்டார்: ராஜபக்ஸ
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை தன்னிடமிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை பயன்படுத்தி பறித்துக்கொண்டதாக மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். நீர்கொழும்பு ,கொச்சிக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் ஒருபோதும் சுதந்திர கட்சியின் தலைமை பதவியை தானம் செய்யவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தனது தலைவர் பதவியை பறித்துக் கொண்டார் என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லசந்த கொலை தொடர்பில் மேலும் 10 பேரிடம் விசாரணை
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தொடர்பில் மேலும் பத்து பேரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர். நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உயிரிழந்த பிச்சை ஜேசுதாசன் வசித்து வந்த கிராம சேவைப் பிரிவில் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜேசுதாசனுடன் தொடர்புகளைப் பேணியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது….
வரதட்சணைக்கு எதிராக ஜே.வி.பி களத்தில்
இலங்கையில் திருமணங்களின் போது வரதட்சணை முறைமை முற்று முழுதாக ரத்து செய்யப்பட வேண்டுமெனவும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை இல்லாமல் செய்யும் எக்டா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படக் கூடாது எனவும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று (14) பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கி வரும் கல்வி, தொழில் இல்லா பிரச்சினையுடன் காதல் பிரச்சினையும் காணப்படுகின்றது. பணம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது….
சிறப்பு வலய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள யோஷித!
சி.எஸ்.என். தொலைக்காட்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதி விசேட வலயமாக்கப்பட்டுள்ளது. யோசித உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் அகற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.என்.சீ.தனசிங்க தெரிவித்துள்ளார். இந்த சிறைப்பகுதிக்கு அருகில் உள்ள சிறையில் இருந்து கையடக்கத்தொலைப்பேசி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதுவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யோசித உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும்…
