Main News
மஹிந்த அரசியல் அநாதையாவார்
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவ ட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுத்துள்ள அரசியல் பாதை தவறானது. அவர் சுதந்திரகட்சியில் உள்ள சிரேஷ்டத்துவத்தை இழந்து அரசியல் அநாதையாகப் போவதையிட்டு வருந்துகின்றேன் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்தவையும் ஷிராந்தியையும் கைது செய்ய வேண்டும்
சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனம் அரசுடைமையாக்கப்பட வேண்டும். யோஷிதவை கைதுசெய்வதற்கு முன் அவருக்கு வழி காட்டிய மஹிந்த ராஜபக்ஷ வையும் ஷிராந்தியையுமே கைதுசெய்திருக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணி யின் தலைவரும் மத்திய மாகாணசபை உறு ப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் மீண்டும் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியினர் தலைதூக்க பொலிஸார் இடமளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார். அதிகாரத்ததை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து…
சிறைச்சாலையில் ஞானசாரர் – மஹிந்த சந்திப்பு
சிறை வைக்கப்பட்டுள்ள ஞானசாரருக்கும், மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே இன்று (17) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஸவை பார்வையிடச் சென்ற வேளையிலேயே மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு ஞானசாரரையும் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார்.
லசந்தவின் கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் தகவல்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த புகைப்படத்தில் உள்ள நபர் 35 வயதானவர் என்றும் 5 அடி 8 அங்குலம் உயரமான நபர் என்றும் சாம்பல் நிற கண்களும், வெள்ளை நிற மேனியுமான நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மற்றுமொரு நபர் தொடர்பிலும் பொலிஸார் ஓவியமாக வரையப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளனர். 40 வயதான மேற்குறிப்பிட்ட நபர் 5 அடியும்,10 அங்குலமும் உடைய…
யோசித்தவின் மீளாய்வு மனு பரிசீலணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் மீளாய்வு மனு எதிர்வரும் 29ம் திகதி பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரும் சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்த உயர்நீதிமன்றத்துக்கு வருகை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்தவின் இரண்டாம் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் கடுவலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் யோஷித்தவின் விளக்கமறியல் காலத்தை தொடர்ந்தும் நீடித்துள்ளது. இந்நிலையில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் பிணைமனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள…
மஹிந்தவுக்கு மனிதாபிமானமென்றால் என்னவென்றே தெரியாது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது. எமது அரசியல் பயணத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் சர்வாதிகார ஆட்சியொன்று ஸ்தாபிக்கப்பட்ட போதும் மக்கள் அதன் நீண்டகால பயணத்திற்கு அனுமதியினை வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட நல்லாட்சியின் பிரதிபலனையே இன்று மூவின மக்களும் பயன்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்hடர். பிரபல அரசியல் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவருமான படுகொலை…
இலங்கை வரவுள்ள நியூஸிலாந்துப் பிரதமர்
நியூஸிலாந்துப் பிரதமர் ஜோன் கீ இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை வரும் ஜோன் கீ, ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, உள்ளூரிலுள்ள வர்த்தகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.
தொட்டலங்கவில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது
தொட்டலங்க பிரதேச மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் களைக்கப்பட்டதையடுத்து, தொட்டலங்கவிலுள்ள ஜப்பான் – இலங்கை நட்புறவு பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. தொட்டலங்க பிரதேசத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பிரதேச மக்களால் நேற்று (16) மாலை முதல் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது ஜப்பான் – இலங்கை நட்புறவு பாலத்தை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் நேற்று மாலை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், இன்று காலையும் பாரிய வாகன…
மஹிந்த – மைத்திரி மோதல் உக்கிரம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் மூண்டிருந்த சொற்போரானது யோஷித ராஜபக்ஷவின் கைதையடுத்து உக்கிரமடைந்துள்ளது. அரசியல்,பொது மேடைகளில் இருவரும் சராமரியாக விமர்சனக்கணைகளைத் தொடுத்துவருகின்றனர். பதிலடிகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. மஹிந்தவின் அமைச்சரவையில் இருந்து மைத்திரிபால சிறிசேன வெளியேறி பொதுவேட்பாளராக களமிறங்கியது முதல் இருவருக்குமிடையில் சொற்போர் வெடிக்கத் துவங்கியது. எனினும், பகிரங்கமாக – வெளிப்படையாக விமர்சனம் முன்வைக்கப்படவில்லை. ‘முன்னாள் ஆட்சியாளர்கள்’ என்ற சொற்பதத்தை பயன்படுத்தி மைத்திரியும், ‘முட்டை அப்பம்’ கதையைக்கூறி மஹிந்தவும் நேரடியாக அன்றி மறைமுகமாகவே…
முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றியிலேயே தமிழ்-முஸ்லிம் உறவு தழைக்கும்
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றியின் மூலமே தமிழ் – முஸ்லிம் உறவு மீண்டும் தழைத்தோங்க வாய்ப்பு உண்டு என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசத்தின் ஆள்காட்டிவெள பூமலர்ந்தான் காக்கையங்குளம் ஹபீப் நகர் அல் மதீனா மணல்மூட்டை டி வர்ணபுர பாலைப்பெருமாள்கட்டு புளியங்குளம் ஆகிய கிராமங்களில் அபிவிருத்தி திட்டங்களையும்இ மக்கள் நல்வாழ்வுப் பணிகளையும் அமைச்சர் றிசாத் இங்கு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அவர் அங்கு இடம்பெற்ற கூட்டங்களிலும் உரையாற்றினார். அமைச்சர் இதன்போது கூறியதாவது அரசியல்…
கொழும்பில் தொடரும் போராட்டம்: மக்கள் பெரும் அவதி!
தொட்டலங்க பகுதியில் நேற்று (16) மாலை மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொட்டலங்க ஜப்பான் நட்புறவு பாலத்தை மறித்து அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். தொட்டலங்க பிரதேசத்தில் அனுமதியற்று கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பிரதேச மக்கள் நேற்று முதல் இவ்வாறு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் நேற்று மாலை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், இன்று…
