Main News
“அடுத்த சில வாரங்களில், ஆச்சரியப்படும் தீர்மானங்கள்” – முக்கியஸ்தர்கள் கைதாகும் வாய்ப்பு
புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில் மக்கள் ஆச்சரியப்படும் தீர்மானங்கள் நீதிமன்றத்தில் எடுக்கப்படலாம் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை ஊழல், மோசடிகள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளதுடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் நியமிக்கப்படாமல் இருந்ததால், விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. புதிய சட்டமா…
ஜனாதிபதி மைத்திரி ஜேர்மன் நோக்கி பயணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜேர்மனுக்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி இன்று (15) ஜேர்மனுக்கு செல்லவுள்ளார். ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மோர்கலின் அழைப்பை அடுத்தே இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ்…
தௌஹீத் ஜமாஅத்தை கொச்சைப் படுத்திய சிங்கள பாடகர் மீது விசாரணை
பிரபல சிங்களப் பாடகரான ஹிராஜ் மீது பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிராஜினால் அண்மையில் வெளியிடப்பட்ட ”மனுசதா” என்ற பாடல் தொடர்பிலேயே இந்த விசாரணை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை விசாரிக்குமாறு (11) கொழும்பு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத்திற்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் செய்யப்பட்ட வழக்குத்தாக்கல் மீதான விசாரணை நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே ஹிராஜ் மீதான விசாரணைக்கான…
நியூஸிலாந்து பிரதமர் இலங்கை வருகிறார்
நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23ம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கையிலுள்ள நியூஸிலாந்து தூதரக பேச்சாளர் ஒருவர் கூறினார். நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ 03 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க உள்ளதுடன் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். நியூசிலாந்து முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்ற விவசாய வேலைத் திட்டங்களை நியூஸிலாந்து பிரதமர் ஆரம்பித்து வைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர இலங்கையிலுள்ள நியூஸிலாந்து…
இந்தியாவுக்கு பயணமானார் ரணில்
தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு ரணில் விக்கிரமசிங்க இன்று (12) காலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் இன்று மதியம் நாடு திரும்பக் கூடுமென்று எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குவைட் பயணம்
கொழும்பு மாவட்ட மாவட்ட அபிவித்தி குழு இணைத் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (11) பிற்பகல் குவைட் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குவைட் நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி கிளையினரின் அழைப்பின் பேரிலேயே இரு நாள் விஜயமொன்றிணை மேற்கொண்டிருக்கும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. நாளைய தினம் நாடு திரும்பவுள்ளார். இந்த விஜயத்தின்போது குவைட் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள கட்சியின் விரிவாக்கள் நடவடிக்கைகள்…
இன்று மஹிந்த புதிய அலுவலகம் ஆரம்பிக்கிறார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று (12) ஆரம்பிக்கப்படவிருக்கிறது. பத்தரமுல்லை, ஜயந்திபுர, நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்படவுள்ள இந்த நிகழ்வில் கூட்டு எதிக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிப்பு
கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இரத்தினபுரி, மன்ததெனிய பிரதேச நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு 17 வருடமாக இடம்பெற்று வந்த நிலையில் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹோமாகம மற்றும் அநுராதபுரம் பகுதிகளை சேர்ந்த இருவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
70 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலையில் 70 அத்தியாவசிய மருந்துப் பொருள் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக மருந்துப்பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. புற்று நோய், சிறுநீரக நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கான 70 வகை அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மருந்துப்பொருள் இறக்குமதி செய்வதற்கு விலைமனுக் கோரல்கள் உரிய நேரத்தில் அனுப்பி…
குற்றவாளியாக காணப்பட்ட பின்னரே யோஷித கைது செய்யப்பட்டுள்ளார்
ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யவே மக்கள் எமக்கு இருமுறை ஆணை வழங்கினார்கள். கடந்த ஒருவருட காலமாக நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் யோஷித ராஜபக் ஷ குற்றவாளியாக இனம்காணப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். தோப்பூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் யோஷித ராஜபக்ஷவின் கைது தொடர்பாக கருத்துவெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய…
நகரப்புற சிறைச்சாலைகளை கிராமங்களுக்கு மாற்ற நடவடிக்கை
நகர பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளை, கிராமப்புறங்களுக்கு மாற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கிராமங்களுக்கு மாற்றப்படும் சிறைச்சாலைகள், திறந்தவெளி சிறைச்சாலைகளாக செயற்படும் என அமைச்சின் செயலாளர் வி. சிவஞானஜோதி குறிப்பிட்டார். திறந்தவெளி சிறைச்சாலையில், குற்றவாளிகளை மீண்டும் குற்றமிழைக்காதவர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவ்வாறான சிறைச்சாலைகளில் சுகாதார வசதிகள் மற்றும் பராமரிப்புகளை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் காரணமாக சிறைச்சாலை அறைகளுக்குள்ளேயே கைதிகள் இருக்கவேண்டிய தேவை ஏற்படாது எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின்…
ஸிகா வைரஸ் தொடர்பில் விமானநிலைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்
ஸிகா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர் நாட்டிற்குள் பிரவேசித்தால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விமானநிலைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக சுகாதார தரப்புகளுக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளரான விசேட நிபுணர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். பிரேஸில் உள்ளிட்ட அதன் அயல் நாடுகளில் ஸிகா வைரஸ் வேகமாக பரவியிருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், ஆயினும் இலங்கையில் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தொற்றுநோய்…
